Monday, January 14, 2019

தனி தமிழ் இயக்கம் தேவை...

*உலகெங்கும் தமிழர் பொருளாதார கட்டமைப்பு செழிக்க தமிழ் கல்வி, மற்றும் மரபுகளை மீட்டோம்,  வளர்ப்போம்,  செழிப்போம்!*

*அனைத்து இடங்களிலும் தமிழ் அழியும் நிலையில் தான் திண்டாடுகிறது, ,  தமிழர்களால் புறக்கணிப்பு செய்யப்படுகிறது......*

*ஆனால் தமிழர்கள் நினைத்தால் அடுத்த 20 ஆண்டுகளில் தமிழ் அசைக்க முடியாத உலக மொழியாக உருவெடுக்கும்*

மீண்டும் ஒரு தனி தமிழ் இயக்கம் தேவைபடுகிறது,....

சராசரியாக, , ,  தமிழ் நிகழ்ச்சிகளில் ஆங்கிலம் மற்ற மொழி கலப்பு பற்றிய செய்தி , , 

திரைபடங்கள் - 30%

தொலைகாட்சி நெடு்தொடர்கள்- 40%

விளம்பரதாரர் நிகழ்ச்சிகள் - 50%

நில வீட்டு விற்பனை விளம்பரங்கள் - 60-70%

30% தமிழர்களிடம்  கைபேசியில் தமிழ் தட்டச்சு வசதி இல்லை அ தட்டச்சு செய்ய தெரியாது அ இல்லை அ பழகிக் கொள்ளவில்லை

50% விழுக்காடு தமிழர் பயன்படுத்தும் கணிணியில் தமிழ் தட்டச்சு வசதி இல்லை அ ஆர்வமில்லை அ தெரியாது அ பழக்கம் வரவில்லை

75% தமிழர் வங்கி தனியியங்கி எந்திரங்களில் தமிழ் பயன்படுத்துவதில்லை

90% தமிழர் வங்கிகளில் தமிழ் பயன்படுத்தி எழுதுவதில்லை

தமிழர் கோவில்களில் 80% தமிழ் பயன்பாடு இல்லை,

தமிழர்களின் நாளாந்திர பேச்சு வழக்கில் 35%-60% வேற்று மொழி கலந்துள்ளது, 

தமிழ்நாட்டில் 35% சதவித மாணவர்கள் தமிழ் வழி பள்ளியில் பயில்விதில்லை,, , 

தமிழகத்தில் 30 %,  ஈழத்தில் 25% வேலைவாய்ப்பு மாற்றிதனத்தாரிடம், 

தமிழகத்தில் 50% தொழில் முனைவோர் வேற்றினத்தார்

தமிழகத்தின் 35%,  ஈழத்தில் 25% பாரம்பரிய நிலங்கள் தமிழர்களிடம் இல்லை , 

ஈழத்தில் இராணுவ,  காவல்,  நீதி,  அரசாங்க முக்கிய பொறுப்புகளில் 97% தமிழர் இல்லை, 

தமிழகத்தில் இரயில்வே,  விமானசேவை,  வங்கி, தபால்,  மத்திய நிறுவனம்,  மாநில அரசு நிர்வாகம் போன்ற துறைகளில் சராசரியாக 50% தமிழர் அல்லாதோர்,   , 

கிட்டத்தட்ட 2 கோடி தமிழர்கள் தமிழகத்திற்கு வெளியே,  இந்தியாவின் மற்ற பகுதிகளில் வாசிக்கிறார்கள், ,  விந்தியத்திற்கு வடக்கே சற்றே குறைவாக, , 

8 -9 லட்சம் பேர் மலையக பகுதியில்,  10 லட்சம் தமிழ் பேசும் இந்து,  முஸ்லீம்,  கிருத்தவ தமிழர்கள் ஈழப் பகுதி தவிர்த்து சிங்கள பகுதியில் வசிக்கின்றனர்,  ஆக மொத்தம் 18 லட்சம் பேர் சிங்களர் மத்தியில் வசிக்கும் தமிழர்கள், 

கிட்டத்தட்ட 7 லட்சம் சிங்களர்கள் ஈழ தமிழ் பகுதியில் கடந்த 150 வருடங்களாக மெதுவாக குடியேறி வசிக்கிறார்கள், 

மேலும் 10 லட்சம் பேராவது இலங்கையை  தாயகமாக கொண்ட தமிழர்கள் வெளியே புலம்பெயர்ந்தோராக வசிக்கிறார்கள்,  மேலும் 70 களில் கிட்டத்தட்ட 3-4 லட்சம் மலையக தமிழர் திருப்பி தமிழகம் அனுப்பப்பட்டார்கள், 

80% இந்திய மத்திய அரசு பணிகளுக்கு தமிழ் தேர்வு மொழி அல்ல,  இலங்கையில் அப்படி அல்ல

புலம்பெயர்ந்த தேசங்களில் கனடா,  சிங்கப்பூர்,  மலேசியா,  நாடுகளில் தமிழ் வளமான நிலையில்,  பர்மா, மொரீசியஸ்,  ரீயுனியன்,  தென் ஆப்பிரிக்கா,  இங்கிலாந்து,  பிரான்ஸ்,  அமெரிக்கா,  சில ஐரோப்பிய நாடுகள்,  ஆஸ்திரேலியா,  இந்தோனேசியா,  பிஜி,  ஆகிய நாடுகளில் தமிழ் வளரும் நிலையில், , ,  கரீபிய நாடுகள்,  செஷல்ஸ் மீள் எழுப்ப வேண்டும், , 

இந்தியாவில் கர்நாடகா, அந்தமான்,  ஆந்திரா, கேரளாவில் பல தமிழ் மொழி பள்ளிகளும் மற்றும் இரண்டாவது,  மூன்றாவது மொழியாகவும் கற்பிக்கும் சூழல் வாய்க்கிறது,  மணிப்பூர்,  ஹைதராபாத்,  தில்லி, சண்டிகர்,  மும்பையில் சில பள்ளிகளில் தமிழ் மொழி கற்பிக்கப்படுகிறது, , , 

*கிட்டத்தட்ட 3 கோடி தமிழர்கள்,  ஈழம்,  தமிழக பூர்வீக பகுதிகளில் இருந்து வெளியில் புலம்பெயர்ந்து வசிக்கின்றனர் ,..... ஆக மொத்தம் எப்படியோ இன்றைய நிலையில் தமிழர் என்ற மொழி சார்ந்த அளவீட்டில் படி கிட்டத்தட்ட 11 கோடி மக்களை அடக்கலாம்*

இப்போதும் கிட்டத்தட்ட 3-4  கோடி பேர் தமிழ் நிலம் அருகில் வசிப்போர் அல்லது குடியேறியவர், அல்லது குடியேறிய தமிழர் அருகில் வசிப்போர் என தமிழ் மொழியை நன்றாக பாதிக்கும் மேல் பேச தெரிந்தவர்கள், ,  அல்லது முக்கியமான 300 சொற்கள் வரை பேச அறிந்தவர்கள், 

இதன் மொழி பேசும் எல்லை விரிவாக்கம் அடைந்தால்,  அடுத்த 20 ஆண்டுகளில் 20 கோடி பேர் தமிழ் மொழி அறிந்தவர்கள் உலகில் இருக்கலாம், , , 

நம் மொழி பல வழிகளில் வளர,  செழிக்க,  உலகில் முக்கிய பொருளாதார மொழியாய் அடுத்த 20 ஆண்டுகளில் உருவெடுக்க வாய்ப்புகள் அதிகம், ,  அதற்கு நாம் தான் முதலில் மாற வேண்டும்,   , ,  தமிழாய்,  தமிழ் பேசும்,  எழுதும்,  படிக்கும்,  கற்க்கும்,  கற்பிக்கும்,  புழங்கும்,  வழங்கும்,  அனைத்து இடங்களிலும், , , , இருத்தல் தேவையானது.

இது தான் உண்மை நிலை, , , , 

தமிழகத்திற்கு வெளியே, 
கேரளா,  கர்நாடகா,  ஆந்திரா,  தெலுங்கானா,  மராட்டியம் ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் இன்று செயல்பாட்டில் இருக்கும் தமிழ் மொழி கற்பிக்கப்படும் பள்ளிகள் யாவை,?  அவைகளின் மாணாக்கர்களின் வருகை எண்ணிக்கை எவ்வளவு?
ஆசிரியர்கள் எண்ணிக்கை எவ்வளவு?
முன்பு அதே பகுதிகளில் 1950- 1970 களில் செயல்பட்ட தமிழ் பள்ளிகள் எத்தனை?
அந்த எண்ணிக்கையை விட தற்போது தமிழர் தமிழ் மொழி சாதித்தது என்ன?
இழந்தது என்ன?
என்ற தரவுகள் எந்த தமிழர் தமிழ் அல்லது திராவிட அமைப்புகளிடம் அல்லது அரசியல் கட்சிகள் அ தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி ஆர்வலர்களால் அ தனி நபர்கள் அ ஊடகவியலாளர்கள் என்று எங்கு சேகரிக்கப்பட்டு இருக்கிறது?

தேடிய வகையில் எங்கும் கிடைக்கவே இல்லை,...

ஆனால்,  கூத்தாடி தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை நடத்தும் நிகழ்வு மட்டும் ஆண்டு தோறும் செம்மையாக செழிப்பாக நடக்கிறது, ....

இந்த ஆர்வத்தை நேரத்தை உழைப்பை பணத்தை மூடப்படும் கிடக்கும் தமிழ் பள்ளிகளுக்கு கொஞ்சம் திருப்பி விட்டால் தமிழ் வளரும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை,....

கேரள, ஆந்திரா,  தெலுங்கானா,  மராட்டியம்,  கர்நாடகா பல்கலைக்கழகங்களில் இருந்த தமிழ் இருக்கைகளின் செயல்பாடுகள் இன்று சுருங்கி போய் விட்டது,  ஆனால் நாம் ஹார்வர்ட் பற்றி கதைக்கிறோம்.

விரைவில் ஒரு பத்தாண்டுகளில் கர்நாடகா,  ஆந்திரா,  கேரளா,  தெலுங்கானா,  மராட்டியம் ஆகிய மாநிலங்களில் வாழும் இரண்டு கோடி தமிழர்களின் கல்வி நிறுவனங்கள்,  பள்ளிகள், மரபுகள்,  வரலாறு,  அரசியல் எப்பாடு பட்டாவது மீட்டெடுக்கப்பட அனைவரும் சேர்ந்து பணியாற்றும் நிலைக்கு தமிழர்கள் விழிப்புணர்வு பெற வேண்டும் என்பது தமிழ் தமிழர் வளம்பெறவே என்று செய்படுவோம்,.....

அமெரிக்கா,  கனடா,  ஆஸ்திரேலியா,  நியூசிலாந்து,  ஐரோப்பா,  வளைகுடா ஆகிய பகுதிகளில் உள்ள நாடுகளில் தமிழ் வளர்ச்சியின் குறியீடுகளை ஈடிணையற்ற கல்வி பணியையும் வளர்ச்சியையும், காணும் போது தமிழ் தாய் ஒரு பக்கம் மகிழ்ச்சியும் அடைகிறாள்.

ஆகவே பூமி பந்து முழுக்க நடக்கும் இக் கல்வி பணியை மேலும் ஊக்கப்படுத்தி, உதவியளித்து, ஆலோசனைகளித்து, ஒருமுகப்படுத்தி நடத்திட தன்னார்வம் கொண்டவர்கள் மற்றும் அந்த அந்த பகுதியில் செயலாற்றும் செயல்பாட்டாளர்களை இணைக்க அழைக்கிறோம். வருக வருக,  தமிழை வளர்க்க,  தமிழர் வென்று செழிக்க...

No comments: