Wednesday, October 4, 2017

இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்

இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள் (மீட்பின் திட்டம் 1)
*இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்கு போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது, அதின் வழியாய் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்கு போகிற வாசல் இடுக்கமும் வழி நெருக்கமுமாயிருக்கிறது, அதை கண்டு பிடிக்கிறவர்கள் சிலர்* (மத் 7:13-14)
தேவன் தாம் படைத்த மனிதர்களை வருகின்ற உலக அழிவிலிருந்து பாதுக்காக உருவாகிய திட்டமே *மீட்பின் திட்டம்* ஆகும். அந்த திட்டத்தில் முதலாவதாக *பாவ கட்டுகளிருந்து மனிதர்களை விடுதலையாக்க இயேசு கிறிஸ்து உலகத்திற்கு அனுப்பப்பட்டார். அவர் தனது சொந்த இரத்ததினால் மனிதர்களை பாவத்தின் கட்டுகளிலிருந்து விடுதலையாக்கினார்.அவ்வாறு விடுதலை பெற்ற நாம், இடுக்கமான வாசல் வழியே வருந்தி நுழைந்து பாவ உலகத்திலிருந்து வெளியே வருவதின் அவசியத்தை இன்று பார்க்கலாம். இந்த சத்தியத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்ண்டுமெனில், *நீங்கள் ஒரு எரியப்போகின்ற கட்டிடத்தில், கட்டப்பட்ட நிலையில் இருப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள்*. அந்த கட்டிடத்தில் நீங்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்தால் நிச்சயமாக உங்கள்ளால் தப்பிக்கவே முடியாது அல்லவா. பாவ கட்டுகளிலிருந்து நம்மை விடுவிக்கவே இயேசு சிலுவையில் இரத்தம் சிந்தினார். உங்களுடைய பாவங்களுக்காக அவர் மரித்தார் என்று நீங்கள் விசுவாசித்து நம்புவத்தின் மூலம் நீங்கள் பாவ கட்டுகளிலிருந்து விடுதலையாக்கப் படுகின்றீர்கள். அநேக மக்கள் இந்த முதல் நிலையிலேயே, அதாவது விடுவிக்கப்பட்ட நிலையிலே நின்று விடுகின்றார்கள். ஆனால் விடுவிக்கப்பட்டவர்கள், எரியப்போகின்ற அந்த கட்டிடத்திலிருந்து உடனடியாக வெளியேறுதல் அவசியமாகும். அதாவது இயேசுவின் இரத்தத்தால் பாவத்திலிருந்து விடுதலை பெற்ற நீங்கள், உடனடியாக உங்கள் பாவ பழக்க வழக்கங்களிருந்து வெளியேற வேண்டும்.
அப்படியாக எரியப்போகின்ற கட்டிடத்திலிருந்து நீங்கள் வெளியேறுவதாய் கற்பனை செய்துகொள்ளுங்கள் . நீங்கள் வெளியேறும் பொழுது உங்களுக்கு முன்பாக இரண்டு வழிகள் இருக்கும். ஒன்று நீங்கள் எப்பொழுதும் சென்று வரும் வழி *NORMAL WAY*. மற்றொன்று அவசர காலத்தில் உங்களுடைய உயிரைக் காக்க பயன்படுத்த வேண்டிய *FIRE EXIT* அல்லது இடுக்கமான வழி *NARROW WAY* ஆகும். நீங்கள் அனுதினமும் பயன்படுத்தக்கூடிய வழி பெரியதாகவும், விசாலமாகவும், மூலமாக LIFT எளிதில் சென்று வரக்கூடியதாகவும் இருக்கும். ஆனால் *FIRE EXIT* வழியானது இடுக்கமாகவும், LIFT மூலம் எளிதாக செல்ல முடியாததாகவும் அதாவது நீங்களே வருந்தி முன் செல்லும் வழியாகவும் இருக்கும்.
இயேசு கிறிஸ்த்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொருவருக்கும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள இரண்டில் ஒருவழியை தேர்வு செய்ய வேண்டும். இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால், ஒரு மனிதன் பாவமன்னிப்பு பெறும் பொழுது, அந்த பாவத்தின் வேறானது அந்த மனிதனை விட்டு அகலாது. அந்த பாவத்தின் நினைவுகள் மீண்டும் அம்மனிதனை பாவம் செய்ய தூண்டிக்கொண்டே இருக்கும். தூங்கும் பொழுதும் அந்த பழைய பாவத்தின் நினைவுகள் கனாவாக வெளிப்படும். அநேகர் தூங்கும் சமயத்தில் கெட்ட கனவுகள் காண்பதற்கு காரணம் பாவத்தின் நினைவுகள் மனிதர்களை விட்டு அகலாமல் இருப்பதே. ஆகவே தான் பவுல் அடிகளார் சொல்கின்றார், *நிர்பந்தமான மனுஷன் நான்! இந்த மரண சரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்* (ரோமர் 7 : 24). இந்த பாவ நினைவுகள் நிறைந்த நம்மை விடுதலையாக்கும் இயேசு இரத்தம் இரத்தத்தால் நீங்கள் விடுதலை பெற்றிருந்தாலும், மீண்டும் பழைய பாவத்தினால் சுண்டி இழுக்கப்படும் நிர்பந்தத்திற்கு தள்ளப்படுவீர்கள். இந்த சமயத்தில் உங்கள் முன் இருப்பது தான் *NORMAL WAY
இவர்கள் தான் மணிக்கணக்கில் சினிமா பார்க்கும் கிறிஸ்தவர்கள். நல்ல நாள் பார்த்து திருமணம் செய்யும் கிறிஸ்தவர்கள். ஜாதி பாகுபாடு பார்க்கும் கிறிஸ்தவர்கள். இசையின் கண்களோடு பிறரை பார்க்கும் கிறிஸ்தவர்கள் இப்படியே சொல்லிக்கொண்டே போகலாம். இவர்கள் கிறிஸ்த்துவின் இரத்தத்தால் விடுதலை பெற்று இருந்தாலும் விசாலமான பழைய பாவ வழியில் பயணிப்பவர்கள். இப்படிப்பட்ட மனிதர்களை திருத்தும் பணியில் திருச்சபையும், தேவனுடைய ஊழியக்காரர்களும் அதிகளவில் நேரத்தையும் பணத்தையும், தங்கள் தாளந்துகலையும் செலவழிப்பதால் தான் அநேக மக்களுக்கு இன்னும் நற்செய்தி அறிவிக்கப்படாமல் உள்ளது. இந்த நிலை மாற வேண்டும் என்றால் இரட்சிக்கப்படும் ஒவ்வொருக்கும் இடுக்கம்மான வாசல் வழியே வருந்தி நுழைதலின் அவசியம் நன்கு தெரிந்திருக்க வேண்டும்.
பழைய பாவத்தை விட மனமில்லாதவர்கள் விசாலாமான வழியில் செல்ல தீர்மானிப்பது போல, கிறிஸ்த்துவுக்காய் பரிசுத்தமாய் வாழ வைராக்கியம் கொள்ளுகிறவர்கள், இடுக்கமான வழியில் செல்ல தீர்மானிப்பார்கள். எண்ணிமுடியா பாவங்களால் நிறைந்த உலக வழியானது சிற்றின்பங்களை காண்பித்து அழிவிற்கு நேராய் கொண்டு செல்லும். இந்த இடுக்கமான வாசல் வழியே செல்பர்கள் தங்கள் பழைய பாவ பாரங்களை கிறிஸ்துவின் பாதத்தில் இறக்கி வைத்துவிட்டு புதிய மனிதர்களாக, புதிய கொள்கைகளுடன் இயேசுவைப் போல வாழத் தொடங்குவார்கள். ஜாதி, சம்பிரதாய மத கொள்கைகளுக்கு மேலாகவ இயேசுவைப் போல, தங்களை மாற்ற அனுதினம் முயலுவார்கள். பழைய பாவ சிற்றின்பங்களுக்கு எதிராய் போராடி மேற்கொண்டு இடுக்கம்மான பரிசுத்த வழியில் தொடர்ந்து முன்னேறுவார்கள். பாவம் செய்து வாழ்பவர்கள் , எப்படி வேண்டும்மானாலும் வாழலாம். ஆனால் பரிசுத்தமாய் வாழ விரும்புகிறவர்கள் இப்படித்தான் வாழ வேண்டுமென்று இயேசு இந்த உலகத்தில் வாழ்ந்து காண்பிபித்துள்ளார். ஆகவே தான் ஜீவனுக்கு போகிற வாசல் இடுக்கமும் வழி நெருக்கமுமாயிருக்கிறது. இதை வாசிக்கின்ற நீங்கள் ஒருவேளை கிறிஸ்த்துவின் இரத்தத்தால் விடுதலை பெற்று, பழைய பாவங்களை விட முடியாமல் கேட்டுக்கு போகிற பெரிய வழியில் சென்று கொண்டிருக்கலாம். உங்களுடைய உயிர் பாதுக்காக்கப்பட இந்த நிமிடமே இயேசு காண்பித்துக் கொடுத்த இடுக்கமான பரிசுத்த வழிக்கு வந்து விடுங்கள். வரப்போகின்ற அழிவுக்கு பாதுகாக்கப்பட்டு, காப்பாற்றப்படுவீர்கள்.
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென்
விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

No comments: