Tuesday, July 9, 2019

உங்களுடைய நண்பர்களை ஞானமாய் தேர்ந்தெடுங்கள்...

*_உங்களுக்குள் ஒரு பொக்கிஷம் இருக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா?_*

*உங்களுடைய முத்துக்கள், உங்களைச் சுற்றியிருக்கிற உலகத்திற்கு ஒரு ஆசீர்வாதமாய் வாழும்படி தேவன் உங்களுக்குத் தந்திருக்கிற வரங்கள், தாலந்துகள், திறன்கள் என்று புரிந்து கொள்ளுங்கள்.*

*_உங்களைச் சுற்றி உண்மையான நண்பர்கள் இருக்கும்போது, அவர்கள் உங்களுடைய வரங்கள் மற்றும் திறன்கள் குறித்து பொறாமை கொள்ள மாட்டார்கள்._*

*அவர்கள் உண்மையாகவே உங்கள் மீது நம்பிக்கை வைத்திருப்பார்கள்.*

*_உங்களுடைய திறன்களைக் குறித்து அவர்கள் சந்தேகம் கொள்ள மாட்டார்கள்._*

*அவர்கள் உங்களுடைய கனவுகளைக் கலைக்க மாட்டார்கள்.*

*_உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், உங்களுடைய முத்துக்களை மெருகேற்றும்படி அவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள்._*

*உங்களுடைய திறன்களில் நீங்கள் மேன்மேலும் வளரும்படி அவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள்.*

*_வேறு வார்த்தைகளில் சொன்னால், அவர்கள் உங்களுக்கு நல்ல ஐடியாக்களைக் கொடுப்பார்கள்._*

*அவர்களுக்குத் தெரிந்த நல்ல நபர்களோடு உங்களுக்கு தொடர்பு ஏற்படுத்திக் கொடுப்பார்கள்.*

*_நீங்கள் இன்னும் முன்னேறிச் செல்வதற்கு, அவர்கள் உதவி செய்வார்கள்._*

*மாறாக, உங்களுடைய வரங்கள் மற்றும் திறன்களின் மதிப்பை உணராதவர்களோடு நீங்கள் இருப்பீர்கள் என்றால்,*

*_உங்களால் என்ன செய்ய முடியும் என்பதை அறியாதவர்களோடு நீங்கள் சுற்றிக் கொண்டிருப்பீர்கள் என்றால்,_*

*உங்களுடைய முத்துக்களை பன்றிகளுக்கு முன் போடுகிறீர்கள் என்று அர்த்தம்.*

*_பன்றிகளுக்கு முத்துக்களின் மதிப்பு தெரியாது. அவைகள் அவற்றை மிதித்து விடும்._*

*நீங்கள் யார் என்பதைக் குறித்து சந்தோஷப்படுகிறவர்களுடன் நீங்கள் நெருக்கமான நட்பை வளர்த்துக் கொள்ள வேண்டும்.*

*_நீங்கள் வெற்றி பெறும்போது, அவர்கள்தான் சந்தோஷப்படுவார்கள்._*

*உங்களுக்குள் இருக்கும் மிகச் சிறந்ததை நம்புகிறவர்களாய் அவர்கள் இருப்பார்கள்.*

*_உங்களுக்கு எவ்வளவு அதிகமான நண்பர்கள் இருக்கிறார்கள் என்பது முக்கியம் அல்ல._*

*உங்களுடைய நண்பர்களின் தரம்தான் முக்கியம்.*

*_இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஆகையால் தேவன் உங்களை அழைத்த பிரகாரமாய் நீங்கள் வாழும்படி, உங்களுடைய நண்பர்களை ஞானமாய்த் தேர்ந்தெடுங்கள்._*

No comments: