Monday, December 17, 2018

நல்லதை பார்ப்போம்... வெற்றி நிச்சயம்...

*ரோஜாச்செடியில் முள் தான் அதிகம் இருக்கும் ஆனால் ரோஜாப் பூவோ ஒரு சில தான் இருக்கும்.*

*முள் அதிகம் இருப்பதால் அதை யாரும் முள் செடி என்று சொல்வதில்லை ரோஜாச் செடி என்று தான் சொல்கிறோம்.*

*அது போலத் தான் எவ்வளவு தீய குணங்கள் இருந்தாலும் ஒருவரிடம் உள்ள நல்ல குணத்தை மட்டும் பார்ப்போம்.*

*அதைச் சுட்டிக் காட்டி பாராட்டுவோம் மேலும் நல்லவர் ஆவார்கள். நல்லதைப் பார்த்தால் நல்லதே நடக்கும்...!*

*எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்*
*ஆன்ற பெருமை தரும்...!*

சிறியதான ஒரு முள்ளும்
சற்றே பெரியதான் மறுமுள்ளும்,
சேர்ந்தங்கே இயங்கும் போதே
சரியான நேரம் தெரியும்.

பெரியவர், சிறியவர் என்றவர்கள்
பாரினிலே சேர்ந்தால்தான்
பயனுள்ள நிகழ்வுகள் நிகழும்.

நான் என்னும் இறுமாப்பு கொண்டு
நானிலத்தில் நடப்போரே !

வினாடியை நிமிடமாக்கி நிமிடத்தை
வியப்பான மணியாக்கும் கடிகாரம்
வேலையற்று நின்று போனால்.....
மதிப்பில்லை.

கடிகாரம் போன்று சுறுசுறுப்பாய்
கணநேரம் நிற்காமல் தன் பணி கண்ணியமாய் புரிந்திட்டால் - புவியினிலே

*வெற்றி நிச்சயம்!*

No comments: