Saturday, January 12, 2019

விழிப்புணர்வு வெளிச்சம் தரும்...

மனித குலத்தின் அடிப்படை பிரச்சனைகளை கூர்ந்து கவனிபப்பதே எனது வாழ்நாள் பணியாக இருந்து வருகிறது.

அடிப்படையை புரிந்து கொண்டுவிட்டால் பிரச்சனை தானே கறைந்து போய்விடும்.

விழிப்புணர்வு வெளிச்சம் தரும்.

நான் தேவதூதுவன் அல்ல.

நான் அவதாரமும் அல்ல.

இவைகள் அகங்காரத்தின் நுண்ணிய விளையாட்டு என்பது எனக்குத் தெரியும்.

"நான் மற்ற எல்லாரையும் போல சாதாரணமானவன்.

அல்லது மற்றவர்களைப் போலவே நான் அசாதாரணமானவன்"

நான் யாருக்கும் எதிரானவன் அல்ல.

எனது தலையாய பணி என்ன தெரியுமா...???

"உங்களைச் சுற்றிலும் பரவியுள்ள பல நோய்களை அடையாளம் காட்டுவதுதான் அது"

அப்போதுதான் நீங்கள் கட்டுகளில் இருந்து விடுபட்டு சுதந்திரமாக வாழ்ந்து உய்விருப்பில் ஒன்றிவிட முடியும்.

"அகங்காரம், தன்முனைப்பு, ஈகோ இதுவே மாபெரும் கொடிய நோய்.

அது பல்வேறு வடிவமெடுக்கும்.

நீங்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.

இல்லாவிட்டால் 'தன்முனைப்பு உங்களை விழுங்கி விடும் ' நீங்கள் எளிதாக ஏமாற்றப் படுவீர்கள்.

அது உங்களின் நிழலைப் போல மிக நுண்ணிய வடிவில், நீங்கள் அறியாமலே உங்களை பின்தொடரும்.

"பொறாமை,அகங்காரம்,கோபம்,பேராசை,வெறுப்பு எனும் பகை உணர்ச்சிகளை வென்று விடுங்கள்.

அவற்றை நசுக்கி விடுங்கள் என்று எல்லா மதங்களும் கூறுகின்றன. 'அவற்றை உங்களால் போரிட்டு மாய்த்துவிட முடியாது,நசுக்கி விடமுடியாது '

ஆனால், அவை உங்களுடன் இருப்பதை உணர்ந்தவாறு உங்களால் இருக்க முடியும்.

நீங்கள் இவ்வாறு உணர்ந்தவுடன் அவை மறைந்து விடுகின்றன.

வெளிச்சம் வந்தவுடன் இருள் மறைந்து விடுகிறது."

No comments: