Sunday, September 23, 2018

ரிசர்வேசன் ( எ ) இட ஒதுக்கீடு : பாகம் - 23

பாபாசாகேப்பின் கடைசி செய்தியில் ''அந்த விடுதலை பயணம் என்றால் என்ன?'' என்ற கேள்வி எழுகிறது. அது வேறொன்றும் இல்லை. அரசியல் அமைப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்பது, வர்ணாஷ்சிரமத்தில் மேலுள்ள மூவரின் (பிராமணர், ஷத்திரியர், வைசியர்) பொறுப்பில்லை. மேலே உள்ள மூவருக்கும் இதனால் நஷ்டம்தான். அவனுங்க முடிந்தளவு இதை நாசபடுத்தத்தான் நினைப்பானுங்க. அப்படி நாசமாக்கிட்டா அதோடு நம்ம சமூகம் சீரழிஞ்சி போயிடும். ஏன்னா இந்த சட்டத்தால சூத்திரனுக்குதான் லாபம். நமது அடுத்த பொறுப்பு என்னன்னா, இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துகிற அரசை உருவாக்கணும். அப்பொழுதுதான் இந்த விடுதலைப்பயணம் அதோட நிலைக்கு வந்து சேரும்.

இதை எதோடு கம்பேர் பண்றதுன்னா, பைபிளில் வரும் மோசஸ் தனது மக்களை பாலைவனத்திலிருந்து செழிப்பான இஸரேலுக்கு வழிநடத்தினார். அப்போது அந்த மக்களை ஒருங்கிணைத்து வழிநடத்த 10 கட்டளைகள் தேவையாயிருந்தது. ''நீங்கள் இந்த கட்டளைகளை பின்பற்றுங்கள், இஸரேலைக் காண்பீர்கள்'' என்று வழிநடத்தினார். யூதர்கள் அதை பின்பற்றி இஸரேலை அடைந்தார்கள். இன்றைக்கும் அவர்கள் அனைத்து துறைகளிலும் ஆட்டுவிப்பவர்களாக உலகையே ஆள்கிறார்கள் என்றால் மோசஸை குருவாக ஏற்று அந்த கட்டளைகளை கடைபிடித்ததால்.

ஆனால் நாமோ பாபாசாகேப்பை குருவாக ஏற்கலை. அவர் சொல்றதை கடைப்பிடிக்கிறதுமில்லை.

நம்ம அரசு ஊழியரெல்லாம் intelligentதான். ஆனா அவர்கள் intelectual-ளாக உருவாகணும். நாம் அடிமையாவே இருக்கணும்னா சுதந்திர இந்தியாவிலும் அடிமைகள். ஆனால் ஆட்சியாளர்களானால் எல்லோருக்குமான சுதந்திர இந்தியாவாக இதை மாற்றுகிறோம். அவ்வளவுதான்.

ஏன் நாம் ஆட்சியாளர் ஆகலை? தெரியலை.
ஏன் தெரியலை? தெரிஞ்சிக்க விரும்பலை.
ஏன் தெரிஞ்சிக்க விரும்பலை? பெரிசா வளரணும்னு எண்ணம் இன்னும் வரவில்லை.

நமக்கெல்லாம் சின்னச்சின்ன ஆசைகள்தான் இருக்கு. படிச்சிட்டு வேலை கிடைச்சா போதும், வேலை கிடைச்சா கல்யாணம் பண்ணிக்கணும். கல்யாணம் பண்ணிட்டா வீடு கட்டிக்கணும். அப்புறம் பிள்ளைகளை படிக்க வைத்து, அவர்களை திரும்ப வேலைக்கு அனுப்பனும். அவ்வளவுதான்.

இதெல்லாம் பண்ணிக்கங்க. ஆனால் நம்ம சகோதரனையும், சகோதரியையும்  குடிசை வீட்டில் வைச்சிட்டு, நாம் மட்டும் உசத்தியாக மாட மாளிகையில் இருக்கணுமா?

பாப்பானுங்க சாதிவெறி பிடிச்சவனுங்க. ஆனால் சுயநலம் இல்லாதவங்க. நமக்கு சாதி வெறி இல்லை. ஆனால் சுயநலவாதிகளாய் இருக்கிறோம். பிராமணனை போலவே ஷத்திரியன், வைசியனும் சாதிவெறி பிடிச்சவங்க. சுயநலவாதிகளில்லை. நாம் மட்டுமே சுயநலமா, சுகபோகியாயிருக்கிறோம்.

அதனால்தான் பாபாசாகேப் சொன்னார் ''They live for themself, for their personal gains''. அதாவது தனக்காகவும், தன்னோட சரீர சுகத்துக்காகவும், சுயநலமா வாழ்ந்திட்டு இருக்கிறவர்கள் எல்லோரும் சர்வ நாசமாய் போவார்கள்'' என்கிறார்.

அதுதான் இன்று நடக்கிறது. மனுவாதி ஆட்சியாளர்கள் ரிசர்வேசனை வைச்சிருக்க மாட்டான்னு பாபாசாகேப்பிற்கு நிச்சயமா தெரியும். அதனால்தான் ரிசர்வேசனை அடிப்படை உரிமைகளாக வைத்தார். அப்படிப்பட்ட ரிசர்வேசன்ல வந்த நாம் மக்கள் மத்தியில் பாபாசாகேப் கருத்துகளை சொல்ல வேண்டாமா?

அப்படி செய்யாமல் விட்டவர்களை பார்த்துதான், பாபாசாகேப் சொன்னது, ''சர்வ நாசமாய் போவீர்கள்''.

தலைவர் என்பவரை நாம் உருவாக்குவது மட்டுமின்றி, அந்த தலைமை நம் கட்டுப்பாட்டிலும், நம் சமூகத்தின் கட்டுப்பாட்டிலும் இருக்கணும்.

உதாரணமா, ஜனாதிபதியாக ஜெயில்சிங் இருக்கும்பொழுதுதான் பஞ்சாப்பில் கோல்டன் டெம்பிளிற்குள் இந்திராகாந்தியின் படைவீரர்களால் சீக்கியர்கள் அடிக்கப்பட்டனர். ஜூன் 7ம்தேதி ஜெயில்சிங் பேப்பர் பார்க்கும்பொழுது, ''படைவீரர்களால் சீக்கியர் தாக்கப்பட்டனர்'' என்றிருந்தது. அதிர்ச்சியுடன் செகரட்டரியை கூப்பிட்டு, ''எப்படிடா நான் கையெழுத்திடாமல் படை உள்ளே போச்சு?'' ''ஐயா நீங்கதான் கையெழுத்து போட்டிங்க.'' எடுத்து பார்த்தா இவர்தான் கையெழுத்திட்டிருந்தார். எப்படி நடந்ததென்றால், ஜெயில்சிங்கிற்கு இந்தி தெரியும், ஆங்கிலம் தெரியாது. எனவே இவருக்கே தெரியாமல் இவர் மக்களை அடிக்க கையெழுத்திட்டிருந்தார். ஆனால் சீக்கியர்களுக்கு ஜெயில்சிங் கையெழுத்திட்டிருந்ததுதான் தெரியும். வேறெதுவும் தெரியாது.

அதனால் சீக்கியர்கள் என்ன முடிவெடுக்கிறாங்கன்னா, ஜெயில்சிங் பஞ்சாப்பில் நுழைந்தால் அவனை சுட்டு வீழ்த்தணும், அவன் செத்தா அவன் கருமாதிக்கு கூட எந்த சீக்கியனும் போகக்கூடாது.

ஆனால் பதவியிலிருந்தவரை காங்கிரசுக்கு எதிராய் செயல்பட்டாலும், இந்த சின்ன தவறால் பதறி, தன் இனத்தாரிடம் கெஞ்சி கூத்தாடி, மன்னிப்பு கேட்டதால், கடைசியில் நிபந்தனையுடன் மன்னிக்கிறார்கள். என்ன நிபந்தனை? காலையிலிருந்து மாலைவரை சீக்கியர்களின் செருப்பை துடைக்கணும். கழுத்தில் ''நான் தவறு செய்து விட்டேன், என்னை மன்னித்து விடுங்கள்'' என்ற போர்டுடன்.

என்னதான் இந்த நாட்டிற்கே ஜனாதிபதியாயிருந்தாலும், சமூகத்திற்கு அவன் தொண்டனாததால், பெரியவர்கள் மட்டுமின்றி சிறியவர்களின் செருப்பை துடைத்து தன் இனத்தாருடன் சேர்ந்தார்.

தொடரும்

No comments: