Friday, January 25, 2019

குங்குமம் தயாரிக்கும் முறை மற்றும் அதன் பயன்கள்...

தேவையான பொருட்கள்...

மஞ்சள் தூள் பவுடர் 300 கிராம்

தாழம்பூ ஜூஸ் தேவைக்கேற்ப

படிகாரம் 50 கிராம்

வெங்காரம் 25 மில்லி கிராம்

சிப்பி சுண்ணாம்பு தண்ணி 200 மில்லி லெமன் எலுமிச்சை 10

கோணிப்பை 1

சாதாரண மண் அல்லது மாட்டு சாணம்

மண்பானை 1

சிப்பி சுண்ணாம்பு தண்ணீர் செய்யும் முறை :

சிப்பியை ஒரு நாள் முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து அதில் மேலோட்டமான தண்ணீரை எடுத்துக் கொள்ளவும்.

மண்பானையின் பதம் :

புதிய மண்பானையை இரண்டு நாட்கள் தண்ணீர் நிரப்பி வைத்துக் கொள்ளவும் பின்பு இரண்டு நாட்கள் வெயிலில் வைத்து எடுத்துக் கொள்ளவும்.

செய்முறை:
இப்படி தயார் செய்த மண்பானையில் மேலே சொன்ன பொருட்களில் மஞ்சள் தூள், தாழம்பூ, படிகாரம், வெங்காரம், சிப்பி தண்ணி மற்றும் எலுமிச்சைச்சாறு இந்த அனைத்து பொருள்களையும் மண்பானையில் வைத்து நன்றாக கலக்கவும். இப்பொழுது கலக்கிய பிறகு இந்த மண்பானையை நாம் ஒரு கோணிப்பையில் மாட்டு சாணம் அல்லது தெருவில் இருக்கும் மண் நடுவில் வைத்து பையை நன்றாக கெட்டி வைக்கவும்.

இந்த கோணிப்பையை தினமும் 21 முதல் 48 நாள் வரை சூரிய வெளிச்சத்தில் காலையில் வைத்து எடுக்கவும். சுத்தமான குங்குமம் தயார்...

குங்குமத்தின் பயன்கள்...

நம் கபாலத்தில் உள்ள சிந்தனை நரம்புகள் இரு புருவங்களுக்கு இடையில் உள்ளது. மனிதன் அதிகமாக சிந்திக்கும்போது சிந்தனை நரம்புகள் சூடேறி நெற்றி வலி தலைபாரம், தலைச்சுற்றல், மன உளைச்சல் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம். மனித உடலில் தெய்வ சக்தி வாய்ந்தது நெற்றிக்கண். அதாவது, இரண்டு புருவங்களுக்கு நடுவிலுள்ள பகுதி. இங்கு குங்குமத்தை இட்டால் அமைதி கிடைக்கும்.

சந்தனம், திருநீறு, குங்குமம் இவைகளுக்குக் குளிர்ச்சியூட்டும் தன்மை உண்டு. எனவே அந்த நரம்பு மண்டலம் குளிர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகச் சந்தனம் பூசி, சந்தனம் காயாமல் இருக்க குங்குமம் இடுகிறோம். இவற்றை தரித்தால் புத்துணர்வும், புதுத் தெளிவும், புதிய சிந்தனைகளும், உற்சாகமும்  தோன்றும். இதன் மூலம் உணர்ச்சியற்ற நரம்புகள் கூட தூண்டப்படுகின்றன.

No comments: