Thursday, May 7, 2020

ஒட்டுமொத்த மிருகங்களின் மீட்சி தான்மனிதன்...

*ஒட்டுமொத்த மிருகங்களின் மீட்சி தான்...'மனிதன்'*

வாழ்வதற்கான போட்டியில் மனிதன் மட்டுமே இருக்கிறான்..

மற்ற உயிர்கள் அனைத்தும் உணவை உண்பதற்கான போட்டியில் மட்டுமே போராடுகிறது..

வாழ்க்கை இவ்வளவு போராட்டம் எனத் தெரிந்திருந்தால் , மனிதன் மிருகமாகவே இருந்திருப்பான்..

மற்ற உயிர்களுக்கு ,மற்ற இனங்கள்தான் எதிரி..

ஆனால் மனிதனுக்கு , மனிதன் மட்டுமே எதிரி..

பிற உயிர்களுக்கு தனது எதிரியை அடையாளம் கண்டுகொள்ள முடியும்..

ஆனால் மனிதனால் எதிரியை அடையாளம் காணவே முடியாது..

துரோகத்தால் வீழ்த்தப்பட்ட பிறகுதான் எதிரியே தெரிவான்..

வீழ்ந்த பிறகு தெரிந்தால் என்ன....? தெரியா விட்டால்தான்  என்ன? 

பாவம்...!
மனிதன் ,மனங்களுக்குள் ஒளிந்து கொண்டிருக்கிறான்..

சுயநல எண்ணங்களை வைத்துக்கொண்டு ,மனித குலத்தை ஒழித்துக் கொண்டு இருக்கிறான்..

உலகில் எத்தனை மிருகங்கள் உள்ளதோ ,
அத்தனை மிருகங்களையும் தன்னுள்ளே அடக்கி வைத்திருக்கிறான்..

தேவைப்படும் போது எந்த ஒரு மிருகம் தேவைப்படுகிறதோ, 

அந்த மிருகத்தை விட்டு தன்னுடைய ஆசையை தீர்த்துக் கொள்கிறான்..

தன்னுள்  ஓராயிரம் மிருகங்களை வைத்துக் கொண்டு ,
ஒன்றுமே அறியாத அப்பாவியாய் நடைபோடுகிறான் மனிதன்..

மானுட தத்துவத்தில் தலைகீழாக நடந்து கொண்டிருக்கிறது மனிதநேய உணர்வுகள்..

தான் முன்னேற எத்தனை பேரை அழிக்க வேண்டும் என்ற உணர்வு கூட இல்லாமல் சென்று கொண்டே இருக்கிறான்..

கொன்றதின் பாவம் ,வென்றதில் கழிந்து விடும் போல..

ஆசையின் பாதையில் கொன்று குவித்துக் கொண்டே சென்று கொண்டிருக்கிறான்..

இழந்ததை எண்ணி பார்க்கவும் நேரமில்லை..

இருப்பதை எண்ணிப் பார்க்கவும் நேரமில்லை..

வென்றவனும் தோற்றதில்லை, தோற்றவனும் வென்றதில்லை..

இந்த மாய வாழ்வின் சங்கதி தெரியாமல் சாம்பலாகிறான், சாதித்தவனும் சாதிக்காதவனும்..!!

No comments: