யோபு 8:20. இதோ, தேவன் உத்தமனை வெறுக்கிறதுமில்லை, பொல்லாதவர்களுக்குக் கைகொடுக்கிறதுமில்லை.
தொழில்நுட்பம், இசை, விஞ்ஞானம் என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் யூதர்கள் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதை எவருமே மறுக்க முடியாது. உலக வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 70% யூதர்களின் கைவசமே உள்ளது. அழகு சாதனங்கள், நாகரிக உடைகள், உணவுப் பொருட்கள், ஆயுதங்கள் என்று பலவற்றிலும் யூதர்கள் சிறந்து விளங்குவது நிஜம். ஏன் கடவுள் அவர்களுக்கு மட்டும் இந்த திறமையைக் கொடுத்தார்? என்று சிந்தித்தால் தேவன் எல்லா மனிதர்களையும் ஞானிகளாகத் தான் படைத்துள்ளார். நாளடைவில் மனித நாகரீகத்தின் பழக்க வழக்கம் காரணமாக சில இன மக்கள் ஞானிகளாகவும், சில இன மக்கள் ஞானத்தில் பின் தங்கினவர்களாகவும் இருக்கின்றார்கள்.
சிகரெட்டில் இருக்கும் நிகோட்டின் நமது மூளையின் முக்கியமான திசுக்களை அழித்து, மரபணுக்களையும் DNA வையும் பாதிக்கும்; இதன் காரணமாக அடுத்த தலைமுறை அறிவற்றவர்களாகவும் மூளை வளர்ச்சி குன்றியவர்களாகவும் உருவாகக்கூடும். இதனால் இஸ்ரேல் நாட்டில் சிகரெட் புகைப்பது தடை செய்யப்பட்ட ஒன்று. சிங்கப்பூரிலும் சிகரெட் பிடிப்பவர்களை சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டவர்களாகவே பார்க்கிறார்கள். இஸ்ரேல் நாட்டைப் போலவே இங்கும் சிகரெட் பிடிப்பது தீய பழக்கம் என்று கருதப்படுகிறது. ஒரு சிகரெட் பெட்டியின் விலை 7 யு.எஸ். டாலர்கள்! அரசாங்கமும் இஸ்ரேல் நாட்டு அரசாங்கம் போலவேதான்.
சிங்கப்பூர் மிகச்சிறிய நாடு; மன்ஹாட்டன் அளவே இருந்தபோதும் உலகத்தரம் வாய்ந்த பல்கலைக் கழகங்கள் இங்கு இருக்கின்றன. இந்தோனேஷியாவைப் பாருங்கள். ஒரு பாக்கெட் சிகரெட்டின் விலை வெறும் 0.70 யு.எஸ். டாலர்தான். எங்கு பார்த்தாலும் மக்கள் சிகரெட் பிடித்துக் கொண்டு இருப்பார்கள். பலன்? லட்சக்கணக்கான மக்கள் தொகை இருந்தும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் பல்கலைக் கழகங்கள்; பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடிய தொழில் நுட்பமோ, தயாரிக்கும் பொருட்களோ எதுவுமே இல்லை அவர்களிடம்! அவர்களது மொழியைத் தவிர வேறு மொழி தெரியாது. ஆங்கில மொழியைக் கற்றுக் கொள்ள எத்தனை சிரமப் படுகிறார்கள். இவையெல்லாம் சிகரெட் பிடிப்பதால்தான். சிகரெட் பிடிப்பவர்களின் அடுத்த தலைமுறை அறிவற்றதாகத்தான் இருக்கும். இதை வாசிக்கின்ற நீங்கள் ஒருவேளை ஏதாவது போதைப்பொருளை உட்கொள்பவராக இருந்தால் உடனடியாக அந்த பாவ பழக்கத்தை விட்டு விடுங்கள். நிச்சயமாக இயேசு கிறிஸ்து உங்களுக்கு உதவி செய்வார்.
இந்தியாவிலும், தமிழ் நாட்டிலும் மதுவுக்கும் புகைப் பழக்கத்திற்கும் அநேகர் அடிமைகளாக காணப்படுகின்றார்கள். அரசாங்கமே இந்த தொழிலை செய்து வருவது மிகவும் வேதனைக்குரியது. தற்போதைய இந்திய மாணவர்களில் 18% மாணவர்கள் போதைப்பொருளுக்கு அடிமைகளாக காணப்படுகின்றார்கள். 2020-ம் ஆண்டில் 40% மாணவர்கள் போதைப்பொருளுக்கு அடிமைகளாக இருப்பார்கள் என கருத்து கணிப்பு சொல்கின்றது. போதைப் பொருளுக்கு அடிமையாக இருப்பவர்களின் விடுதலைக்காக பாரத்தோடு ஜெபியுங்கள்.
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென்
விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்
No comments:
Post a Comment