Sunday, September 23, 2018

ரிசர்வேசன் ( எ ) இட ஒதுக்கீடு : பாகம் - 28

அடுத்ததாக, நமது எல்லா பிரச்சனைக்கும் தீர்வை பாபாசாகேப் சொல்லிட்டு போயிட்டார். அந்த வழியை இப்பொழுதே நம் மக்களுக்கு தெரியப்படுத்தணும். நாம சிந்திக்க வேண்டியது 'அனைவருக்கும் சுதந்திரம்' என்பதை தனிமனிதனாக, மனிதாபிமானம் உள்ள, ஒரு அம்பேத்கரியர்களாக சிந்திக்கணும். அப்படி சிந்திச்சி, நாம அம்பேத்கரியர்களை உருவாக்குபவர்களாகவும் சிந்திக்க வேண்டும். இதை அரசு ஊழியர்கள், படித்த இளைஞர்களுமான நாம்தான் செய்ய வேண்டும். இப்பொழுது ரிசர்வேசன் கல்லறையை நோக்கி போய் கொண்டிருக்கிறது. ''ரிசர்வேசனை எனக்கு கொடு, இல்லையேல் ரிசர்வேசனை ரத்து செய்'' என சொல்லும் படேல் சமூகத்தினர் குஜராத்தில் தொழிலில் கோலோச்சியவர்கள். அவர்களுக்கே குஜராத் நரகமாகி விட்டது என்றால், அங்கேயுள்ள தலித் நிலை என்னவாயிருக்கும்? ''குஜராத் வளர்ச்சி''யை பாருங்கள் என கூப்பாடு போடும் நரேந்திர மோதியின் ஆட்சியின் லட்சணம் இதுதானா?  ஆக குஜராத் வளர்ச்சி என்பது கடைந்தெடுத்த பொய். ஒன்றுக்கும் உதவாத ஒருவனை கார்ப்பரேட் நினைத்தால், பிரதமராக்க முடியுமெனில், ஜெயித்த மோதி, கார்ப்பரேட்டுக்கு உதவுவாரா? பாமர மக்களுக்கு உதவுவாரா? படேல் சமூகமே இந்த அளவிற்கு போராடுகிறதென்றால், நாம் எந்த அளவிற்கு போராட வேண்டும்? சரியோ, தவறோ 22 வயது இளைஞனின் பின்னால் அணிதிரளும் படேல் இன மக்களுக்கே இவ்வளவு மனக்குமுறலென்றால், அங்கேயுள்ள தலித்துகள் நிச்சயம் பசி, பட்டினியுடன்தான் இருப்பார்கள். நாம் இதை இப்படித்தான் பார்க்க வேண்டும். ஆட்சியை R.S.S. கையில் கொடுத்துட்டு, மீடியாவை கூப்பிட்டுட்டு ஊர்ஊரா சுத்திட்டிருக்கிற இவரிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும். வெட்கக்கேடு.

52% விவசாயிங்க வறுமையில் செத்து பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள். தேசிய அளவில் தீண்டாமை கொடுமையில் தமிழகம் மூன்றாவது இடம் என நம்மை சுற்றி நடக்கும் சமூக சீரழிவிற்கு கண்டிப்பாய் நாம்தான் பொறுப்பேற்க வேண்டும். ஏன்னா, சமூக முன்னேற்றத்திற்கு நாம எதுவுமே முயற்சித்ததில்லை. பைபிள் படிக்காதவன் கிருத்தவனாயிருக்க முடியாது. குரான் படிக்காதவன் முஸ்லிமாயிருக்க முடியாது. கீதை படிக்காதவன் பார்ப்பனனா இருக்க முடியாது. அதைப்போல பாபாசாகேப் புத்தகங்களை படிக்காதவன் நல்ல அம்பேத்கரியனாயிருக்க முடியாது. ஆனால் நாமோ அவர் புத்தகங்களை படிக்காமல் நம்மையும் ஏமாற்றி, மற்றவர்களையும் ஏமாற்றுகிறோம். உதாரணமா, உங்க தாத்தா உங்கள் பெயரில் சொத்துக்களை உயிலாக எழுதி வைத்தால், அதை எப்படி நீங்கள் வரிக்கு வரி ஆராய்ந்து படிப்பீர்களோ, அதைப்போல நமக்கு மிகப்பெரும் சொத்தான பாபாசாகேப் புத்தகங்களை படிக்கிறோமா? உங்களுக்கு மட்டுமல்ல, உங்க இனத்திற்கு, ஏன் ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் 'விடுதலை' என்னும் சொத்தினை தந்த பாபாசாகீப்பை உள்வாங்குகிறோமா என்றால், இல்லை என்பதே பெரும்பான்மையினரின் நிலை. அதனால்தான் இன்றைக்கும் கூட நமக்கு இப்போதுள்ள சாதிய அமைப்பில் அரசியல் சூழ்ச்சியும், கார்ப்பரேட் சூழ்ச்சியும், வர்க்கப்பிரிவினையும், ஒன்றுமே தெரியாமல் இருக்கிறோம். பாபாசாகேப்பை படிக்காததால்தான் ஒரு கார்ப்பரேட் அடிமை கூட நம்மை ஆளுகிறான். அவங்க ஆட்சியில் மறுபடியும் வருணாஷிரமத்திற்கு கொண்டு செல்வதுதான் அவர்கள் நோக்கம். அதனால்தான் தொடர்ந்து பார்ப்பனர்கள் C.E.O.வா இருப்பதுவும், நம் மக்கள் ஜீரோவா இருப்பதுவும் தொடர்கிறது.

இப்போ நாம விளம்பரத்தில் பார்க்கிற மொத்த மொத்தம் தொழில்களும் பிராமண, ஷத்திரிய, வைசியனின் கைகளில்தான் இருக்கிறது. ஆனால் நம் மக்களோ எங்கெங்கோ போய், என்னென்ன வேலையோ செய்து, நல்லா இருக்கிற மாதிரி காட்டுகிறார்களே தவிர, நிச்சயமாய் அவர்கள் நல்ல வேலைகளில் இல்லை என்பது மட்டும் தெரிகிறது. இதற்கு காரணமும் நம் பொறுப்பற்றதனம்தான். கல்வி என்னைக்குமே அரசாங்கம் கையில்தான் இருக்கணும் என்று சட்டம் சொல்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் 2000 பள்ளிகளை இழுத்து மூடுகிறார்கள். ஏன்னா மூடுற நிலைக்கு வந்திடிச்சி. நரேந்திர மோதி அரசாங்கமோ, ''கல்விக்கு ஒதுக்குகிற பணம் வீணாகிறது. அதனால் அதிலிருந்து பாதி பணத்தை எடுத்து நெடுஞ்சாலை போட பயன்படுத்தலாம்'' என தீர்மானிக்கிறார்கள். ''ஏண்டா இப்படின்னா?'' அதற்கு வாத்யாரே இல்லாத வீடியோ கான்பரன்ஸில் ''ஸ்மார்ட் ஸ்கூல்'' ஆரம்பிச்சு டிஜிட்டலுக்கு மாறுகிறார்களாம். எத்தனை ஆசிரியர் பணி பாதிக்கப்போகுதோ?
தற்போது சென்னையில் நடந்த பிரபல தனியார்துறை இன்டர்வியுவில் வேலைக்கு தேர்வானவர்கள் 7690 பேரில் ஒருவர்கூட நம் மக்கள் இல்லை. தேர்வானவர்களின் ஆண்டு வருமானம் ரூ. 24 லட்சம்.
இதைப்போல உ.பி.யில் அரசு துறையில் 350 பியூன் போஸ்ட்டிற்கு இன்டர்வியுவில் 23 லட்சம் அப்ளிகேசன் வந்தது. அதில் 295 Ph.D. ஸ்காலர்ஸ். இதில் 100க்கு 97% S.C., S.T., O.B.C.தான். ஒருவன்கூட பிராமணன் இல்லை. என்ன நடக்கிறது? சாதிக்கேற்ற படிப்பு. படிப்பிற்கேற்ற வேலை. அதுதான் வர்ணாஷ்ரமம்.

தொடரும்

No comments: