Thursday, June 8, 2017

பிளாஸ்டிக் பற்றிய குறுந்தகவல் : அறிவோம் அறிவிப்போம்

நாம் மெதுவாக நகர்ந்து பிளாஸ்டிக்கை உணவாக உண்ட கதை...
அப்பச்சி வைத்திருந்த மஞ்சப்பை எல்லாம் பிளாஸ்டிக் பையானபோது நாம் கலங்கவில்லை.
செவ்வந்தியும் சாமந்தியும் தவழ்ந்த பூஜை அறைகளில் பிளாஸ்டிக் பூக்கள் கடவுள்களை அலங்கரித்த போது நாம் பதறவில்லை.
அத்தனை சூட்டையும் தாங்கிய  வாழையிலை, ஹோட்டல்களில் பிளாஸ்டிக் இலைகளாக மாறியபோது நாம் கவலைப்படவில்லை.
பார்சல் டீ காபி வாங்க கூஜாவை தூக்கிக் கொண்டு அலைவதை அவமானமாக பார்த்து, பிளாஸ்டிக் பையில் டீ வாங்கிய போது நாம் அதை உணரவில்லை.
நிமிர்ந்து குடிக்கிற இளநீரை வசதிக்காக பிளாஸ்டிக் ஸ்ட்ரா போட்டு குடித்தபோது நமக்கு அது பெரிய விஷயமாக இல்லை.
இலைதழை தின்று கொண்டிருந்த ஆடு,மாடுகள் பிளாஸ்டிக்கை மென்று விழுங்கியபோது நமக்கு எந்த குற்ற உணர்வுமில்லை.
மண்பானையையும், எவர்சில்வரையும் ஒதுக்கிவிட்டு, பிளாஸ்டிக் குடங்களில் நீர்பிடித்தபோது நமக்கு எந்த வலியுமில்லை.
ஒவ்வொருநாளும் கொட்டுகிற குப்பைகளில் 90 சதவீதம் பிளாஸ்டிக் பொருட்களாய் இருந்தபோதும் நமக்கு எந்த பதற்றமுமில்லை.
இப்போது அரிசியில்தானே பிளாஸ்டிக் வந்திருப்பதாக சொல்கிறார்கள். பதற வேண்டியதில்லை. நம்முடைய மூளை பிளாஸ்டிக் ஆகிறவரை ஏதும் பிரச்னையில்லை !
நிரூபிக்கப்பட்ட ஆய்வுக்கு பின் மருத்துவர்கள் சங்கம் கூறுகின்ற புற்று நோய்க்கான முக்கிய காரணங்கள் இவை:
1. பிளாஸ்டிக் கப்புகளில் டீ சாப்பிடுவது.
2. பிளாஸ்டிக் பைகளில் வைத்து சூடாக்கிய சிப்ஸ் போன்ற நொறுக்கு தீனிகள்.
3.சூடான குழம்புகளை பெரும்பாலும் பிளாஸ்டிக் பைகளிலேயே கட்டி தருகிறார்கள் இது முற்றிலும் தவறு.
4. பிளாஸ்டிக் கலன்கள் (பிளேட்) வைத்து மைக்ரோ வேவ்ஸில் சூடாக்கிய உணவு வகைகதைத் தவிர்த்தால் 52 வகையான புற்று நோய்களை நீங்கள் தவிர்த்துக்கொள்ள முடியும்.
# முக்கியமாக பஜ்ஜி, வடை போன்ற தின்பண்டங்களை செய்தித்தாளில் பார்சல் செய்வதை தவிர்க்கவும்.
மேலும் அதிலுள்ள எண்ணையை எடுப்பதாக செய்தித்தாளில் பஜ்ஜிவகைகளை அழுத்துவதால் செய்தித்தாளில் படிந்துள்ள மையை பஜ்ஜி உறிஞ்சுகிறது.
இந்த மையில் இருக்கும் ரசாயனங்கள் புற்றுநோயை உருவாக்குகிறது.
# இச்செய்தியை அனைவரிடமும் பகிருங்கள்  கொடிய வகையான புற்று நோய்கள் ஏற்படாமல் மரணங்களை தவிர்க்க விழிப்புணர்வை ஏற்படுத்த உதவுங்கள்.
நன்றி !

No comments: