Sunday, September 23, 2018

ரிசர்வேசன் ( எ ) இட ஒதுக்கீடு : பாகம் - 24

நாம ஓட்டு போட்டு ஜெயித்த பா.ஜ.க., காங்கிரஸ், திமுக, அதிமுக எவனுமே, ரிசர்வேசனை கண்டிப்பா நிறைவேற்றணும்னு சட்டம் போடலை. காரணம் என்னன்னா, 25 வருசத்திற்கு முன்னமே உலக மயமாக்கலால் அரசுத்துறையும் தனியார்மயமாகி வருகிறது. இப்ப நீங்க பார்க்கும் வேலை உங்க படிப்புக்கேற்ற வேலைதானா? 1960 - 70 களில் sslc முடித்தவர்கள் வெளியே வரும்போது கெஸட்டட் ஆபிஸர்ஸ். இன்னிக்கு எம்.காம்., எம்.எஸ்ஸி முடிச்சவங்க கூட கிளர்க்காகவே காலத்தை ஓட்டுறாங்க. இனிமேல் நம் குழந்தைங்க எம்.பி.ஏ. முடித்தாலும் அரசு வேலை கிடைப்பது கடினமாயிடிச்சி. பி.எஸ்ஸி., பி.ஏ. படிச்சவங்க கூட இன்னைக்கு செக்யூரிட்டி கார்டா வேலை பார்க்கிறாங்க. சொற்ப சம்பளத்தில் பிரைவேட்டுகளில் நிறைய பேர் வேலை பார்க்கிறாங்க. இதெல்லாமே ஆக்ஸிடென்டா நடக்கலை, திட்டமிட்ட சதியாய் நடக்குது. அரசாங்க வேலையிருந்தா, ரிசர்வேசனில் பள்ளர், பறையர், சக்கிலியருக்கு வேலை கொடுக்கணும். வேலையிருந்தா நிறைய பணமும், நேரமும் கிடைக்கும். இது கிடைச்சாலே சிந்திப்பான். சிந்திச்சா மாற்றம் வரும். மாற்றம் வந்தா அது ஆட்சி மாற்றத்தில் கொண்டு போய்விடும். இதை தடுக்க என்னதான் வழி. அதுதான் தனியார்மயம். தனியார்மயமாகிட்டா ரிசர்வேசன் கொடுக்க வேண்டியதில்லை.

ஜெயில்சிங் கதை உணர்த்துவது என்ன? ஒரு சமூகத்தலைவன் என்பவன் இப்படிப்பட்ட அமைப்பில்தான் இருக்க வேண்டும். சமூகத்துடன் ஒன்றிணைந்து இருக்க வேண்டும். அப்படிப்பட்ட தலைமையை நாம் உருவாக்கலை. எங்கேயோ ஒரு தலைவன் உருவாகிடுறான். நாமளும் அவன் பின்னே கைகட்டி நிற்கிறோம். ''ஐயா ஒரு ரெகமண்டேஷன், புரமோஷன்''னு. வேலை கிடைச்சா, உடனே ஒரு அசோசியேஷன் துவங்கி, தங்களோட நலத்திற்கு என்ன செய்யலாம்னு திட்டம் போடுவாங்க. இதைப்போல இந்தியாவில் 35,000 அசோசியேஷன் அம்பேத்கர் பெயரில் இருக்கு. பன்றி குட்டி போட்ட மாதிரி. ஆனாலும் இந்த அசோசியேஷனால 6 கோடி பேக்லாக் வேக்கன்சியை fillup பண்ண வைக்க முடியலை. காரணம், ஒவ்வொரு அசோசியேஷனும் யோசிக்கிறது, ''என் புரமோஷன், என் சஸ்பென்ட், என் பெனபிட்''டுன்னுதான். தன் துறையிலுள்ள இன்னொருத்தனை பற்றிக் கூட யோசிக்கிறதில்லை. இப்படி இருக்கிறதாலதான் 35000 அசோசியேஷனும், 35000 பன்றிக்குட்டி, அவ்வளவுதான். புலிக்குட்டி ஆகாது. மத்தியில் 22% ரிசர்வேசன் இருந்தாலும் உயர்பதவிகளில் வெறும் 5% தான் கிடைக்கிறது. அதிகப்படியாக 80% ரிசர்வேசன் எங்கே கிடைக்குதுன்னா? வெறும் துப்புரவு பணிகளில்தான் கிடைக்கிறது. அது 100% நமக்கு கொடுத்தா கூட ஒருத்தனும் எதிர்க்க மாட்டான். காரணம், மனுஸ்மிருதிபடி சரியான வேலையை செய்றீங்க. ஆனால் class 1 பதவிகளில் நமக்கு உண்மையான ரிசர்வேசன் கிடைக்கலை என்பதுதான் நிதர்சனமான உண்மை. அது மனுவாதிகளுக்குதான் கிடைக்குது. நாம அட்டென்டர், கிளர்க், பியுன், துப்புரவு பணிகளில் இருந்தா அவனுக்கு பிரச்சனையில்லை. மாறாக ஆபிஸர் போன்ற உயர்நிலை பதவிகளால பிரச்சனையாகிடுது. எத்தனை போராட்டம் பண்ணினாலும் எந்த துறையிலும் காலியிடம் நிரப்பபடலை. காரணம் ரிசர்வேசன் கண்டிப்பா நிறைவேத்தணும்னு சட்டமில்லை.

தொடரும்

No comments: