Friday, October 6, 2017

பரிசுத்த வேதாகமத்தின் மகத்துவம் - யோனாவும் மீனும்

💠   19ம் நூற்றாண்டில் sir .henry layord என்ற தொல் பொருள் ஆராய்ச்சி யாளர் 35 _ 40 அடி ஆழத்திற்குள் நினிவேயின் இடிபாடுகளை க் கண்டுபிடித்தார்.
💠  இவைகள் பரிசுத்த வேதாகமத்தில் கூறப்பட்டிருக்கும் நினிவே நகர் தான் என்று ஊர் ஜிதப் படுத்தும் வரைக்கும் ,அப்படி ஒரு நகரே இருந்நதில்லை என வாதாடினார் ...
💠   3 நாள் ஒரு மனிதன் மீன் வயிற்றுக்குள் இருந்திருந்தால் கண்டிப்பாக ஆகாரத்தை ஜீரணிக்கச் செய்யும் இரைப்பை நீர் சுரந்து மீனின் வயிறு அவனை கசக்கி சாகடித்து இருக்குமே அல்லது விழுங்கும் போதே தன் கூரிய பற்களால் கீறி நசுக்கிக் கொன்றிருக்குமே என்று நினைப்பர்...
💠  இதைப் பற்றி சற்று ஆராயலாம்...
💠  ஷார்க் மீன்களுக்கு மனிதனை விழுங்க கூடிய தொண்டைகளிலிருந்தும் அவைகள் ஆகாரத்தைத் தங்கள் கூரிய பற்களால் கடித்துக் குதறி சாகடித்து விடும்.
💠   ஆனால் பரிசுத்த வேதாகமத்தில் "யோனாவை விழுங்கும் படி ஒரு பெரிய மீனை ஆயத்தப் படுத்தியிருந்தார் என்று பார்க்கிறோம்.
யோனா _1;17
💠   ஆகவே ஆண்டவர் ஆயத்தப் படுத்திய விதமான மீன் வகை ஏதாவது இருக்கிறதா என ஆராய்ச்சியாளர்கள் தேடினர்... கடைசியாக கண்டுபிடித்தனர்...
💠   இந்த வித மிருகம் திமிங்கல _ஷார்க் என அழைக்கப் படுகிறது ...
💠  70அடி நீளம் வரையுள்ள இவ்வகை மீன்கள் மனிதனை முழுவதும் சேதமில்லாமல் விழுங்கக் கூடியவை ....
💠   இப்பேர்ப்பட்ட மீன் ஒன்று ஒரு சமயம் இங்கிலாந்து வளைகுடாவில் மீனவர்களால் கண்டு பிடிக்கப்பட்டு அதைப் பிடிக்கப் பிராயசப்படும் போது ஒரு மீனவர் தவறி கடலுக்குள் விழுந்து விட்டார் ...
💠   உடனே அந்த மீன் திரும்பி அவரை விழுங்கிவிட்டு கடலுக்குள் மறைந்து விட்டது ....
💠   மற்ற மீனவர்கள் அந்த மீனைத்தேடி 48மணி நேரங்களுக்குப்பிறகு வடகடலில் அதைக் கண்டு பிடித்து சுட்டு அம்மீனைக் கரைக்கு இழுத்து வந்து, அதன் வயிற்றைக் கிழித்து பார்த்த போது அவருடைய உடல் ஒரு சேதமுமில்லாமல் இருந்ததோடு அவனுக்கு உயிரும் இருப்பதாக தெரிந்தது ....
💠   ஆகவே அவரை அவசரமாக மருத்துவ மனைக்குக் கொண்டுபோன போது அவன் அதிர்ச்சியில்தான் இருக்கிறார் என முதலுதவி சிகிச்சை கொடுத்து அனுப்பி விட்டார்கள் ....
💠   சாதாரண விபத்தில் ஒரு மனிதன் ஒரு மீன் வயிற்றில் 2நாட்கள் உயிரோடு இருக்கக் கூடுமானால் கர்த்தர் ஆயத்தப் படுத்திய பெரிய மீனின் வயிற்றில் யோனா 3 நாட்கள் உயிரோடு இருப்பது அரிதான காரியமா?
💠   அது மட்டுமல்ல, சில மீன்கள் சாதாரண மாக 95 அடி நீளமுள்ளவைகளாகவும் இருக்கின்றனவாம்
💠   இவைகள் திமிங்கில இனத்தைச் சேராதவைகளக இருப்பதால் இவைகளுக்கு சுவாசிக்க செவிள்கள் கிடையாது ....
💠   ஆனால் காற்றைச் சேமிக்க அவைகளின் தலையில் சில சமயம் 14அடி நீளம்===,7அடி அகலம் ===7அடி உயரம் ====கொண்ட அறைகள் இருக்கின்றனவாம்...
💠  இத்திமிலங்கள் தாங்கள் விழுங்க முடியாத அளவு பெரிய சாதனங்கள் வாய்க்குள் நுழைந்து விட்டால் அவைகளை இந்தக் காற்று அறைக்குள் தள்ளி விட்டு அப்புறம் கரைப் பக்கம் வந்து அவைகளை தும்மி வெளியேற்றி விடுகின்றனவாம்...
💠   என்ன ஆச்சர்யம் !!!..... பரிசுத்த வேதம் சொல்லும் எந்த ஒரு சம்பவமும் கட்டுக் கதைகள் அல்ல...
💠   வேதம் கூறும் சம்பவம் அனைத்தும் உண்மையே....
❤   வேதத்தை நேசிப்போம்.... தேவனுக்கே மகிமை ...
💠   உம்முடைய நீதி நித்திய நீதி, உம்முடைய வேதம் சத்தியம்.
சங்கீதம் 119;142

No comments: