Sunday, June 21, 2020

உயர்ந்த பண்புகள்...

*நாம் பல செயல்களால் பாதிக்கப்பட்ட ஒரு கூட்ட நெரிசலில் இந்தக் காலத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்..*

நமது உடலில் உள்ள நல்ல ஒழுக்கங்கள் மற்றும் நல்ல பண்புகள் எல்லாம் வாழ்நாள் முழுவதும் நாம் சேகரித்து வைத்தது. ஆரோக்கியமான மற்றும் அமைதியான வாழ்க்கைக்கு இவைகள் வழி வகுக்கின்றன..

*நாம் நம்மில் இருக்கும் விரக்தி, மற்றும் தன்னம்பிக்கையற்ற வார்த்தைகள், உடனடியாக வாழ்க்கையில் இருந்து அகற்றப் படாதபோது, வாழ்க்கை முழுவதும் துக்கமாக நம்மை காயப்படுத்தி, நம் வேகத்தை குறைத்து விடுகிறது..*

இவை கண்களில் உள்ள தூசி போல, எப்போதும் எரிச்சலூட்டும். இது நம் கால்களில் குத்திய முள் போன்றது, எப்பொழுதும் வலி தந்து கொண்டே இருக்கும்.

*எனவே, நம் ஆற்றல் குறைவதை தவிர்க்க வேண்டும் என்றால், நம் வாழ்விலிருந்து இந்த களைகளை அகற்ற வேண்டும்.*

எல்லோரும் தங்கள் சொந்த செயல்களின் விளைவை தாங்களே எதிர் கொள்ள தயாராக வேண்டும். அதற்கு வேறு யாரும் பொறுப்பு ஏற்க மாட்டார்கள்..

*நமக்கு விழிப்பு உணர்வு இல்லா விட்டால்,  துன்பங்கள் நம் வாழ்வின் நல்ல பல குணங்களைக் கெடுத்து விடும்.*

நமக்கு வழங்கப்பட்ட இவ் வாழ்க்கை ஒரு பரிசு.. சோம்பேறித்தனத்திற்கு இங்கு இடமே இல்லை. 

*எனவே, உங்கள் தூக்கத்தில் இருந்து விரைவில் விழித்துக் கொள்ளுங்கள்.*

பேராசை, சுயநலம், கோபம், சோம்பல், பொறாமை,சம நிலையற்ற பார்வை, விரோதம் என்று பலவகைப் படும் தன்மைகளால் நிரம்பியவர்கள் எதிலும் நம்பிக்கை இல்லாமல்  வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்..

*அவரது வாழ்க்கை எந்த நோக்கம் இல்லாமல் மற்றும் சந்தேகம் நிறைந்ததாகவே இருந்து வருகிறது.*

விழிப்புணர்வு, கவனமின்மையின் காரணமாக துயரங்கள் அவர்கள் வாழ்வில் நுழைகின்றன. அவை  எல்லை யற்ற பாதிப்புக்கு உள்ளாக்கும் முன்பு அவைகளை அகற்றப்பட வேண்டும். 

*இல்லையெனில் வாழ்க்கை மகிழ்ச்சியை கொடுப்பதற்குப் பதிலாக மனச் சோர்வை ஏற்படுத்தும்.*

அத்தன்மையை கொண்ட ஒருவர் நிலையற்ற தன்மையுடனும், தன்னம்பிக்கை இல்லாமலும்தான் இருப்பார்.

*மறுபுறம், நற்பண்பு கொண்ட ஒருவர் வாழ்க்கையில் வெற்றிகரமாக இருக்கிறார். ஏனென்றால்,அவரிடம் நல்ல பண்புகள் குடி கொண்டு இருக்கின்றன.. ஆம்..நல்ல பண்பு மற்றும் நல் ஓழுக்கம்  என்பது, நகையை அலங்கரிக்கும் முத்துகளைப் போன்றவை.*

அவை, மென்மையான, ஆரோக்கியமான மற்றும் முற்போக்கான வாழ்க்கையை முடிவு செய்கின்றன. 

*கெட்ட பண்புகளை கைவிடுவதன் மூலம்  உயர்தர வாழ்க்கையை மனிதன் வாழ முடியும்.*

நல்லொழுக்கங்கள்தான் நம் குணங்களை வளர்த்து, நம் மனதை சுத்தப் படுத்தி, நமது தற்போதைய மற்றும் எதிர்கால வாழ்க்கையை மதிப்புள்ளதாக அமைக்கிறது.

*நல்ல சிந்தனையுள்ளவர்கள் பிரபஞ்சத்தின் மீது உறுதியான நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள். அவர்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக நியாயமான வழிகளில் மட்டுமே சம்பாதிக்கிறார்கள்.*

அவர்கள் வறுமையில் வாடும் இல்லாதவர்களுக்கு உதவி செய்கிறார்கள். மற்றும் அவர்கள் தங்கள் உரையாடல்களில் மனமகிழும் சொற்களைப் மட்டுமே பயன் படுத்துகின்றனர். 

*அவர்களின் அணுகுமுறை தூய்மையானது என்பதால், உண்மையான மகிழ்ச்சியும், அன்பும் மட்டுமே அவர்களிடம் நிலை கொண்டு இருக்கிறது..*

நம் வாழ்வில் இருந்து முற்றிலும் தீமைகள் புரியும் கெட்ட பண்புகளை அகற்ற ஒரே வழி ஒவ்வொரு நாளையும் தூய மனதுடன், ஆற்றலுடன் அணுகுவதாகும்.

 *ஆம்* .. *நண்பர்களே* ..,

 *பிரபஞ்சம்* *இந்த* *விலையுயர்ந்த* *வாழ்க்கையை* *நமக்கு* *கொடுத்து* *இருக்கிறது* . 

 *நாம்* *அதை* *உணர* *வில்லையென்றால்* , *நாம்* *எதையுமே* *சாதிக்க* *முடியாது* .. 

 *நல்லொழுக்கங்கள்* *நம்* *வாழ்வின்* *மதிப்புமிக்க* *நகைகள்* *போன்றவை* . 

 *நம்* *சிந்தனைகளின்* *திசை* *மாறும்* *போது* , *வாழ்க்கையும்* *மாறுகிறது* .

 *உயர்ந்த* , *தகுதியான* , *அமைதியான* *வாழ்க்கைக்கு* *இந்த* *பிரபஞ்சத்துடன்* *இணைந்து* *நாமும்* *செயல்* *படுவோம்* .. *நல்ல* *செயல்கள்* *புரிவோம்.அனைவரிடத்திலும்* *அன்பு* *செலுத்துவோம்* . *வாழ்க்கையை* *எளிதாக்குவோம்* 

No comments: