Saturday, November 27, 2021

தாம்பத்யம்...

 *கேரளாவில் ஒதுக்குப்புறமா ஒரு ஊரு. அங்க 8 சென்ட்டுக்கு நடுவுல
மூன்று சென்டுல ஒரு வீடு.*

*இந்த வீட்டுக்கு பக்கத்து வீடு எங்க வீடு. பக்கத்து வீடுன்னு  சொல்லக்கூடாது. சரியாச் சொல்லணும்னா அடுத்த வீடு.*

அந்த வீட்ல 
*ஒரு வயதான தம்பதிகள்*. *அவங்கள  தேடி* 
*யாரும் வந்த மாதிரி இல்ல.* 
பசங்க எல்லாம் *வெளிநாட்டில இருப்பாங்க போல.* 
நாங்க புதுசா கல்யாணம் ஆன 
*இளம் ஜோடி*. 
இனிமே தான் குழந்தை. 

வார நாட்களில் 
எங்க ரெண்டு பேருக்கும் 
வேலைக்கு போய்ட்டு வரவே 
சரியா இருக்கும்.

*எப்படியோ எங்களுக்குள்ள பழக்கம் ஆகி ஒவ்வொரு sunday ஈவினிங்கும் அவங்க நந்தவனத்தில் தான் எங்களுக்கு காபி*.

*காபி குடித்து விட்டு ஒரு மணி நேரம் பேசிய பின்பு தான் வீடுதிரும்புவோம். நல்லா ரிலாக்ஸ்டா இருக்கும்.*

*அந்த சில்லென்ற குளிரில் அவசரம் இல்லாமல் காபியை குடித்துவிட்டு அவர்களுடன் பேசிக்கொண்டிருப்பதில் ஒரு தனி சுகம்.*

ஒவ்வொரு *ஞாயிற்று கிழமையும்* அவங்க வீட்டுக்கு போகும் போது. 
*காபி டப்பா மூடியை திறக்க முடியாம அந்த பாட்டி, தாத்தா கிட்ட கொடுத்து திறக்க சொல்வாங்க.*

தாத்தாவும் மீசையை *ஸ்டைல முறுக்கி விட்டுகிட்டு ஒரு வெற்றி சிரிப்புடன் திறந்து கொடுப்பார்*.  

*பாட்டி ஒரு நமட்டு சிரிப்புடன் அடுப்பங்கரைக்கு போயிருவாங்க.* 

இத ரெண்டு மூனு வாரம் பாத்துட்டு, போன வாரம் போயிருந்தப்ப *பாட்டிக்கு மூடியை ஈஸியா தொறக்குற மாதிரி ஒரு கருவி device வாங்கி கொடுத்தோம்.*

இந்த வாரமும் வழக்கம் போல் 
*எங்கள் ஞாயிறு மாலை visit.* 
வழக்கம் போல் 
*காபி டப்பாவுடன் தாத்தாவை அணுகினார் பாட்டி.* *தாத்தாவும் இறுமாப்புடன்* 
*திறந்து கொடுக்க,* 
பாட்டி உள்ளே சென்றார்.

பாட்டி உள்ளே செல்ல, 
என் மனைவியும் பின் சென்று.. 
*"பாட்டி, ஏன் அந்த கருவியை device use பண்ணி நீங்க டப்பாவை திறக்கல. மறந்துடீங்களானு"*
கேட்க …

*பாட்டி சிரித்துக்கொண்டே கூறியது தான் இந்த கதையின் ஹைலைட்!*

"குழந்தே, 
*இந்த மூடியை திறக்க எதுவும் தேவை இல்லை*. 
*நானே திறந்திருவேன்*. 
*அவர நான் திறக்க சொல்றதுனாலே அவருக்கு என்னைவிட பலசாலின்னு ஒரு பெருமிதம்.* சந்தோசம்.

*இந்த வீட்டு ஆம்பிளைனு ஒரு கெத்து.* இன்னும் நம்ம இந்த வீட்டுக்கு *உபயோகமா இருக்கோம்* என்ற 
*ஒரு மகிழ்ச்சி*. நான் இன்னும் 
*அவரை சார்ந்து  இருக்கேன்னு* 
அவருக்கு ஒரு *ஆளுமை.*

*திருமண வாழ்க்கையின் அடிப்படையே ஒருமித்து வாழ்வது தானே*. 
இன்னும் *வாழப்போறது* 
கொஞ்சநாள் தான். 
*யாரும் யாருக்கும் பயன் இல்லாமல் இருக்கோமென்ற நினைப்பு இல்லாமல் ஒருமித்து சந்தோசமா வாழனும். அதுக்குத் தான் இந்த நாடகம்"னு* சொன்னாங்க.

கொஞ்ச நேரம் 
என்னால ஒன்னும் பேச முடியல. 
*இந்த மூடியில இவ்வளவு விஷயமா?*

வயசானவங்களை underestimate பண்ணக்கூடாது. 
*அவங்க செயல்களிலும் அர்த்தம் இருக்கு. தன்னாலே யாருக்கும் பிரயோஜனம் இல்லைனு ஒரு நெனப்பு யாருக்கும் வரக்கூடாதுன்னு எவ்வளவு அழகா சொல்றாங்க. செய்றாங்க.*

இந்த பாடம் எல்லாம் 
*எந்த பள்ளிக்கூடத்திலும் சொல்லிக்குடுக்க மாட்டாங்க.*

இந்த மாதிரி தாத்தா பாட்டிகளை பார்த்து தான் கத்துக்கணும். 
*அதுக்கு அவங்க* 
*நம்மளோட இருக்கணும்*. 
தாத்தா,பாட்டியோடு *வாழ்வது வரம்* என்றால் பேரன்,பேத்தியோடு *வாழ்வது கொடுப்பினை..*

📣📣📣📣📣📣📣📣📣📣📣📣

*Join in any one of the groups for more good messages*

https://chat.whatsapp.com/Bz7qu3JSsRYAIAUbocGwN8

https://chat.whatsapp.com/1IcTKhiv9czDGiunpgoiFv

https://chat.whatsapp.com/2wiKkZqq3PVHXLlxbiO43p

https://chat.whatsapp.com/DfKs20LdadXHInzLoFUoL2

https://chat.whatsapp.com/Ft7JdeEMa1lJbXUkwdXa9Z

*To read the earlier messages click below* (ஏற்கனவே பதிவிட்ட பதிவுகளை வாசிக்க கீழே கிளிக் செய்யவும்)

*Visit the blog*

https://trendsintamilnadu.blogspot.com/?m=1

*Download the App*

https://play.google.com/store/apps/details?id=com.my.trendsintn

*Click below for Spoken English*

https://spokenenglishwithmartin.blogspot.com

No comments: