Tuesday, March 6, 2018

ரிசர்வேசன் ( எ ) இட ஒதுக்கீடு : பாகம் - 6

14-10-1956 அன்று என்னதான் நடந்தது? பாபாசாகேப் அம்பேத்கர் புத்தமதம் தழுவினார். இது எல்லோருக்கும் தெரியும். செய்தியாளர்கள் பாபாசாகேப்பிடம் கேட்டார்கள். ''ஏன் புத்த மதம் மாறினீர்கள்? அதுவும் நாக்பூரில்'' என்று. பாபாசாகேப் சொல்கிறார் ''நாக்பூரை ஏன் தேர்ந்தெடுத்தேன் என்றால் என் நாகர் இன மூதாதையர்கள் ஆட்சி செய்யும்போது நாக்பூர்தான் எங்கள் தலைநகரம். ஏன் பெளத்தம் என்றால் என் மூதாதையர்கள் பெளத்தர்களாக இருந்தார்கள். ஆட்சியே போனாலும் பார்ப்பனியத்தை எதிர்த்து ஒதுக்கியவர்கள். நானும் பார்ப்பனிய இந்து மதத்தை எதிர்த்து, தள்ளி நிற்கிறேன்'' என்றார். அப்படி ஒதுங்கி நின்றவர்கள்தான் ஒதுக்கபட்ட பட்டியல் வகுப்பினர். இதில் இவர்கள் தீண்ட தகாதவர்கள் என்று சொல்றதுல உண்மையான அர்த்தம் என்னன்னா? ''இவர்கள் தீண்ட முடியாதவர்கள்'' என்பதுதான் உண்மை. Untouchable என்பதற்கு தொடகூடாதவங்கன்னு அர்த்தம் இல்லை. தொட முடியாதவர்கள். Dont touch என்றால்தான் தொடக்கூடாதுன்னு அர்த்தம். உதாரணமா, மலம் இதை தொடமுடியும். ஆனால் அருவருப்பு. அதனால் dont touchன்னு சொல்வாங்க.  கரண்டு. இத தொட்டா என்னவாகும்? சங்குதான், so untouch. இவன் கரண்ட், நெருப்பு மாதிரி, எனவே இவனை தீண்ட முடியாது. பிரிட்டிஷ்காரன் நம்மளை என்ன சொல்றான்னா, ''இவனை பார், இந்து மதத்தின் நால்வர்ணத்தில் இவனை அடக்க முடியலை, இந்து மதத்தில் உள்ள ''சாதி, வர்க்கம், பெண்ணடிமை, அநீதி போன்ற அழுக்குகள் இவனை தொட முடியாது, நெருங்க முடியாது. இவன் மனதளவிலும் சுத்தமாயிருக்கிறான். So they are untouchables''.
உதாரணமா, நாம இப்ப யாரையாவது காதலிச்சு வீட்டுக்கு கொண்டாந்திடுறோம். நம்ம பெற்றொர்கள் எதிர்க்காமல் ''வா மருமகளே''ன்னுதான் வரவேற்கிறாங்க. அதுதான் சுத்தம். மத்தவங்க வீட்டுக்கு நம்ம பொண்ணு போனா, ''ஏய் என் சாதியை கெடுத்தவளே''ன்னு திட்டுறான். இவன் சாதியால் அசுத்தமாய் ஆகிட்டான். நம்மிடம்தான் இந்த சாதி, மத குப்பை இல்லாம இருக்கிறதாலதான் வெள்ளைகாரனே நம்மை சொன்னது, ''untouchables''. பாபாசாகேப்பும் எங்கும் சொல்ற வார்த்தை ''i am proud of untouchable''ன்னு. ஆனா இப்ப நாம சொல்றது ''நாங்க தாழ்த்தபட்டவங்க''. இதை சொல்லும்போதே பாதி உசுறு போயிறும்''. படித்தவர்களே, ''நான் ஒரு தாழ்த்தபட்டோர்''ன்னு எழுதுவதை கவனித்திருக்கிறேன். ''யாரால தாழ்த்தபட்டிங்க?'' என்ற கேள்வியை எழுப்பினால், ''மறவர், நாடார், வன்னியர், கவுண்டர்'' என்பதாகவே இருக்கும். இதை எங்கே போய் சொல்ல? இது ''சாதியின் பரிணாமம்'' என்பதை. ஏன்னா நமக்கு நம்ம பெருமைமிகு வரலாறு தெரியலை.  தேசியகொடியில் எத்தனை நிறம் என்றால் பச்சை, வெள்ளை, சிவப்பு என்பதாக நிறுத்தி கொள்கிறோம். பாபாசாகேப் 1956ல்  அக்டோபர் 14ம் நாள் சொன்னது என்னன்னா, நடுவில் உள்ள நீல கலரே நாம்தான். அது என்ன? அசோக சக்கரம். யாரந்த அசோகர்? புத்தமத பேரரசன். அவர்தான் நம் பாட்டன். ரூபாய் நோட்டில் உள்ள நான்முக சிங்கம்  நம் பெருமையை நான்கு திசைகளிலும் பரவ விட்ட அசோக சின்னம்தான் அது. அதைத்தான் பாபாசாகேப் தேசியகொடியில் இடம் பெற செய்திருக்கிறார். தேசிய கொடி விஷயம் என்னன்னா ''மேலேயுள்ள காவி இந்து மதமானாலும், நடுவிலுள்ள வெள்ளை கிறித்தவர்களானாலும், கீழேயுள்ள பச்சை இஸ்லாமியர்களானாலும் எல்லோரையும் சமத்துவமாய் ஆட்சி செய்ய மத்தியிலுள்ள நீல வர்ண அசோக, தம்ம சக்கர வாரிசுகளால்தான் முடியும்'
பாபாசாகேப் சொல்கிறார். நம்ம சின்னம் தேசிய கொடியில் இருக்கிறதென்றால், சட்ட மன்றம், பாராளுமன்றத்திற்கு வெளியே நின்று,  ''என் உரிமை, எனக்கு கொடுன்னு பிச்சை கேட்டு போராட்டம் பண்ணாதீங்க. நான் எழுதிய சட்டத்தை கையில் வைத்துக்கொண்டு சட்ட, பாராளுமன்றத்திற்கு உள்ளே போய் உட்கார்''. ஏன்னா அது நம்ம தாத்தா, பாட்டன் சொத்து. ஆக, இந்த தாத்தா, பாட்டன் சொத்து யாருக்கு போய் சேரணும்? பேரனுக்குதான். நாம்  பெளத்தராயிருக்கிறோம். நம்மை அடிமைபடுத்திய சாதி படிநிலை கொண்ட மதத்தை நாம் வெறுக்கிறோம். அந்த மதத்தில் ஊறி கெட்டு போனவங்க யாருன்னா, கவுண்டர், தேவர், வன்னியர்தான். அவன்தான் சாதியை பிடித்து, அதிலேயே ஊறி, அசுத்தமாயிருக்கிறான். பார்ப்பனியத்திற்கு கொடி பிடிக்கிறான். ஆனால் பாபாசாகேப்பின் பெளத்த வழியிலே வந்த நம்மால்தான் நல்ல ஆட்சியை கொடுக்க முடியும். அப்படியொரு நல்ல பேரரசன்தான் அசோகர். இவர் ஆட்சியில் மக்களுக்கு சோகமேயில்லை. எப்பவெல்லாம் நாம் ஆட்சியில் இருந்தோமோ, அப்பவெல்லாம் இந்தியாவும் மேலே இருந்தது. இந்தியா இப்ப சாதி, மத, லஞ்ச, ஊழல், கொலை, கொள்ளை, பெண்ணடிமை என தரம் தாழ காரணம் நாம ஆட்சியில் இல்லை என்பதால்தான். ஆக இந்தியா மேலே வர, நாமளும் மேலே வர வேண்டும். நாம மேலே வர, நம் எண்ணங்கள் மேலே வர வேண்டும். எண்ணங்கள் மேலே வர, பெருமையான நம் வரலாறு தெரிய வேண்டும். அதுதான் புத்தர், நாக பேரரசன் அசோகன், பாபாசாகேப் வரலாறு. இப்படி பெருமைமிகுந்த நாம் ரிசர்வேசனை எப்படி கேட்க வேண்டும்? ஏன் ரிசர்வேசன் கல்வியிலும், வேலைகளிலும் கிடைச்சது? அது சாதாரணமா கிடைக்கலை. அதற்கு சிலரோட போராட்டங்கள் இருக்கு. அதை பார்ப்போமா?
ரிசர்வேசன் நமக்கு கல்வி, வேலைவாய்ப்பில் கிடைப்பதற்கு பின்னாடி நிறைய பேரோட போராட்டம் இருக்கு. இன்னிக்கு அதை அனுபவிப்பவர்களுக்கே அது தெரியலை என்பது மட்டுமல்ல, இதை எதிர்த்த பார்ப்பனியத்திற்கே சொம்பு தூக்குவதை பார்த்தால், அதை அவர்களுக்கு உணர வைப்பது நம்முடைய கடமையாகிறது. ரிசர்வேசன் நமக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் வேணும்னு கேட்டோம். அதுக்கு முன்னாடி வர்க்கமாய் பிரித்த இட ஒதுக்கீடு நடப்பில் இருந்தது. பார்ப்பான்தானுக்கு மட்டும்தான் கல்வி ரிசர்வ். அது எல்லோருக்கும் வேணும்னு கேட்டோம். சத்திரியனுக்கு மட்டும் அரசியல் ரிசர்வ். அரசியலில் எல்லோரும் சம உரிமை கேட்டோம். வைசியனுக்கு மட்டும்தான் தொழில் ரிசர்வ். அதை எல்லோரும் செய்யணும்னு கேட்டது நமது உரிமை. அது சலுகையோ, பிச்சையோ இல்லை. நாம் இதை மாற்றணும்னு கேட்டதுதான் புரட்சி. நாம ஒற்றுமையாகாம 6000 சாதியா நம்மை பிரிச்ச கலாச்சாரத்தை எதிர்த்த புரட்சி. எப்படி நடந்தது?இந்த வர்க்க பிரிவினையால் சிதறுண்டு கிடந்த இந்தியாவில் வியாபாரம் செய்ய வந்த வெள்ளைக்காரன், வியாபாரநிமித்தம் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு செல்ல இரண்டு ஊருக்கும் வரி செலுத்த வேண்டியதாயிற்று. குட்டி குட்டியா 600 அரசர்கள் இருக்கையில், வந்த லாபமெல்லாம் இவனுக்கு வரி கட்டியே போய்விடுகிறது. வெள்ளைகாரன் முதல்ல செய்ய நினைச்சது, இந்த குட்டி குட்டி அரசர்களை அடித்து ஒரே பெரிய ஆளுகைக்கு கீழ் கொண்டு வர முடிவு பண்ணினான். வியாபாரம் பண்ண வசதியா ''நாமே ஏன் ஆட்சி செய்ய கூடாது?''ன்னு முடிவெடுக்கிறான். அதுக்கு அவனுக்கு படை தேவைபட்டது.
- தொடரும்

No comments: