Tuesday, March 6, 2018

ரிசர்வேசன் ( எ ) இட ஒதுக்கீடு : பாகம் - 7

இந்த நாட்டை பிடிக்க, அவன் படைக்கு சேர்த்தது ''சூத்திரர்களைத்தான்''. உங்க தாத்தா, பாட்டன் யாரிடமாவது கேட்டு பாருங்கள் ''மெட்ராஸ் ரெஜிமெண்ட்'' என்று ஒரு படை குரூப்பே இருந்தது. அந்த ரெஜிமெண்ட்ல இங்குள்ள ''பள்ளர், பறையர், சக்கிலியர் அதிகமாய் போய் சேர்ந்தார்கள். ஆக இவர்களை வைத்துதான் வெள்ளைக்காரன் மேலே உள்ளவர்களை காலி பண்ணினான். குட்டி சமஸ்தானம் முதல் பெரிய சாம்ராஜ்யங்களை இவர்களை வைத்துதான் காலி பண்ணினான். எப்படி வந்தது நமக்கு இவ்வளவு திறமையும், தைரியமும்? நாம்தான் மலம், சாக்கடை அள்ளுறவனாச்சே. வயல், பறை என இறங்கியவராச்சே. எப்படி வந்தது இந்த திறமை? ஏன்னா, நம் வம்சமே ஒரு பேரரசன் வம்சம் என்பதால்தான். நமக்கு புதிதாய் வாள், கத்தி வீச கத்துக் கொடுக்க வேண்டியது இல்லை. அது நம்ம ரத்தத்திலேயே ஊறிப் போயிருந்திச்சி. இதை தெரிஞ்ச வெள்ளைகாரன் பயிற்சியோட கூட, நம் வரலாற்றை ஞாபகபடுத்தினான். அவ்வளவுதான். ஆட்டு மந்தையில் பே பே ன்னு திரிஞ்ச புலிக்கு தான் யார் என்பதை தெரிய வைச்சான். புலியா மாறினதும் பாருங்க 2000 வருஷம் மேலே உள்ளவர்களை வெறும் 150 வருஷத்தில் எல்லோரையும் காலி பண்ணியிருக்கோம். டச்சுகாரனை விட லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா வந்த பிரிட்டஷ்காரன் நம்ம ரெஜிமெண்டை வைத்து இரண்டரை வருடத்தில் ஆட்சியை பிடித்தான். காரணம் நம்ம பலம் என்ன என்பதை நம்மை (சூத்திரன்)விட அதிகமாய் தெரிந்திருந்தான். அது மட்டுமல்ல, இப்போதைய பாகிஸ்தான், வங்கதேசம், ஸ்ரீலங்கா, நேபாளம், அந்தமான் உள்ளிட்ட உலகின் பாதியை (அதாவது சூரியன் மறையாத) அவனால் பிடிக்க முடிந்தது. எங்கெல்லாம் நாடு பிடிக்க சென்றானோ அங்கே நம் நாகர்களும் சென்றனர். அந்த அளவிற்கு பெரும் போராளிகளாயிருந்தோம்.
ஆக நம் நாகர்களை வைத்து ஆட்சியை கைப்பற்றிய பிரிட்டிஷாரிடம் வழக்கம்போல் பார்ப்பான் நுழைந்து, உயர்பதவிகளை பெற்றுக்கொண்டான். நம்மை வைத்து ஆட்சிக்கு வந்த பிரிட்டிஷார் நிறைய கெட்ட வேலைகளை செய்தாலும், சில நல்ல வேலைகளையும் செய்தார்கள். அதில்,1.  கல்வி புரட்சிபிரிட்டிஷார் பள்ளிக்கூடம் கட்டி, எல்லோரும் கல்வி கற்க வழிவகை செய்தான். கல்வி கிடைத்தால், யார் வேண்டுமானாலும், உயர்நிலை அடையலாம். பிரிட்டிஷார் லார்ட் மெக்காலே என்பவர் 1835ல் ஒரு சட்டம் கொண்டு வந்தார். அதுதான் 'அனைவருக்கும் கல்வி சட்டம்' என்பது. அறிவியல் பாடத்தையும் பாடதிட்டத்தில் சேர்த்தார். அப்போது உயர்பதவியிலிருந்த ஆரியர்கள் ''சூத்திரர்களுக்கு கல்வி கொடுத்தால், அவர்களை அடிமையாக வைத்திருக்க முடியாது. அவர்களுக்கும் ஆளும் ஆசை வந்தால் என்ன செய்வீர்கள்?'' என்ற போது, மெக்காலே சொன்னது, ''நான் கொடுக்கும் கல்வியாலே இவங்க புத்திசாலியா மாறிய நாள் வந்தா அது எனக்கு பெருமைதான். அடிமைக்கும் நல்ல கல்வி கொடுத்தார்கள் என்ற பெயர் வரலாற்றில் எங்களுக்கு கிடைக்கும்''. மேலும், அவர் கிறித்தவரானதால், ''கிறித்துவின் வருகையிலே இவர்களை இப்படி அறிவாளியாய் மாற்றின பெருமை எங்களையே சாரும்'' என்றார். சில துறவற பாதிரிகளின் மூலம் ஒவ்வொரு கிராமத்திலேயும் கல்விசாலைகள் நுழைய வழி செய்தார்கள். அப்பவும் யாரு முதல்ல கல்வி கற்க போனார்கள் என்றால் அது பார்ப்பான்தான். ஏன்னா, கல்வி அவனுக்குதான் என்ற உணர்வால். நம்ம சூத்திரன் முதலில் போகலை. ஏன்னா ''படிச்சா சாமி கண்ண குத்தும்'' என்ற நம்ப வைக்க பட்டதால். துறவர பாதிரிகள் ''படிக்க வாங்கடா''ன்னு கூப்பிட்டும், பட்டியல் வகுப்பினர் தயங்கிய போது, பிற்பட்ட வகுப்பினர் ஒன்றிரண்டாக கல்வி சாலைக்குள் நுழைய ஆரம்பித்தனர்.
அப்படி பிரிட்டிஷாரின் கல்விசாலைக்குள் நுழைந்த பிற்படுத்தபட்ட ''பூ பண்டார'' சாதியை சார்ந்த ''ஜோதிபா பூலே''வும் ஒருவர். அவர் பெயரில் மட்டுமல்ல. நம் வாழ்க்கையிலும் ஜோதி ஏற்றிய மகான். அதனால்தான் பாபாசாகேப் பூலேவை ''மகாத்மா'' என்று கொண்டாடினார். இந்துக்களுக்கு உழைத்த ''காந்தி'' அவர்களுக்கு மகாத்மான்னா, நமக்கு உழைத்த இந்த ''ஜோதிபா பூலே''தான் நமக்கு மகாத்மா. அதனால்தான் பாபாசாகேப் காந்தியை குறிப்பிடும் போது ''உங்கள் மகாத்மா'' அல்லது ''திரு. காந்தி'' என்றும் குறிப்பிடுவார். பூலேவின் தந்தையும் இவரை பள்ளிக்கு அனுப்பலை. எதனாலெனில், பார்ப்பான் ஒருத்தன் பூலேயின் அப்பாவிடம் ''பள்ளிக்கு போனா உன் பிள்ளையை கிருத்தவனாய் ஆக்கிடுவாங்க'' என்பதால். இவரும் நம்பியதால் பூலே படிப்பு நான்காம் வகுப்போடு நின்றுவிட்டது. ஒருநாள் வாத்தியார் பூலேயின் அப்பாவிடம் காரணத்தை கேட்க, ''உங்க பள்ளிக்கு வந்தா கிருத்தவனா மாத்திடுறீங்க''. ''யாரு சொன்னா?'' ''இந்த பார்ப்பான்தான்''. ''யோவ் ஐயரே உன் பையன் கூட எங்ககிட்ட படிச்சி தாசில்தாரா இருக்கான். இப்ப அவன் கிறித்தவனா? இந்துவா?'' என பார்ப்பானிடம் கேட்க, ''இந்துதான்'' ''அப்ப உன் பையனை கிருத்தவனாய் மாற்றாம இவனை ஏன் மாத்த போறோம்?'' பூலேயின் தந்தையிடம், ''நீங்கல்லாம் படிச்சா இவனுக்கு போட்டியாயிடுவீங்கன்னு இவனுங்க செய்யுற சதிதான் இது. பூலேயை பள்ளிக்கு அனுப்புங்க''. ஆக பூலே பத்தாம் கிளாஸ் முடிக்கறச்ச வயது 27. படிச்சதும் தாசில்தாரா போயிருந்தா பார்ப்பானுக்கு பிரச்சனை வந்திருக்காது. நல்லவேளை அப்படி எதுவும் நடக்கலை. ஏன்னா படிச்சி முடிச்சதும் அவர் வாழ்க்கையை புரட்டிபோடுற ஒரு சம்பவம் நடந்திச்சி. அது என்னன்னா,
பூலேயுடன் படித்த பார்ப்பனன் திருமணத்திற்கு அழைப்பு வந்ததால், சிறந்த உடையணிந்து, திருமண ஊர்வலத்தில் சென்றார். அதை பார்த்த பாப்பானுங்க ''இந்த பண்டார பயலுக்கு வந்த திமிரை பாத்தியா, நம்ம பய கைய பிடிக்கிறானே'' ''வெள்ளகாரன் வந்து, நாலு எழுத்தை படிச்சா நீயும், நானும் ஒண்ணா? எங்க ஊரை தீட்டாக்கிட்டியேடா''ன்னு திட்டி துரத்தி விட்டார்கள். கனத்த இதயத்துடன் அப்பாவிடம் தெரிவித்தான். ஆனால் அப்பாவோ, ''உன்னை யாரு அங்கே போக சொன்னது? இது உன்னுடைய தவறுதான்'' என படுகூலாக சொல்லிட்டார். பூலேயின் மனதோ ஆறவில்லை, தூக்கம் வராமல் ஊருக்கு வெளியேயிருந்த குளத்தருகே அமர்ந்து நடந்ததை அசை போட்டான். ''நாம எந்த தவறும் செய்யலை. அவன் கூப்பிட்டுதான் நான் போனேன். எனக்கு மட்டும் ஏன் அவமானம்?'' என்று யோசிச்சார். விடிந்தது. 11 மணியும் ஆனது. அப்பொழுது மகர் இனத்தை சேர்ந்த பத்து, பதினைந்து பேர் வர்றாங்க. ஊருக்குள் செல்ல ஆயத்தமாகி கொண்டிருந்தனர். அவங்க நிலமில்லாத, பணமில்லாத, தொழில் இல்லாமல் பிச்சை எடுப்பவர்கள். ஊரில் இரவு உண்டு, மீதியானதை வெளியே டப்பாவில் வைத்திருப்பார்கள். அது நாய், பறவைகள் தின்றது போக மீதமுள்ளதை எடுக்க புறப்பட்டார்கள். இந்த மகர் இனம் சூரியன் சரியாக நெற்றியில் படும் நேரங்களில் மட்டுமே, அதாவது அவன் நிழல் பட்டு யாரும் தீட்டாகாதபடி, எச்சில் நிலத்தில் விழாமல் கழுத்தில் கலயம் கட்டி, அவன் கால்தடம் தரையில் பட்டதை அழிப்பதற்கு இடுப்பில் துடைப்பம் கட்டி கிளம்பினார்கள். முகவாட்டத்துடன் இருந்த பூலேயை நோக்கி ''ஏனப்பா அழுகிறீர்?? என கேட்க, இவர் தனக்கு நேர்ந்த அவமானத்தை சொன்னதும் ''ப்பூ இதற்குதானா! என ரொம்ப சாதாரணமா சொல்லிட்டாங்க. அவமானப் பட்ட இவனுக்கு உரைச்சது ஏன் மகர் இனத்துக்கு உரைக்கலை?
- தொடரும்

No comments: