இளம் வயது மாது ஒருத்தி ஒரு பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தார். அடுத்த நிறுத்தத்தில் பருமனான மாது ஒருவர் பல பைகளுடன் அந்தப் பேருந்தில் ஏறி அந்த இளம் வயது மாதின் பக்கத்தில் அமர்ந்தார். அவரது பருத்த உடலும் பைகளும் அந்த இளம் மாதினை நெருக்கிக்கொண்டிருந்தன.
அந்த இளம் மாதிற்கு அடுத்தப்பக்கத்தில் அமர்ந்திருந்த பயணி ஒருவர் இதனைப் பார்த்து அதிருப்தி அடைந்தார். உடனே அந்த இளம் மாதிடம், "ஏன் எதிர்ப்பு ஏதும் தெரிவிக்கவில்லை. பேசாமல் இருக்கிறீர்," என ஆதங்கப்பட்டார்.
அம்மாது புன்னகைத்தவாறு கூறினார்:
"நாம் சேர்ந்து பயணிக்கப்போவது மிகக் குறுகிய நேரம்தான். எனவே, அற்பமானதொரு விஷயத்திற்காக மரியாதை குறைவாகப் பேசுவதோ வாதிடுவதோ தேவையற்றது. நான் அடுத்த நிறுத்தத்தில் இறங்கத்தானே போகிறேன்," என்றார்.
"நாம் சேர்ந்து பயணிக்கப்போவது மிகக் குறுகிய நேரம்தான். எனவே, அற்பமானதொரு விஷயத்திற்காக மரியாதை குறைவாகப் பேசுவதோ வாதிடுவதோ தேவையற்றது. நான் அடுத்த நிறுத்தத்தில் இறங்கத்தானே போகிறேன்," என்றார்.
அம்மாதின் இந்தப் பதில் பொன்னெழுத்துகளில் பதிக்கப்பட வேண்டியவை!
*"அற்பமானதொரு விஷயத்திற்காக மரியாதைக் குறைவாக பேசுவதோ வாதிடுவதோ தேவையற்றது. நாம் சேர்ந்து பயணிக்கப் போவது ஒரு குறுகிய காலமே"*
இங்கு நாம் வாழப்போகும் காலம் மிகவும் குறைந்தது என்பதை உணர்வோமாயின், வாய்ச்சண்டை போடுவது, வீண் வாதத்தில் ஈடுபடுவது, பிறரை மன்னிக்க மறுப்பது, எதிலுமே அதிருப்தியும் குற்றமும் காணும்
போக்கினைக் கொண்டிருப்பது நம் நேரத்தையும் சக்தியையும் வீணடிக்கும் செயல் என்பது புரிந்திடும்.
போக்கினைக் கொண்டிருப்பது நம் நேரத்தையும் சக்தியையும் வீணடிக்கும் செயல் என்பது புரிந்திடும்.
ஒருவர் உங்களைப் புண்படுத்திவிட்டாரா? அமைதியாக இருங்கள், *பயணிக்கப் போவது ஒரு குறுகிய காலமே*
எவரேனும் உங்களுக்குத் துரோகம் புரிந்தாரா, உங்களை ஆக்கிரம வதை செய்தாரா(bully) ஏமாற்றினாரா, அவமானப்படுத்தினாரா? அமைதியாக இருங்கள், *பயணிக்கப் போவது ஒரு குறுகிய காலமே*
ஒருவர் நமக்கு எப்பேற்பட்ட தொல்லைகளை ஏற்படுத்தினாலும், ஒன்றை நினைவிற்கொள்ளுங்கள், *பயணிக்கப் போவது ஒரு குறுகிய காலமே*
இப்பயணம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது ஒருவருக்கும் தெரியாது. அவர்கள் இறங்க வேண்டிய இடம் எப்பொழுது என்பதும் ஒருவருக்கும் தெரியாது. *பயணிக்கப் போவது ஒரு குறுகிய காலமே*
உறவையும் நட்பையும் போற்றுவோம். ஒருவரை ஒருவர் மதித்து வாழ்வோம், ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவோம், மன்னிப்போம் மறப்போம். நன்றி பாராட்டி மகிழ்ச்சியாக வாழும் வழியைப் பார்ப்போம்.
நான் எப்பொழுதாவது உங்களைப் புண்படுத்தியிருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள். நீங்கள் எப்பொழுதாவது என்னைப் புண்படுத்தியிருந்தால், நானும் உங்களை மன்னித்துவிடுகிறேன். ஏனெனில், *நாம் சேர்ந்து பயணிக்கப்போவது ஒரு குறுகிய காலமே*
(ஆங்கிலத்தில் வந்ததில் 'படித்ததில் பிடித்தது')
No comments:
Post a Comment