Wednesday, March 21, 2018

ரிசர்வேசன் ( எ ) இட ஒதுக்கீடு : பாகம் - 13

இப்ப உள்ள மனித குலத்திற்கு ஆதரவா அரசியல் அமைப்பு சட்டத்திற்கு முன்னிருந்த சட்டம் மனுஸ்மிருதி (அ) மனு தர்ம சட்டம் இருந்திச்சி. அது மனுக்குலத்திற்கு எதிரான சட்டம். அந்த சட்டம்தான் சத்ரபதி சாகு, மகாத்மா பூலே காலத்திலிருந்தது. இரண்டாவது சட்டம் பாபாசாகேப் எழுதியது. இந்த சட்டத்தாலதான் 21 வயது முடிந்தவர்க்கு ஓட்டு என்ற சட்டமானது. இதை எதிர்த்தவர்தான் இந்த நாட்டின் தேசப்பிதாவாம். உண்மையில் இந்த நாட்டின் எல்லா மக்களுக்கும் சுதந்திரப்போராட்டம் செய்தது பாபாசாகேப்தான். இந்த சட்டத்தின் அடிப்படையிலான தேர்தலில்தான், தனித்தொகுதிகளில் போட்டியிட மாட்டோம் என் வாக்கை மீறி துரோகம் செய்து வெற்றி பெற்ற காங்கிரஸின் 78 தொகுதிகளில் வெற்றி பெற்ற செட்யுல்டு வகுப்பினர் பாபாசாகேப்பிற்கு எதிர்த்து சட்டத்திலுள்ள ஓட்டுரிமை, தனித்தொகுதி கிடைத்தாலும் உரிமைகளை கிடைக்க விடாமல் செய்து விட்டார்கள். அதனால்தான் பாபாசாகேப், காந்தி குறித்த ''பழக்கதையை'' கவிஞன் போல் சொல்கிறார். வெறும் சக்கையை என் முகத்தில் துப்பிய காந்தியிடம் எச்சரிக்கையாயிருங்கள் அப்படின்னு தன்னுடைய ''காந்தியும், காங்கிரசும் தீண்டபடாதோருக்கு செய்தது என்ன?'' என்ற புத்தகத்தில் பதிந்துள்ளார். இது ரொம்ப அருமையான புத்தகம். தமிழில் தலித் எழில்மலை நன்றாக மொழி பெயர்த்திருக்கிறார். கண்டிப்பா படிங்க.
பொதுவா பாபாசாகேப் பற்றி சொல்றவங்க, அவர் வண்டியிலிருந்து தள்ளப்பட்டார், ஸ்கூல்ல சாக்குல உட்கார வைக்கப்பட்டார், பியூனால் அவமதிக்கப்பட்டார்ன்னு எல்லாரும் சொல்ற வரலாற்றை சொல்லிட்டு போவாங்க. இன்னைக்கும் இந்த மாதிரி சம்பவம், சொல்லப்போனா இதையும் தாண்டிதான்  நடக்குது. வாயில் மலம் திணிப்பதும், உயிரோடு கொளுத்துவதும், துப்பாக்கிசூட்டில் பலியாவதும், தலையை அறுப்பதும் இன்னைக்கும் நடந்திட்டுதான் இருக்கு. இது அவருக்கு இழைக்கப்பட்ட அநீதிதான் என்றாலும், இதை நாம தெரிஞ்சிக்கிறதை விட இதை எதிர்த்து அவர் செய்த போராட்டம் என்ன? அதில் 2 விஷயத்தை பார்க்க போறோம். 1. பூனா ஒப்பந்தம். இது பாபாசாகேப்பிற்கும், காந்திக்கும் நடந்த ஒப்பந்தம். 24.09.1932 அன்று வருவதுதான் சட்டங்களில் வருவது. இதில் ஓரளவு நமக்கு வெற்றியை கொடுத்தது. ஓட்டுரிமை, தனித்தொகுதி கிடைத்தது. ஆனால் அதை பயன்படுத்திய நம்மாளுங்கதான் தன் மக்களுக்கான பிரதிநிதியாகாமல் அவர் இருக்கும் கட்சியின் கொள்கையை பிரதிபலிக்கும் பிரதிநிதியாயிட்டாங்க. அதனால் ஓரளவு வெற்றி, ஓரளவு தோல்வியாச்சி. ஆனா பாபாசாகேப் அடுத்த கட்டத்திற்கு தயாராகிட்டார்.இரண்டாம் உலகப்போரில் பிரிட்டிஷார் ஹிட்லரை ஜெயிச்சாங்க. சொத்து, பணம், ஆயுதம் போரில் விரையமானதால் இதில் வெற்றி பெற்றும், இந்தியாவை நிர்வாகம் செய்ய இயலாத நிலைக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது. எந்தளவிற்கு என்றால் இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாதநிலை. வருமானம் 200 கோடி. செலவு 300 கோடியாச்சு. இதில் துண்டு விழும் பணத்தை இங்கிலாந்தில் இருந்து எடுத்து வர வேண்டியதாச்சி. இதற்கு இங்கிலாந்தில் வரி கட்டுவோர் ''அடிமை நாட்டை நிர்வாகம் பண்ணவா நாங்க வரி கொடுக்கணும்' என எதிர்ப்பு வலுத்தது.
இரண்டாம் உலகப்போரில் கஜானா காலியானதால் இந்தியாவை விட்டுக்கொடுப்பது, அதாவது சுதந்திரம் கொடுப்பது என பிரிட்டிஷார் முடிவெடுக்கிறாங்க. அதற்காக இந்திய தலைவர்களுக்கு அறிக்கை அனுப்பினார்கள். ''நாங்க உங்களுக்கு விடுதலை கொடுக்க தயாராயிருக்கிறோம். ஆனால் சுதந்திர இந்தியாவை ஆட்சி செய்ய நீங்களே அரசியல் சட்டத்தை வடிவமைத்துக் கொள்ளணும்'' என்றும், ''அப்படி ஒரு சட்டத்தை இயற்ற நீங்கள் இந்தியாவில் ஒரு தேர்தலை நடத்தி, அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் எம்.பி.க்கள் ஒரு குழுவை உருவாக்க வேண்டும். அந்த குழுவின் கையால் நீங்கள் சட்டத்தை உருவாக்க வேண்டும்'' என்று அறிக்கை இருந்தது. அதை ஏற்று 1946ல் தேர்தல் அறிவிக்கிறார்கள். இப்பொழுது பாபாசாகேப் மீண்டும் ''All India Scheduled Caste Federation''  என்ற புதுக்கட்சி ஆரம்பிக்கிறார். சுதந்திர இந்தியாவில் எப்படிப்பட்ட சட்டம் இயற்றினால் எல்லாருக்கும் பொதுவாக இருக்கும்? என்று எழுதுங்கள் என்று சொன்னபிறகு, பாபாசாகேப் ஆறு மாதம் உட்கார்ந்து, ஆராய்ச்சி செய்து, எழுதிய முதல் சட்டம்தான் ''Constitution of United States of India'' என்பது. United States of America, United States of Kingdom'' இதெல்லாம் கேள்விப்பட்டிருப்பீங்க. அதேபோல் U.I. என்பது பாபாசாகேப்பின் கற்பனை. ஏன்னா இந்தியா ஒரே தேசமல்ல. பல தேசங்களின் கூட்டம்தான் அது. அமெரிக்கா, ஐரோப்பா போல் இங்கேயும் பலதரப்பட்ட மக்கள் இருக்கிறார்கள். கலரை பார்த்தா கருப்பா, சிவப்பா, வெள்ளையா, மஞ்சளா இருக்காங்க. முடியை பார்த்தா சுருட்டையா, நீளமா, மிருதுவா, கடினமா இருக்கு. உயரம் கூட குட்டை, நடுத்தரம், உயரம் என வெவ்வேறு விதமா இருக்காங்க.
- தொடரும்.

No comments: