Saturday, July 6, 2019

ஊழியர் ஜாண் வெஸ்லி நியமித்த பன்னிரண்டு ஒழுங்குகள்...

இங்கிலாந்து ஊழியர்  ஜாண் வெஸ்லி நியமித்த பன்னிரண்டு ஒழுங்குகள்

1. ஊக்கமும் சுறுசுறுப்பும்    உள்ளவனாயிரு..ஒரு
போதும் சும்மாயிராதே..
உன் கரங்கள் எப்போதும் ஏதாவது ஒரு பயனுள்ள வேலையில் ஈடுபட்டிருக்கட்டும்..

காலத்தை வீணாக்காதே..
தேவையான இடத்தில் அவசியமான அளவு நேரத்தை விட எவ்விதத்திலும் கூடுதலான நேரத்தைச் செலவிடாதே..

2.மிகவும் விழிப்புள்ளவனாயிரு..
" கர்த்தருக்குப் பரிசுத்தம் " என்பதே உன் வாழ்வின் சட்டவாக்கியமாய் இருக்கட்டும்..

எல்லா வெதுவெதுப்பையும்,
கேலி பேசுதலையும்,
முட்டாள்தனமான பேச்சையும் உன்னை விட்டு அகற்று..

3. பெண்களுடன் உரையாடுகையில் உன் உரையாடல் மிகவும் சுருக்கமானதாகவும் குறுகிய நேரமுடையதாகவும் இருக்கட்டும்..

முக்கியமாக இளம் பெண்களுடன் நீ சம்பாஷிக்கையில் மிகவும் ஞானத்தோடு நடந்து கொள்..

4. கிறிஸ்துவுக்குள்ளான உன் சகோதரர்களிடம் ஆலோசனை கேட்காமல் உன் திருமண காரியத்தில் எந்த முடிவும் எடுத்துவிடாதே..

5. உன் சொந்தக் கண்கள் காணாதிருக்க, யாரைக்
குறித்துப் பேசப்படும் தீமையானவற்றை ஒருபோதும் நம்பாதே..
எல்லாவற்றையும் அடிப்படையிலிருந்து சோதித்துப் பார்..

6. எந்த மனிதனைக் குறித்தும் தீமையானதைப் பேசாதிரு..உன் வார்த்தைகள் கேன்சரைப் போல அரித்துப் போடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்..

சம்பந்தப்பட்ட ஆளைச் சந்திக்கும் வரை உன் எண்ணங்களை உனக்குள்ளாக அடக்கி வைத்துக் கொள்..

7. யாரிடமாவது தவறைக் கண்டால் உடனடியாக நேருக்கு நேர் சுட்டிக்காட்டு

உன் மனதிலிருந்து பகை என்னும் நெருப்பை மிகச்சீக்கிரம் எடுத்துப் போடு..

8. பாவத்தைத் தவிர வேறு எதற்கும் வெட்கப்படாதே..

9. அழியும் ஆத்துமாக்களைக் காப்பதே உன் தலையாய கடமை..எனவே இதற்காக நீ செலவு செய்வதுடன் செலவு செய்யப்படு..

10. எல்லாவற்றையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்
எல்லாவற்றிலும் ஒழுங்கைக் கடைப்பிடி..
அவைகளை தேவ கோபாக்கினைக்கும் சபையின் கட்டுப்பாட்டுக்கும் பயந்து அல்ல..
மனசாட்சியினிமித்தம்
பற்றிக் கொள்..

11.எல்லாக்
காரியத்தையும் தேவ சித்தத்தின்படி செய்..

12. கவனி !
பல தடவைகள் பிரசங்கிப்பது மட்டும் உன் கடமையல்ல..எத்தனை ஆத்துமாக்களை மீட்க முடியுமோ அத்தனை பேரையும் மீட்டு அவர்களை மனந்திரும்புதலுக்கு நேராக வழிநடத்தி உன் முழு பெலத்தோடும் அவர்களைப் பரிசுத்தத்தில் ஊன்றக்கட்டு..

ஏனெனில் பரிசுத்தமில்லாமல் ஒருவனும் தேவனைத் தரிசிக்க முடியாதே!

No comments: