Monday, September 25, 2017

கருப்பட்டியின் நலன்கள்...


சக்கரை (குளுக்கோஸ்) இன் தேவையை நிறைவு செய்வதே சமூகமாக வாழத் துவங்கிய இனங்களுக்கு இருந்த முதல் சவால். மூளை மற்றும் உடலின் இயக்கத்துக்கான சக்திக்கு சக்கரை தான் மூலம் என்பதால்சக்கரைத் தேவையில் தன்னிறைவு அடைவதை நோக்கிய பயணம் ஒவ்வொரு இனக்குழுவுக்கும்அத்தியாவசியமான ஒன்றானது. தாவரங்கள் தங்களுக்குத் தேவையான சக்கரையை ஒளிச்சேர்க்கை(Photosynthesis) மூலம் பெற்றுக் கொள்கிறது. மனிதனுக்கு அந்த ஆற்றல் இல்லாததால் துவக்கத்தில் தேன்,பூக்கள் என சக்கரைக்கான தேவையைப் பூர்த்தி செய்து வந்தான். ஒரு கட்டத்தில் தேவை அதிகரிக்க இன்றைய வைட்டமின் மாத்திரைகளில் எப்படித் தேவையான வைட்டமின் மட்டும் பிரித்தெடுக்கப் பட்டு திட வடிவில் சேர்த்துக் கொடுக்கப் படுகிறதோ அது போலவே சக்கரையை மட்டும் பிரித்தெடுக்கும் வழிகளைத் தேடலானான். அத்தகையதொரு கால கட்டத்தில் உலகின் முதல் வேதியியல் கண்டுபிடிப்பாய்க்கருப்பட்டியை உருவாக்கினர் குமரிக் கண்ட மக்கள் (இன்றைய தமிழர்கள்).

சூரிய சக்தியை சக்கரையாக மாற்றும் ஆற்றல் படைத்து தாவரங்கள் பூக்கும் காலத்தில்அதிகப்படியான சக்கரையை பூக்களை நோக்கிச் செலுத்தும். இதனை உணர்ந்த காரணத்தால் பனை மற்றும் தென்னை மரங்கள் பாலையிட்டுப் பூக்கும் தருவாயில் அதனை வெட்டி விட்டுக் குடுவைகள்கட்டி வடியும் நீரைச் சேகரித்தனர். இயல்பாக அமிலத்தன்மை கொண்ட நீரினைச் சமன்படுத்தச் சுண்ணாம்பு தடவிய குடுவையில் சேகரித்தனர். சுண்ணாம்பு சேர்த்தால் பதநீர், இல்லையென்றால்அமிலத் தன்மை அதிகரித்து கள்ளாகி விடும். அதிகப்படியான சுண்ணாம்பு சேர்த்தாலும் காரம்அதிகரித்து கீடோன் (Ketone) எனும் வேதிப் பொருளாக மாறிவிடும். சுண்ணாம்பிற்கான மூலமாக முதலில்இருந்தது தமிழக, இலங்கைக்கு இடையிலான சுண்ணாம்புக் கால்வாயில் உள்ள பவளப் பாறைகள்தான். எனவேதான் சக்கரை உற்பத்தி முதலில் நமக்குச் சாத்தியம் ஆயிற்று.

இவ்வாறு சேகரிக்கப் பட்ட பதநீரை நீண்ட நாட்களுக்குச்  சேகரித்து வைக்கவும், தேவையானஇடங்களுக்கு அனுப்பி விற்பனைப் பொருளாக மாற்றவும் அதனை நெய்யும்  (crystallization) முறை உருவாக்கப்பட்டது. பதநீரில் உள்ள கலவைகளைப் பிரித்துத் தனிமைப் படுத்தும் பொழுது, பிரித்தெடுக்கப்பட்ட சக்கரை ஒன்றுடன் ஒன்று சேர்ந்த கட்டியாகிறது. இப்படி ஒன்றுடன் ஒன்று  தன்னை ஒழுங்கமைத்துக்கொண்டு நிற்பதே  நெய்தல் எனப்பட்டது.  துணி நெய்தல், நெய்தல் தினை ஆகியவற்றின் பெயர்க் காரணமும்  இதுவே.  பதநீரைக் காய்ச்சி அதில் உள்ள கலவைகளைப் பிரித்து சக்கரையின் சேர்மஒருங்கில் கருப்பட்டி உருவாக்கப் பட்டது..

வேதியியல் அறிவு, பானைகள் செய்யும் திறன், கட்டிப் படுத்தும் வழி முறை, காய்ச்சும் களன்கள், வேதியியல் புரிதல் என அனைத்தும் கை கொண்ட சமூகமாக பல்லாயிரம் வருடங்களுக்கு முன் நாம் வாழ்ந்திருக்கிறோம் என்பதற்கான உறுதியான சாட்சி கருப்பட்டி.

கருப்பட்டியின் சிறப்புகள்:
1) எந்த வேதியல் சேர்மானமும் செய்யாமல் இயற்கையான முறையில் உருவாக்கப் படுவதால், இரும்பு, மக்னீசியம் போன்ற தாதுப் பொருட்கள் செறிவாகக் கருப்பட்டியில் உள்ளது
2) பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால, இடுப்பு வலுப்பெருவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும்
3) காபிக்கு சீனிக்குப் பதிலாக கருப்பட்டி இட்டுக் குடித்தால்… உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும். சர்க்கரை நோயாளிகளும் கூட கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்புச் சத்தும், நோய் எதிப்பு சக்தியும் அதிகமாக இருக்கிறது.
4) கால்சியம் அதிகம் உள்ளதால் எலும்புகளை வலிமைப் படுத்தும் ஆற்றல் கருப்பட்டிக்கு உண்டு. கிராமங்களில் கோழிகளுக்கு கால் முறிந்து விட்டால் கருப்பட்டித் தண்ணீர் வைக்கும் வழக்கம் இன்றும் உண்டு.
Karuppatti
இனிப்பும், உப்பும் உற்பத்தி செய்து கொண்ட சமூகங்கள் தான் உணவின் எல்லைகளை விரித்து நாகரீக வளர்ச்சிக்குள் பாய்ந்தன. அதில் முன்னோடியான நாம் .

நன்றி :- திரு.பொன்.தங்கராஜ்

For more good messages visit whatsapprecords.blogspot.com

No comments: