Tuesday, January 1, 2019

தமிழ்நாட்டின் குல தொழில் பற்றிய கருத்து...

ஆய்வு சொல்கிறது :

தமிழ்நாட்டின் பால் தேவையை 70% சதவீதம் ஆந்திராதான் பூர்த்தி செய்கிறது...

திரைகடலோடி திரவியம் தேடிய...

தொழிலில் மார் தட்டிய தமிழனை உலகமே பாராட்டிய காலம் போய்...

படிச்சு கை நிறைய சம்பளம் ( உத்தியோகம் ) வாங்கறது தான் *புருஷலட்சணம்னு* பல நாடகம் மற்றும் சினிமாவில் (50,60 ஆண்டுகளாய் ஆண்ட கட்சிகளின் சூழ்ச்சி) சொல்லி, சொல்லி நம் மனதில் பள்ளிகளில் படித்து நிறைய *மார்க்* எடுத்து  பெரிய பெரிய வெளிநாட்டு கம்பனிகளில் கூலிக்கு மாரடிக்கும் வேலையில் ( உயர் பதவியே ஆனாலும் கூலித் தொழிலாளிதான் ) சேர்ந்து *கை நிறைய சம்பளம்* வாங்குறவனுக்குத்தான் பொண்ணு குடுப்பேன்னு பொண்ண பெத்த அப்பன், ஆத்தாள் எல்லாம் மனதளவில் மாற்றி... ஒரு குழப்பமான சூழலில் நம்மை வைத்து நமது பொருளாதாரத்தை நம் கண் முன்னே சுரண்டும் அவலமும், அதன் நிர்வாகத்திற்கு நல்லா படித்த நம்மையே மேலாளராகவும் ஆக்கி... என்னவோ போங்க... கட்ட கடைசியா... பிச்சை பாத்திரமும் மிஞ்சப்போவதில்லை (சமீபத்திய புயல் உணர்த்தி இருக்கும்).

விளைவு :

குழந்தைகளை படி படி... நல்லாப் படின்னு அதிக *மதிப்பெண்கள்*  பின்னாடி ஓட விடும் சூழ்நிலையின் உச்சத்தில் தமிழினப் பெற்றோர்களின் நிலை இழிநிலையில் உள்ளது.

குறிப்பு :

இதுவரை கடந்த நூற்றாண்டில் எத்துணை ஆராய்ச்சிகள் இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் நடத்தப்பட்டு எத்துணை *ஆராய்ச்சியாளர்கள்* நமக்கு அறியப்பட்டு இருக்கிறார்கள்.

ஆக மக்கலேவின் மக்கு கல்வி மதிப்பெண்களை (மார்க்கை) நோக்கி ஓடச்செய்து... நமது முன்னோர் செய்த *குலத்தொழிலை* விட்டொழித்து நமை எல்லாம் கூலிக்கு மாரடிக்கும் நிலைக்குத்தள்ளியிருப்பதுதான் நிதர்சனமான உண்மை...

சிந்தியுங்கள்,செயல்படுங்கள்

செய்யும்தொழிலே தெய்வம்

*தொழில் செய் தமிழா*

*குலத் தொழில் உன்னை தலை நிமிரச்செய்யும்*

முனைவர் காசி.கன

No comments: