Sunday, March 15, 2020

முளைவிட்ட தானியங்களின் பயன்கள்...

முளைவிட்ட தானியங்கள், மனிதனுக்கு கிடைத்த ஒரு வரம் ஆகும்.

முளைவிட்ட தானியங்களை ஒரு முழுமையான உணவாக, ஒரு நேர உணவாக  கூட சாப்பிடலாம்.

ஒரு பிடி முளைவிட்ட தானியத்தில் கிடைக்கும் சத்து, வேறு எந்த உணவின் ஒரு பிடியிலும் இருக்காது. 

ஒரு தானியத்தில் உள்ள வைட்டமின் சக்தி, முளை விடும் போது பன்மடங்காகிறது.

இப்பயிறு வகைகளை சாப்பிடுவது மூலம், உடலுக்கு தேவையான சக்திகள் மற்றும் உடலுறுப்புகளின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும்.

வாழ்நாளை நீட்டிக்கக்கூடிய தன்மை கொண்ட என்சைம்ஸ், முளைவிட்ட தானியத்தில் அதிகமாக உள்ளது.

முளைவிட்ட கொண்டக்கடலையை விளையாட்டு வீரர்கள் மற்றும் கடின வேலை செய்பவர்கள் அதிகம் சாப்பிடலாம்.

முளைவிட்ட கோதுமையில், வைட்டமின் “சி’, 600 சதவீதம் அதிகமாகிறது. ஆரஞ்சுப் பழத்தில் உள்ள வைட்டமின் “சி’ அளவை விட, இது அதிகம். இது புற்று நோய் தாக்கத்தைக் குறைக்கும்.

முளைவிட்ட எள்ளு சாப்பிட்டால் ஒல்லியாக இருப்பவர்கள் பருமன் கூடும்.

முளைவிட்ட பச்சைப்பயிறு சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.

முளைவிட்ட கொள்ளு சாப்பிட்டால் உடல் பருமன் குறைந்து மூட்டுவலி நீங்கும்.

முளைவிட்ட கறுப்பு உளுந்து தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும்.

காலையில் வெறும் வயிற்றில், இதை உட்கொள்வது மிகச்சிறந்தது. இதை சாப்பிட்ட பின், அரை மணிநேரம் கழித்து தான், தேநீர் அல்லது மற்ற உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

No comments: