Sunday, January 20, 2019

குற்றப் பரம்பரைச் சட்டம் ஓர் மீளாய்வு...

'குற்றப் பரம்பரைச் சட்டம் ஓர் மீளாய்வு'

என்ற சிறுநூல் அனைவரும் தவறாமல் படித்துணர வேண்டிய ஒன்றாகும்.

இங்கிலாந்தில் ஜிப்சி இனங்களை ஒடுக்க ஏற்படுத்தப் பட்ட சட்டத்தைப் போலவே இந்தியாவில் தனிநபர்களை ஒடுக்கும் விதமாக 1836ல் போக்கிரிகள் தடைச் சட்டம் கொண்டுவரப் பட்டு பின்பு1871 அக்டோபர் 12ம் தேதி 'குற்றப் பரம்பரை சட்டம்' தாக்கல் செய்யப்பட்டது.

இந்த சட்டத்தை அறிமுகப்படுத்தி பேசும்போது டி.வி.ஸ்டீபன்ஸ் "இவர்கள் மிகப் பழமையான காலத்திலிருந்து குற்றவாளிகளாக இருக்கிறார்கள்.மேலும் ஒட்டு மொத்த இனத்தையும் கொள்ளையர்களை அழித்ததுபோல் போல் அழிக்காவிட்டால் அவர்களது வம்சா வழியினரும் குற்றங்களை செய்வார்கள்" என்றாராம்.

இக்கொடிய சட்டம் 1947ல் திரும்ப பெறப்பட்டு 1948ல் வழமையான குற்றவாளிகள் சட்டம் என்று உரு மாறியது.

இப் புத்தகத்தில் 1924ம் ஆண்டு குற்றப்பழங்குடிகள் சட்டம் திருத்தங்களுடன் கூடிய 24 சட்டபிரிவுகளுடன் எடுத்துகாட்டு வழக்குகளுடன் சிறப்பாக விவரிக்கிறது.

மூன்றுபேர் கூட்டாக செய்த திருட்டொன்றில் அவரவரின் சசாதிக்கேற்ப ஒருவர் விடுதலை செய்யப்படுகிறார்.மற்றவருக்கு ஆறு மாத தண்டனை.மூன்றம்நபர் குற்றபட்டியல் இனத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு ஆயுள் தண்டனை.

மனுதர்தமும் ஆங்கிலேய தர்மமும் உழைக்கும் மக்களுக் கெதிராக சட்டமியற்றுவதில் ஒரே பார்வையை கொண்டிருக்கின்றன.

இன்றும் அச் சட்டங்களின் நீடசியாகத்தான் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டம்-1975.
இராணுவ சிறப்பதிகார சட்டம்-1958.
ஜம்மு மற்றும் காஷ்மீர் பொது பாதுகாப்புச் சட்டம்-1978.
தடா மற்றும்பொடா சட்டங்களாகும்.
1860ல்( IPC) இந்திய தண்டனை சட்டம் உருவானது.
முதன்முதலில் தேச துரோக வழக்கு 1891ல் 'Bangobasi' என்ற பத்திரிக்கையின் மேல் போடப் பட்டது.
இதே சட்டம் பாலகங்காதரதிலகர்,அண்ணல் காந்தி,பகத்சிங் மற்றும் அவரின் தோழர்கள் மீதும் போடப்பட்டது.
சுதந்திர இந்தியாவில் கேதர்நாத்,பினாய்சென்,அருந்ததிராய்போன்றோர் மீதும் சமீபத்தில் ஹர்தீக் படேல்,தோழர் சீத்தாராம் யெச்சூரி தோழர் D.ராஜா அவர்கள் மீதும் தமிழ்நாட்டில் மதுவுக்கெதிராய் போராடிய கோவன் மீதும் பாயந்தது.

இத்தகு சட்டங்கள் மக்களின் மக்களுக்கு ஆதரவான அரசுக்கெதிரான  போர்க்குரலை அடித்து நொறுக்கவே வடிவமைக்கப் படுகின்றன.

No comments: