Monday, August 9, 2021

நலவாழ்வியல் சிந்தனைகள்...

☸️நமது பிள்ளைகளை வறுமை தெரியாமல் வளர்ப்பது தவறில்லை. நமது கஷ்டம் என்னவென்று தெரியாமல் மறைப்பது தவறு.

☸️நீங்கள் எவ்வளவு படித்தீர்கள் என்பதை விட, படித்த படி எவ்வளவு தூரம் நடக்கிறீர்கள் என்பதே முக்கியம்.

☸️இறைவன் நமக்கு வசதி வாய்ப்பை தரவில்லை என்று ஏங்குவதை விடுத்து, நமக்கு நல்ல உடலையும் ஆரோக்கியத்தையும் கொடுத்து இருப்பதை நினைத்து சநுதோசப் படுங்கள். அந்த உடலை வைத்து எதையும் சாதிக்கலாம் என்று நம்புங்கள்.

☸️நம் மனநிலையை சமநிலையாக வைத்துக் கெண்டால், இந்த உலகத்தில் சாதிக்க முடியாத விஷயம் என்று எதுவுமில்லை.

☸️அரண்மனையில் வாழ்ந்தாலும், சாதாரண வீட்டில் வாழ்ந்தாலும் நல்ல தூக்கம் தான் சுறுசுறுப்பு தரும். கோடீஸ்வரனாக இருந்தாலும் ஏழையாக இருந்தாலும், நமக்கு வயிறு நிறைய நல்ல சாப்பாடு தான் அவசியம்.

☸️நாகரிக உலகில் வாழ்வதற்கென்று எத்தனையோ வசதி வாய்ப்புகளும், கண்டுபிடிப்புகளும் வந்த வண்ணமே உள்ளன. ஆனால் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்று இன்னும் ஒருவருக்குக்கூட தெரியவில்லை .

☸️விவாதம் செய்தால் ஒருவர் தான் வெற்றி பெற முடியும். சமாதானமாக பேசினால் இருவரும் வெற்றி பெற முடியும்.

☸️வாழ்க்கையில் பிரச்சினை வரும் போது நாம் எவ்வாறு கையாள்கிறோம் என்பதில் இருக்கிறது நமது அனுபவம்.

☸️மகிழ்ச்சியாக வாழ்வதற்காக எதை வேண்டுமானாலும் இழக்கலாம். ஆனால் எதற்காகவும் வாழ்க்கையை இழக்கக் கூடாது.

☸️பணம் இல்லாத போது காட்டும் பணிவும் நல்ல பழக்க வழக்கமும், பணம் வந்தவுடன் காணாமல் போய் விடுகிறது.

☸️சந்தோஷமாக வாழப் பிறந்த நாம், தினமும் ஏன் புலம்ப வேண்டும். நல்ல விஷயங்களில் ஈடுபட்டால் மனதில் மகிழ்ச்சி கிடைக்கும்.

☸️பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க பொறுமை அவசியம். பொறுமை அனைத்திற்கும் பதில் தரும். அதற்கு கால தாமதம் ஆகும். ஆனால் ஒரு போதும் தோற்றுப் போகாது.

☸️கணவன் மனைவி சண்டையில் யாரும் தலையிடாமல் இருந்தாலே, அவர்களுக்குள் சமரசம் ஏற்பட்டு விடும்.

☸️பல விஷயங்களை எளிதில் அறிந்து கொள்ளும் பலர், தங்களது மனதை புரிந்து கொள்வதில்லை. இதுவே பல குழப்பங்களுக்குக் காரணம்.

☸️வசதி படைத்த பலர் இருக்கிறார்கள். ஆனால் துயரங்கள் இன்னல்கள் இல்லாத மனிதர்கள் இந்த உலகில் இல்லை. அவரவர் தகுதிக்கு ஏற்ற துன்பத்தை சந்திக்கிறார்கள்.

☸️மகிழ்ச்சியாக வாழ்பவர்கள், மற்றவர்களை வெறுக்க மாட்டார்கள். யாரைப் பார்த்தும் பொறாமைப் பட மாட்டார்கள். எல்லாம் இறைவன் செயல் என்று நல்லதை மட்டும் செய்வார்கள்.
*நல்லதே நினை.* *நல்லதே நடக்கும்.*

**வாழ்க வளமுடன்** *வாழ்க நலமுடன்**

📣📣📣📣📣📣📣📣📣📣📣📣

No comments: