Wednesday, December 9, 2020

பெரிய அறைகூவல்களை...

பெரிய அறைகூவல்களை எதிர்கொள்ள மிகுந்த திறன் வேண்டும். எளிய செயல்கள் அரிய பலன்களைத் தருகின்றன.  அரிய செயல்கள் சாதனைகளாக மலர்கின்றன, அதனால் அவற்றிற்கு என்றுமே மதிப்பு அதிகம்...

போராசியர் ஒருவர் மூன்று வினாக்களை மாணவர்களிடம் கொடுத்து விடை எழுதித் தருமாறு கூறினார். அதில் மிகவும் கடினமான வினாகளுக்கு நூறு மதிப்பெண்களும், சற்றே எளிய கேள்விகளுக்கு அறுபது மதிப்பெண்களும் கொடுத்திருந்தார்...

பேராசிரியரோ!, தேர்வு முடிந்ததும் மாணவர்களின் விடைத் தாள்களின் விடைகளைக் காணாமல் மிகவும் கடினமான வினாக்களைத் தேர்வு செய்தவர்களுக்கு முதல் நிலையும், அடுத்தவர்களுக்கு முறையே இரண்டாம், மூன்றாம் நிலையும் கொடுத்தார்...

மாணவர்களோ!, "விடைகளைக் காணாமல் மதிப்பெண்களைத் தருகிறீர்களே அய்யா...?!" என்று கேட்க, பேராசிரியரோ!, உங்கள் விடைகளுக்காக நான் இந்த தேர்வினை வைக்கவில்லை. உங்கள் இலக்கு என்னவென்று அறியவே இந்த தேர்வை வைத்தேன்...

_*"கடினப்பட்டு உழைப்பவர்களே அனைத்திலும் முதல்நிலை அடைவார்கள்"*_ என்று உங்களுக்கு உணர்த்தவே இந்தத் தேர்வு என்று கூறி முடித்தார்...

*ஆம் நண்பர்களே..!*

*ஒருவரின் உழைப்பு என்றுமே வீணாவதில்லை. அவர்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லையே என்று மனம் தளர்ந்து உழைப்பதை விட்டுவிடக் கூடாது...!*

 *நான் எடுத்துக் கொண்ட முயற்சியில் வெற்றி பெற்றே தீருவேன் என்று அசைக்க முடியாத நம்பிக்கையுடன் அயராது உழைத்தால் அவரின் வெற்றியை எவரும் தடுத்து நிறுத்த முடியாது...!!*

No comments: