Friday, March 30, 2018

திரு.அ.மார்க்ஸ் அவர்களின் நேர்காணல்...

வல்லினம்.
மலேசியா சென்று...தலைகவிழ்நது திரும்பிய திரு.அ.மார்க்ஸ் அவர்களின் நேர்காணல் வல்லினம் வலை இதழில் காண நேர்ந்தது.
அவரது நேர்காணலில் சொன்ன சில கருத்துகளுக்கு  எனது விளக்கம்.
1. எங்கள் கூட்டங்களில் மலேசிய தமிழர்கள் குழப்பம் விளைவித்தனர். 1930-இல் இத்தாலி, ஜெர்மனியில் இப்படித்தான் பாசிஸ்டுகள் குழப்பம் விளைவித்தனர்.,இவர்கள் பாசிஸ்டுகள்.
பதில்:  யார் பாசிஸ்டுகள் ஐயா...? 98 விழுக்காடு தமிழர்கள் கூடும் சபைகளில் வெறும் 2 விழுக்காடு உள்ள உங்களைப் போன்ற திராவிடர்கள் தங்களை தமிழக மேதைகளாகவும் அறிவுப்புலிகளாகவும் விளம்பரப் படுத்திக் கொள்ள செல்வது...? ... இது தானே பாசிஸ்டுதனம்.... கடந்த ஐம்பது ஆண்டுகளாக இதைத்தானே நீங்கள் தமிழர்கள் மீது திராவிடப் போர்வையில் திணித்து வருகிறீர்கள்.....?தமிழன் இப்போது விழித்துக் கொண்டால் அவன் பாசிஸ்டா...?
2.  நான் எந்த இனக்கோட்பாட்டையும் ஏற்பதில்லை. திராவிட இன கோட்பாட்டையும் ஏற்பதில்லை.
பதில்: அப்படியா...? அப்ப... எந்தக் கோட்பாட்டை விளக்குவதற்காக மலேசியா சென்றீர்கள்...? டார்வின் பரிணாமக் கோட்பாட்டை விளக்கவா...?  நேர்காணல் முழுக்க பார்ப்பானை வெளியே நிறுத்த வேண்டும் என்றுதான் பெரியார் பாடுபட்டார் என்கிறீர்கள். அப்படியெனில் பெரியார் எந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் அந்த முடிவுக்கு வந்தார்...?
3.  கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் “பெங்களூரு குணா” எழுதிய அந்த அபத்தமான நூலின் நகலை வைத்திருந்தனர்.
பதில்: அது என்ன நீங்கள் மட்டும் தமிழனை பெங்களூரு குணா என அடையாளப்படுத்தலாம். ஆனால் நாங்கள் மட்டும் கன்னடர் பெரியார், கடப்பா மார்க்ஸ் என்று அடையாளப்படுத்துவது... பாசிஸ்டுதனமா...? என்ன நியாயம் இது....? அவர் எழுதிய அந்த அபத்தமான நூலின் பெயரை குறிப்பிடாமல் கவனமாக தவிர்த்த  நோக்கம் என்ன...? நீங்கள் எல்லாம் யார் யார் என்று வெளி உலகத்திற்கு  அப்பட்டமாக அடையாளப்படுத்தி காண்பித்ததற்காகவா...?
4. தமிழகத்தில் 90 விழுக்காடு கன்னடர்களுக்கும் தெலுங்கர்களுக்கும் அவர்களின் மொழி தெரியாது. அவர்களின் வீடுகளில் உரையாடும் மொழியும் தமிழ்தான்.
பதில்: அப்படியா...?  நல்லது. எத்தனையோ புளுகள் உண்டு. இது எந்தவகையான புளுகு என்றுத் தெரியவில்லை.
5. தமிழ் நாட்டில் தமிழன் ஆண்டால் மட்டும் போதுமா...? தமிழன் என்கிற ஓர் அடையாளம் மட்டும் போதுமா....?
பதில்: இந்தக் கருத்தை அப்படியே இன்னும் விரிவு படுத்திப் பேசலாமே...? இந்தியாவை இந்தியன் ஆண்டால் மட்டும் போதுமா...? இந்தியன் என்கிற ஒர் அடையாளம் மட்டும் போதுமா....? ஆந்திராவை தெலுங்கன் ஆண்டால் மட்டும் போதுமா...? தெலுங்கன் என்கிற ஓர் அடையாளம் மட்டும் போதுமா...? இப்படியே இதனை கர்நாடகா. மலையாளம் என்று விரிவுபடுத்திப் பேசலாம்.... ஆனால் அங்கெல்லாம் சென்று இவர் இப்படி பேசிவிட்டு முழுமையாக ஊர் திரும்ப முடியாது.
6. சீமான் மணியரசன் போன்ற அரைகுறைகள் இனவாதம் பேசுகின்றனர்.
பதில்: ஆமாம். திராவிடர்களுக்கு கடந்த ஐம்பது ஆண்டுகாலமாகவே தமிழர்கள் அரைகுறைதானே... அதனால்தானே... உண்மையான அரைகுறைகளை அடையாளம் காட்ட  நாங்கள் தமிழ் தேசியம் பேச துவங்கியுள்ளோம்.
7.  நாங்களும் தமிழர் நலன்தான் பேசுகிறோம். தமிழன் என்றால் பார்ப்பான் வந்து புகுந்து கொள்கிறான். எல்லா நலன்களையும் அவன் சுருட்டிக் கொள்கிறான். ஆகவேதான் திராவிடன் என்கிறோம்.
பதில்: ஓ... அப்படியா....? பிறகு எதற்கு திராவிட கழகத் தலைவர்கள் எல்லோரும் தங்களை ”தமிழர் தலைவர்” என்று அழைத்துக் கொள்கின்றனர். உங்கள் வாதப்படிப் பார்த்தால் இவர்கள் பார்ப்பனர்களுக்கும் தலைவர்கள்தானே....? சரி. தமிழன் என்றால் பார்ப்பான் வந்து புகுந்து கொள்கிறான். திராவிடன் என்றால் பார்ப்பானோடு, தெலுங்கன், கன்னடியன், மலையாளி, ஒடிசாகாரன், பானிபூரிக்காரன் என்று எல்லா தமிழன் அல்லாத எல்லா காரன்களும் வந்து புகுந்துக் கொண்டு தமிழர்களின் எல்லா நலன்களையும் சுருட்டிக்கொள்கின்றானே....?
நலன்களை மட்டுமா சுருட்டிக் கொள்கிறான்...? 7 கோடி தமிழர்களை அடிமையாக்கி... இவர்களின் முதல்வராகவும் வர முடிந்திருக்கிறதே...? இந்தியாவின் மற்ற 25 மாநிலங்களிலும இந்த அவலம் உண்டா...?
கடந்த ஐம்பது ஆண்டுகால தமிழக வரலாறும் இதற்கு சான்றாக உள்ளதே.... இதற்கு உங்கள் பதில் என்ன...?
”பலரை பலகாலம் ஏமாற்றலாம். சிலரை சில காலம் ஏமாற்றலாம். எல்லோரையும் எல்லா காலத்திலும் ஏமாற்ற முடியாது”    ஆபிரகாம் லிங்கன்.
இது உலக அறம். இது  தமிழர்களுக்கும் பொருந்தும் என்பதை அ. மார்க்ஸ் போன்ற அரைகுறைகள்.... மன்னிக்கவும் அறிஞர்கள் புரிந்து கொள்வது நல்லது.
பழனி தீபன்

No comments: