Thursday, January 24, 2019

தமிழர்களுக்கு அமைப்பாக ஓர்மைபட தெரியாதா?

உலகின் எல்லா ஆதித்தொல்குடி இனங்களுக்கும் இருந்த; இருக்கின்ற சிக்கலையே இன்று நாமும் சந்தித்துக் கொண்டிருக்கின்றோம்.

தொல்குடிகள் உணர்வுப்பூர்வமானவர்கள்; நுண்ணிய அறிவுப்புலமிக்கவர்கள்; கடுமையான உழைப்பாளிகள்; உடல் வலிமைமிக்கவர்கள்; யாரையும் சார்ந்து வாழாத தற்சார்பு வாழ்வியலை வரிவித்துக் கொண்டவர்கள்.

இத்தனை பெருமைகள் இருந்தும் அவர்களுக்கு இருக்கின்ற ஒரே சிக்கல் எளிதில் ஓர்மைபடமாட்டார்கள். ஒருமித்த கருத்துகொண்ட அமைப்பாக ஒன்றுபடமாட்டார்கள் என்பதே..

காரணம்...
தன்முனைப்பு...

இதே தன்முனைப்பு யூத இனத்திற்கும் கிரேக்க இனத்திற்கும் செவ்விந்தியர்களுக்கும் மங்கோலியர்களுக்கும் இருந்ததால்தான் அவர்கள் வீழ்ந்தார்கள் அல்லது அழிந்தார்கள்.
இதனை புரிந்து கொண்ட யூதர்கள் பிற்பாடு எழுச்சியுற்று இன்று உலகையே ஆளும் வலிமையோடு வளம்வருகிறார்கள். இப்புரிதல் இல்லாத மற்றவர்களே இன்னும் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழர்களைப்பற்றி உலகின் பலநாடுகளின் மக்களுக்கு உள்ள புரிதல் என்ன தெரியுமா?

ஒரு தமிழன் செய்கின்ற வேலையை நூறு ஜப்பானியர்களாலும் செய்ய முடியாது. அதேசமயம் ஒரு ஜப்பானியன் செய்யும் வேலையை நூறு தமிழன் ஒன்றுசேர்ந்து செய்ய பணிக்கப்பட்டால் அப்பணி ஒருபோதும் நிரைவடையாது என்ற பொதுவான கருத்துண்டு.

தொல்குடி இனங்கள் தனிமனித வெற்றியைக் கொண்டாடும்; கூட்டு வெற்றியைக் கேளிபேசும். இந்த இடத்தில்தான் நமது இனமும் பிழை செய்தது; செய்கின்றது.

ஏன் தமிழ் சமூகம் சினிமாவின்மீது இவ்வளவு மோகம் கொண்டுள்ளது?
ஏன் மலையாள சமூகம் சினிமாவை யதார்த்தமாக கடந்து செல்கிறது?

தமிழர்கள் கதாநயகனின் சாகசத்தை தாங்களும் செய்வதுபோல மனதளவில் கற்பனை செய்து வாழப்பழகுகிறார்கள். தன்முனைப்பு என்பது நல்லதோ கெட்டதோ நானே செய்வேன்; எல்லாத்திற்கும் நானே மூலமென காட்டுவது.

எ.கா கில்லி திரைப்படத்தில் தோல்வியின் விளிம்பில் உள்ள தனது கபாடி அணியை கடைசி ஒரு நிமிடத்தில் விஜய் வெற்றிபெற வைப்பதுபோன்று காட்சிப்படுத்தும்போது அது தான்தான் என்ற உளவியலுக்குள் சென்ற போதை மனநிலையை அடைகிறார்கள் தமிழர்கள்.

ஆனால் மற்ற மொழிப்படங்களோ; ஹாலிவுட் படங்களோ பெரும்பாலும் கூட்டு முயற்சியால் ஒரு வெற்றி சாத்தியப்படுவதாக காட்சிப்படுத்துகிறார்கள். இந்த வேறுபாடு கவனிக்கப்பட வேண்டியது.

இந்த தன்முனைப்புதான் தன்னில் இருந்து ஒரு தலைவன் உருவாகி ஒரு ஆழமான கருத்தை முன்வைக்கும் போது...

'ம்... அவன் என்ன என்னைவிட புத்திசாலியா?
அவன் எல்லாம் ஒரு ஆளா?.
அவன் சொல்வது பொய்...
நான் சொல்வதே சரி...
நான் அவனைவிட திறமைசாலி தெரியுமா?
வந்துட்டான் புதுசா கருத்துசொல்ல..
அவன் ஒரு அரைவேக்காடு...
அவனைவிட நானே முழுதும் கற்றறிந்த ஆகச்சிறந்தவன்..
அவன் சொல்வதையெல்லாம் ஏற்க முடியாது... நான் சொல்வதைத்தான் எல்லாரும் கேட்கனும்...'

இப்படி அத்தலைவன்மீது ஆயிரம் குறைபேச ஆரம்பித்துவிடுகின்றோம்...
எளிதில் பிரிந்தும் போகின்றோம்..

அதே நேரத்தில் வேறுவொரு இனத்தைச் சார்ந்த ஒருவன் வந்தால்...
'உள்ளூர் மாடு விலைபோகாது' என்ற கதையாக...
அவனைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுகின்றோம்...

இதைத் தெளிவாக புரிந்து வைத்திருந்த ஈவேராமசாமி ஒரு கூட்டத்தில் இப்படி பேசுகிறார்...

''ஏய்... தமிழர்களே!
மூடர்களே!
இழிபிறவிகளே!
காட்டுமிராண்டிகளே!
உங்கள் இனத்தில் இருந்து உங்களை வழிநடத்த ஒருவனும் பிறக்கவில்லை...

உங்களை நெடுநாட்களாக வழி நடத்தும்..
சர்பிடி தியாகராயர் ஒரு தெலுங்கர்...
டி எம் நாயர் ஒரு மலையாளி...
நானோ ஒரு கன்னடியன்...
நாங்களே மும்மூர்த்திகளாக இருந்து உங்களை வழிநடத்துகிறோம்'' என்றார்...

நிற்க... கவனிக்க...
இது தமிழ்தேசிய இனத்திற்கு அவமானம் இல்லையா?.
ஈவேரா சொல்லி இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் தெலுங்கர்கள் கருணாவோ ஸ்டாலினோ வைகோவோ விஜயகாந்தோ...
மலையாளி எம்ஜியாரோ..
கன்னடர் ஜெயாவோ கமலோ...
மராத்தி ரசனியோதான் தலைவனாக வரவேண்டும் என்பதோ அவர்களின் தலைமையில் ஓர்மைபடுவதோ அசிங்கம் இல்லையா?...

இந்த அசிங்கம் ஏன் தமிழ்தேசிய இனத்திற்கு வருகிறது?

தன்னின ஓர்மைக்கு தடையாக நிற்பதும்;
தன்னினத்தில் தலைவன் உருவாகமல் தடுப்பதும் தன்முனைப்பின் மூலாதார விளைவுகள் எனில் அதன் பக்கவிளைவே தமிழர் அல்லாதோரை தலைவனாக ஏற்பது.

சற்று யோசித்துப்பாருங்கள்...

தமிழரல்லாதோர் ஒரு கட்சியில் இருந்து விலகினால் இன்னுமொரு தமிழரல்லாதோர் தலைமையைதான் ஏற்பார்கள் அல்லது தாங்களே தனியாக கட்சி ஆரம்பிப்பார்களேயொழிய ஒருபோதும் ஒரு தமிழனை தலைவனாக ஏற்கமாட்டார்கள்.

காரணம்..
அவர்களுக்குள் ஒரு உள்ளார்ந்த புரிதலுண்டு வெற்றியோ தோல்வியோ அது நம்மினத்தவர்களே அடையவேண்டும். நம்மினத்தில் ஒருவன் வென்றாலே மகிழ்ச்சியாக இருப்போமென அவர்கள் உணர்கிறார்கள் அல்லது விட்டுக்கொடுக்கிறார்கள்.

இந்த விட்டுக்கொடுக்கும் பண்பே தன்முனைப்பின்மை. தன்முனைப்பை ஒட்டுமொத்த தமிழ்சமூகத்தின் உளவியலில் இருந்து துடைத்தெரிவதே நமது முதல் வேலையாக அமையவேண்டும்.

விட்டுக்கொடுங்கள்... கெட்டுபோகமாட்டீர்கள்... தமிழராய் ஓர்மைபடுங்கள்... இனமும் தலைத்தோங்கும்...

தமிழன் என்ற போர்வையில் தமிழ்நாட்டை ஆரியனும் பார்ப்பானும் திராவிடனும் ஆட்கொண்டு தமிழ் மண்ணின் மைந்தர்களுக்கு வேலைகள் கிடைப்பதில்லை தமிழினமே இதைப் புரிந்து கொள் ஒரே வழி நாம் தமிழர் கட்சி தமிழ் மண்ணை வென்றெடுத்தால் முழுவதும் தமிழர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் இணைவோம் நம் தமிழ்நாடு வென்றெடுப்போம் தமிழ்நாட்டை...

No comments: