Saturday, January 19, 2019

துணி நாப்கின் - மக்கள் கருத்து!!!

*நேற்று இரவு திருச்சியில் இருந்து ஒரு பெண் அழைத்தார்.*

*முதலில் தங்களுக்கு மிக்க நன்றி என்றார். எதற்கு என்று கேட்டேன். உங்களது நாப்கின் குல நாசம் கட்டுரை படித்து அதிர்ந்து போனேன். ஒவ்வொரு வார்த்தையும் எங்களை சிந்திக்க வைத்தது.*

*பின் என் மகளை அமர வைத்து ஒவ்வொரு வரியாக படித்துக்காட்டினேன் என்றார். தங்கள் பிள்ளைகளும் புரிந்துகொண்டு, அம்மா இனி இதை பயன்படுத்த மாட்டேன் என்றார்களாம். பிறகு வீட்டில் உள்ள பழைய காட்டன் சேலையை வைத்து நாப்கின் தைத்து கொடுத்துள்ளார். அது அவரவது மகளுக்கு பிடித்துவிட்டதாம். அதற்கு பழகிவிட்டார்கள் என்றார்.*

*பின் ஒரு நாள் அவரது மகள் பள்ளியில் இருக்கும் போது, தனது தோழிக்கு அவசரமாக நாப்கின் தேவை ஏற்பட்டுள்ளது. உடனை தான் வைத்திருந்த துணி நாப்கின் எடுத்து கொடுத்துள்ளார். அதை அவர் பயன்படுத்தி, அவருக்கும் அது பிடித்துவிட்டதாம்.*

*பின் வீட்டிற்கு சென்றதும். தோழியின் அம்மா தங்களுக்கும் இது போல் நாப்கின் தைத்து தருமாறு கேட்டுள்ளார்கள். பின் இவர் இது போல் கேட்பவர்களுக்கு மட்டும் தைத்து கொடுத்து வந்துள்ளார்.*

*நாப்கின் கட்டுரைக்கு பிறகு ஒரு நாளைக்கு எனக்கு பத்து call வருகிறது. இப்பொழுது ஒரு தொழில் செய்யும் அளவிற்கு order எனக்கு வருகிறது. அழைப்பவர்கள் எல்லாம் தாங்கள் whats app ல் "நாப்கின் குல நாசம்" கட்டுரை படித்ததாக கூறினார்களாம்.*

*இத்தனை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது, நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை ஐயா என்றார். பின் தன் மகள் படிக்கும் பள்ளியில் இதை பார்த்து மூன்று ஆசிரியர்களும் துணி நாப்கினுக்கு மாறிவிட்டார்களாம்.*

*அதில் ஒருவருக்கு மாதம் 14 நாட்கள் மாதப்போக்கு இருந்துள்ளது. இதற்கு என்றே Sanitary pad வாங்க மாதம் 395 ரூபாய் செலவாகுமாம். இந்த துணி நாப்கின் பயன்படுத்திய பிறகு மாதப்போக்கு 4 நாட்களுக்கு வந்து Noramal ஆகிவிட்டதாக மகிழ்ச்சியாக கூறினார்களாம்.*

*பின் அந்த ஆசிரியர் என் பிரச்சனை தீர்ந்ததோடு மட்டும் அல்லாமல் எங்கள் மாத செலவும் குறைந்துள்ளது, தங்களுக்கு மிக்க நன்றி என்று ஒரு சேலை எடுத்து வந்து கொடுத்தார்களாம்.*

*மேலும் விலை கொடுத்து நாப்கின் வாங்க முடியாதவர்களுக்கு, திருச்சியில் உள்ள அந்த பெண் தன்னிடம் பழைய காட்டன் சேலையை கொடுத்தால் தைத்து தருவதாகவும். அதை தைக்க சொல்லித்தருவதாகவும் சொன்னார்.*

*நாப்கின் கட்டுரைக்கு பிறகு வெளி மாவட்டங்களில் இருந்து Order வருவதாகவும். அவர்களிடம் இவர் ஏன் இவ்வளவு தூரம் வந்து வாங்குகிறீர்கள். உங்கள் சேலையை வைத்து நீங்களே தைத்துக்கொள்ளுங்கள் என அனைத்து தகவல்களையும் அவர்களுக்கு அனுப்பி விடுவாராம்.*

*நாப்கினை மாற்றிய பிறகு - நீர்கட்டி கரைந்தது.*

*நாப்கினை மாற்றிய பிறகு - குழந்தை உண்டானது.*

*நாப்கினை மாற்றிய பிறகு - Felopian tube block காணாமல் போனது.*

*நாப்கினை மாற்றிய பிறகு - அரிப்பு Allergy, irritation மறைந்தது.*

*நாப்கினை மாற்றிய பிறகு - அதிக உதிரப்போக்கு (14 days) 3 மாதத்தில் Normal ஆகி மாதம் ஆயிரம் ரூபாய் மிச்சமானது.*

*நாப்கினை மாற்றிய பிறகு - மன அமைதி, Mental free, ஆழ்ந்த தூக்கம் கிடைத்தது.*

*என தொடர்ந்து அழைப்பு வந்து கொண்டே இருக்கிறது.*

*மக்களிடம் நல்ல ஒரு மாபெரும் மாற்றத்தை காண முடிகிறது.*

*துணி நாப்கின் பயிற்சி தேவைப்படுவோர் இந்த எண்ணில் அழைக்கலாம் 9843058855*

*இனி தமிழ் சமூகத்தை எந்த கொம்பனாலும் ஏமாற்ற முடியாது.*

*நன்றி*

*இரா.மதிவாணன்*

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

No comments: