"எனக்குத் துன்பம் விளைந்தது என் நன்மைக்காகவே; அதனால், உம் விதிமுறைகளை நான் கற்றுக்கொண்டேன்
திருப்பாடல்கள/சங்கீதம் 119:71
திருப்பாடல்கள/சங்கீதம் 119:71
ஆபரணங்களில் பயன்படுத்துப்படும் கடல் முத்துக்களை பார்த்திருக்கிறீர்களா? அது பார்ப்பதற்கு அழகு நிறைந்ததாகவும், விலையேற பெற்றதாகவும் இருக்கும். இந்த முத்துக்க்கள் எப்படி உருவாகும் என்ற அறிவியல் உண்மை உங்களுக்கு தெரியுமா? இந்த உண்மையில் நமது ஆவிக்குரிய வாழ்விற்கு உதவக்கூடிய விஷயங்கள் உண்டு.
முத்து, கடலில் காணப்படும் ஒரு குறிப்பிட்ட சிப்பிக்குள் உருவாகிறது. இந்த வகை சிப்பிகள் அனைத்திலும் முத்துக்களை பார்க்க முடியாது. இந்த முத்துச்சிப்பிகள் கடலின் மணல் படுக்கையிலே வாழும் ஒரு உயிரினம். இவை கடலுக்குள்ளிருக்கும் கண்ணுக்கு தெரியாத நுண்ணியிர்களை உண்டு வாழும். அப்படி வாழும்போது, சில நேரங்களில் கடலின் ஆழத்திலுள்ள சிறு மண்துகள்கள், சிறுகற்கள் அந்த சிப்பிக்குள் சென்றுவிடும். இந்த சிறுகற்கள் சிப்பிக்குள் இருக்கும் அந்த மிக மென்மையான உயிரினத்தை உறுத்திக் கொண்டே இருக்கும். இந்த உறுத்தலை மேற்கொள்ள அவ்வுயிரினம் அந்த கல்லின் மேல் முத்தை உருவாக்கும் ஒரு பொருளை அதன் மேல் பூசுகிறது. அப்படியே அது சேர்ந்து ஒரு அழகான முத்தாக மாறுகிறது. இப்படி கல், மண் சிப்பிக்குள் செல்லாமல் முத்துக்கள் உருவாவதில்லை.
என்ன ஆச்சரியம் பார்த்தீர்களா? நம்முடைய வாழ்வில் வரும் பிரச்சனைகளை விளக்கக்கூடிய ஒரு அழகான உவமை இந்த முத்து. நீங்கள் ஆவிக்குரிய வாழ்வில் எவ்வளவு சிறந்து விளங்கினாலும் சில நேரங்களில் பாடுகள், பிரச்சனைகள் வரத்தான் செய்யும். அப்படி வரும் பாடுகள் நம் ஆவிக்குரிய வாழ்வை புதுப்பித்து, இன்னும் உயர்வானதாக மாற்றும் தன்மை உடையது. எப்படி கல்லின் உறுத்தலை மேற்கொள்ள அந்த உயிர் முத்தை உருவாக்குகிறதோ அப்படியே பாடுகள் நம்மில் முத்துக்களை உருவாக்கும்.
அன்பு மடல்!
No comments:
Post a Comment