Sunday, March 15, 2020

குழந்தை தொழிலாளர்கள்

ஜூன்-12 குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்

யுனிசெப் அமைப்பு படி யார் குழந்தை தொழிலாளர்கள்?

5 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஒரு வாரத்துக்கு 28 மணி நேரம் உழைத்தால்
அவர்கள் குழந்தை தொழிலாளர்கள்.

12 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஒரு வாரத்துக்கு 42 மணி நேரம் உழைத்தால் அவர்கள் குழந்தை தொழிலாளர்கள்.

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இதுபோன்ற தொழிலாளர்கள் இந்தியாவில் ஒரு கோடியே 10 லட்சம் பேர் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

உலகிலேயே இந்தியாவில் தான் அதிகமான குழந்தை தொழிலாளர்கள் உள்ளனர்.

60 சதவீதம் பேர் விவசாயமும் விவசாயம் சார்ந்த தொழில்களிலும் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

 40 சதவீதம் பேர் விவசாயம் சாராத பல்வேறு தொழில்களில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

 இவர்கள் கடினமாக உழைத்தாலும் போதுமான ஊட்டச்சத்து கிடைப்பதில்லை என்று ஆய்வுகள் கூறுகிறது.

குழந்தை தொழிலாளர்கள் உருவாக முக்கியமான காரணம் வறுமை மேலும் திட்டமிடப்படாத குடும்பம் மற்றும் கல்வி அறிவு இல்லாமை.

1986ம் ஆண்டு குழந்தை தொழிலாளர் சட்டம் நம் நாட்டில் இயக்கப்பட்டது அதன்படி 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது சட்டப்படி குற்றம்.

கல்வி உரிமைச் சட்டம் 2005 நிறைவேற்றப்பட்டு 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் கட்டாயக் கல்வி அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கல்வி அறிவு பெற்ற ஒரு சமுதாயத்திலே குழந்தைகள் நலன் பாதுகாக்கப்படும்.

 எனவே அனைவரும் கல்வி அறிவைப் பெறுவோம். குழந்தைகள் நலன் காப்போம். குழந்தை தொழிலாளர்களை ஒழிப்போம்...

No comments: