Friday, July 5, 2019

கேப்டன் மில்லர்...

கேப்டன்.மில்லர்.
பிறப்பு   : 1-1-1966
வீரச்சாவு: 5-7-1987,

முதல் கரும்புலி
இவன் மூச்சு
ஆயிரம் புயலின் வீச்சு.

பெயர்:வல்லிபுரம் வசந்தன்.
ஊர்  :துன்னாலை யாழ்ப்பாணம்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதலாவது கரும்புலி மாவீரர்.

1987 இல் யாழ்ப்பாணத்தை ஆக்கிரமித்து தமிழீழ விடுதலைப் புலிகளையும் விடுதலைப் போராட்டத்தையும்  தமிழ் மக்களையும் அழித்தொழித்துவிட இலங்கை இராணுவத்தின் "ஆப்பரேசன் லிபரேசன்'' என்ற நடவடிக்கை பெருமளவில் தொடங்கப்பட்டது.

ஒரு சுமையுந்து நிறைய வெடி பொருள்களை நிரப்பிக்கொண்டு அதனை ஓட்டிச் சென்ற மில்லர் யாழ்ப்பாணம் நெல்லியடி மகா வித்தியாலயத்தில் அமைந்திருந்த இலங்கை இராணுவ படைத் தளத்தின் மீது சுமையுந்தை மோதினார்.

வெடித்து சிதறிய வெடிபொருள்களுடன் வெடித்த மில்லர் நொடிகளில் காற்றில் கலந்தார்.அவரது இந்த தாக்குதலால் பெரும் சேதமுற்ற இலங்கை இராணுவம் தனது  ஆப்பரேசன் லிபரேசன் திட்டத்தையே கைவிட்டது.

மில்லர் வீரச்சாவடைந்த நாளே உலகம் எங்கும் வாழும் தமிழ் மக்களால் "கரும்புலிகள் நாளாக'' நினைவு கொள்ளப்படுகிறது.

கரும்புலி ஈகியர்க்கு வீரவணக்கம்!

No comments: