Friday, November 16, 2018

சத்தான சில சூப் வகைகள்...

*பீட்ரூட் கீர்*: 

சிறிய பீட்ரூட் ஒன்றை சுத்தமாக்கி, தோல் அகற்றி, சிறுசிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் ஜூஸ் எடுத்து, வடிகட்டிக் கொள்ள வேண்டும். இதனுடன் அரை மூடி தேங்காய்ப் பால் கலந்து, சுவைக்கு வெல்லம் மற்றும் ஏலம், முந்திரி சேர்த்துக் கொள்ளலாம். வழக்கமாக குழந்தைகளுக்கு வழங்கும் கீருக்குப் பதிலாக இதைத் தரலாம்

*முருக்கேற்றும் முருங்கைக்கீரை சூப்*: 

கைப்பிடி அளவு முருங்கைக்கீரையுடன் நான்கு பல் பூண்டு, மிளகு, சீரகம், உப்பு, தோல் நீக்கிய இஞ்சி இவற்றை சேர்த்து, நசுக்கிக் கொதிக்க வைத்து, வடிகட்டி வழங்கினால்... அசத்தலான அயர்ன் சக்திக்கான சூப் தயார்.

*Blood சாலட்*: 

கொய்யாப்பழம், அன்னாசிப் பழத்தை சிறு துண்டுகளாக்கி அதில் பன்னீர் திராட்சை மற்றும் மாதுளம் முத்துக்களை சேர்த்து அப்படியே சாப்பிடத் தரலாம். மாலை வேளையில் ருசிக்கத் தோதான ஸ்நாக்ஸ் இது. மிளகுத்தூள் தூவி சாப்பிடலாம்.

*கொத்தமல்லி ஜூஸ்*: 

ஒரு கைப்பிடி கொத்தமல்லியை அரைத்து வடிகட்டிய சாறுடன், ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறு கலந்து, 100 கிராம் வெல்லம் சுவைக்குச் சேர்த்தால்... ரத்த அழுத்தத்தை சீராக்கி வளப்படுத்தும் கொத்தமல்லி ஜூஸ் தயார். சுலபமான ஜீரணத்துக்கு உதவும்

*Hemoglobin soup*

வாழைப்பூவின் இளம் மடல் ஒன்றை சிறுதுண்டுகளாக்கி, நான்கு பல் பூண்டு மற்றும் சிறிய வெங்காயம் ஒரு தக்காளி இவற்றை நசுக்கி, சிறிது மிளகு, சீரகம், உப்பு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டினால்... ஹீமோகுளோபின் வளத்துக்கான வாழைப்பூ மடல் சூப்பை சுவைக்கலாம்.

No comments: