Saturday, July 20, 2019

பணத்தால் வாங்கமுடியாத விசயங்கள்...

வாழ்க்கையின் விலையுயர்ந்த செல்வங்கள் அனைத்தும் பணத்தால் வாங்கமுடியாத விசயங்களே
--
காலை 5 மணிக்கு எழுந்து நான் என்ன செய்யபோறேன்? எனக்கு வயசு 60 ஆகிடுச்சு. இனி நான் என்ன கோட்டையா கட்டபோறேன்?
தலைமைபண்பை வளத்திகிட்டு எனக்கு என்ன பிரயோஜனம்? என் பேச்சை என் பையனே கேட்கமாட்டேன் என்கிறான். நான் யாருக்கு போயி இனி தலைவன் ஆகணும்?
ஜிம்முக்கு போயி உடம்பை வளத்தி என்ன பிரயோஜனம்? நான் என்ன மல்யுத்த போட்டிக்கா போகபோறேன்?
அடிக்குற வெயிலில் எதுக்கு எட்டு கிமி ஓடணும்? ஏசி ரூம்ல உட்கார்ந்துகிட்டு ரன்டாஸ்டிக் ஆடினா போதாதா?
இது எல்லாம் எக்ஸ்கியூஸ் மட்டுமெ.
மறுமுறை சொல்லிப்பார்த்தால் உங்களுக்கே சிரிப்பு வரும்.
வாழ்க்கையில்->
ரொம்ப கூடுதலான ஆரோக்கியம்
ரொம்ப கூடுதலான மகிழ்ச்சி
ரொம்ப கூடுதலான மனநிறைவு உள்ள குடும்பம்னு எதுவும் இல்லை....
இவை எல்லாமே எல்லை இல்லாத விசயங்கள். எத்தனைகெத்தனை இவற்றை சம்பாதிக்க முடிகிறதோ அத்தனைக்கு அத்தனை இவற்றை சம்பாதிக்கவேண்டும்.
அதுபோல கல்யாணம், குடும்பம், பிள்ளை,குட்டி என வந்துவிட்டாலே நீங்கள்  தலைவர்தான்.
உங்களை நம்பி ஒரு பெண், இரு குழந்தைகள், தாய்,தந்தை....இப்போது நீங்கள் ஒரு ஆல்பா ஆண். இந்த சின்னஞ்சிறு குருவிகூடு உங்களை நம்பி. உங்கள் தலைமைப்பண்பை நம்பி.....
நீங்கள் காலை 10 மணிக்கு எழுந்து பேப்பர் படித்துவிட்டு, சோசியல் மீடியாவில் சுற்றிவிட்டு 11 மணிக்கு ஆபிஸ் போனால் உங்கள் மகன்/மகள் அதைத்தான் இமிடேட் செய்வார்கள்.
அல்லது காலை 6 மணிக்கு எழுந்து உடல்பயிற்சி, கற்றல், தியானம், செய்தால் அவர்களும் அதையே பின்பற்றுவார்கள்.
தினமும்:
உடல்பயிற்சி
படிப்பது
கற்பது
இது மூன்றையும் ஒரு மாதம் தொடர்ந்து செய்தால் அதன்பின் ஒரெ ஒரு நாள் செய்யாமல் இருந்தால் பல்துலக்காமல் காலை உணவு உண்ணும் உனர்வு வரும்.
வேறுபாடு நமக்கே தெரியும்.
தொடர்ந்து இரு நாட்கள் படிக்காமல் இருந்தால் மூளை மந்தமானது போன்ற உணர்வு வருகிறது :-)
ஒரு மாதம் தொடர்ந்து படித்தால் அதன்பின் சினிமா, நெட்பிளிக்ஸ் ஆர்வம் சுத்தமாக போய்விடும். 50 வயதில் அம்புலிமாமா, பாலமித்ரா, கோகுலம் எல்லாம் படித்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் அதன்பின் அவை இருக்கும்.
குப்பை உணவு கதையும் அப்படித்தான்...வீட்டில் சமைத்த ஆரோக்கிய உணவை உண்டு பழகினால் அதன்பின் ஓட்டல் உணவு, ஜன்க்புட்டை கண்டாலே கடுப்பாகும்.
நாலு நாள் வெளியூர் போனவர்களை கேட்டுபார்க்கவும்.."எப்படா வீட்டுக்கு வந்து வீட்டு சாப்பாடு சாப்பிடலாம்னு இருந்தோம்" என்பார்கள்.
அதற்காக பொழுதுபோக்குகள், சினிமா, ஜன்க்புட் வேண்டாம்னு சொல்லலை. வாரம் ஒரு சினிமா, பண்டிகை சமயம் இனிப்புகள் என இருந்தால் அதை இன்னமும் கூடுதலா எஞ்சாய் பண்ணமுடியும்.
வாழ்க்கை மிக எளியது
கெட்ட பழக்கமின்மை
உடல்பயிற்சி
நல்லுணவு
உழைப்பு
குடும்பம்
நட்பு
..இவற்றுடன் நிற்கும்வரை நம் வாழ்வு மகிழ்ச்சியாக இருக்கும்.
இவற்றில் ஒன்று குறைந்தாலும் அதை அதன்பின் மற்றவற்றால் ஈடுகட்ட முடியாது
கோடி, கோடியா சம்பாதித்தும் உடல் நலமில்லாமல் இருந்தால் என்ன பலன்?
உடல்நலம், பணம், வேலை எல்லாம் இருந்தும் குடும்பத்தில் அமைதி இல்லை என்றால் என்ன பலன்?
நல்ல வெற்றிகரமான வாழ்க்கைக்கு இவை அனைத்துமே வேண்டும்.
இவை அமைந்தால் அதன்பின் வேறு எதற்கும் ஆசைப்படவேண்டாம்.
தலைக்கு மேல் ஒரு கூரை, ஆரோக்கியம், மூன்று வேளை நல்லுணவு, மாலை வீட்டுக்கு வந்தால் பாசமாக வந்து கட்டியணைக்க ஒரு பிள்ளை...இவை அமைந்தால் அதன்பின் அந்த கூரை ஒரு குடிசை வீடா அல்லது மாளிகையா என்பதில் எந்த கவலையும் வேண்டியது இல்லை.
வாழ்க்கையின் விலையுயர்ந்த செல்வங்கள் அனைத்தும் பணத்தால் வாங்கமுடியாத விசயங்களே
அவற்றை நம் பண்பாலும், முயற்சியாலும் மட்டுமே அடையமுடியும்.

No comments: