Monday, June 5, 2017

மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு


மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும் என்று டெல்லி சட்டப்பேரவையில் செய்து காட்டிய ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.

மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தில் எளிதில் முறைகேடு செய்ய முடியும் என்று டெல்லி சட்டப்பேரவையில் இன்று நேரடியாக செய்து காட்டினார் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. சவுரவ் பரத்வாஜ். 
உ.பி.முதல் பல்வேறு சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றது குறித்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் குறித்த சந்தேகங்கள் எழுப்பப்பட்டன.
மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களை ஒன்றுமே செய்ய முடியாது, முறைகேடு சாத்தியமேயில்லை என்று தேர்தல் ஆணையம் வாதாடியது. 
தேர்தல் ஆணையத்தின் இந்த கூற்றை முறியடிக்கும் விதமாக ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. சவுரவ் பரத்வாஜ்‘லைவ்’ ஆக எந்திரத்தை எப்படி ‘ரகசிய சங்கேத எண்’மூலம் மாற்றியமைக்க முடியும் என்று செய்து காட்டினார்.
நான் ஒரு பொறியாளர்:
இன்று டெல்லி மாநில சட்டப்பேரவைக்கு இவிஎம் எந்திரத்தைக் கொண்டு வந்த சவுரவ் பரத்வாஜ், “எம்.எல்.ஏ.ஆவதற்கு முன்பு நான் 10 ஆண்டுகள் கணினி பொறியாளராக பணியாற்றியுள்ளேன். மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா எந்திரங்களை நம்பியிருக்கிறது. இந்த எந்திரத்தை என்னை போன்ற சிறிய பொறியாளர் கூட எளிதில் ஹேக் செய்ய முடியும்” என்றார். 
“வாக்குப் பதிவுக்கு முதல்நாள் எந்திரம் குறித்து வேட்பாளர்களுக்கு காண்பிக்கப்படுவதெல்லாம் எந்திரம் அப்பழுக்கற்றது என்பதுதான்” என்றவர் பிறகு எந்திரத்தில் ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், பாஜக,காங்கிரஸ், சமாஜ்வாதி ஆகிய 5 கட்சிகளுக்கு தலா 2வாக்குகளைப் பதிவு செய்தார். உடனே முடிவுக்கானபொத்தானை அமுக்க அந்தந்த கட்சிகள் பெயரில் 2வாக்குகள் பதிவாகியது, அதாவது வாக்களித்தபடியே முடிவும் இருந்தது.
உடனே அவர் மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தை ரீ-செட் செய்தார். ‘இப்போது வாக்குப்பதிவு தொடங்குகிறது’ என்று வைத்துக் கொள்வோம். அதே போல் 5 கட்சிகளுக்கு தலா 2 வாக்குகளை பதிவு செய்தார். 
இப்போது அவர் கூறும்போது, “வாக்கு நாளன்று காலை10 மணி வரை சில வாக்குகள் பதிவாகியிருக்கும். ஆனால் இதன் பிறகு போடப்படும் வாக்குகள் எல்லாம்பாஜக-வுக்குச் செல்ல வேண்டும் என்பதை உறுதி செய்வதாக வைத்துக் கொள்வோம். ஒரு பாஜக தொண்டர் வாக்குச்சாவடிக்கு வாக்களிப்பவர் போல் வருவார், வந்து எந்திரத்தில் ரகசிய சங்கேத எண்ணை அமுக்குவார். இந்த எண் 123414 என்று வைத்துக் கொள்வோம், இப்போது இந்த எண்ணை நான் அமுக்குகிறேன். இந்த ரகசிய எண்ணை ஏற்றிய பிறகு ஆம் ஆத்மிக்கு 8 வாக்குகளைப் பதிவு செய்கிறேன்”என்று செய்து காட்டினார். இப்போது ஆம் ஆத்மிக்கு10 வாக்குகள், பகுஜன் சமாஜுக்கு 2 வாக்குகள், பாஜக-வுக்கு 3 வாக்குகள் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதிக்கு தலா 2 வாக்குகள் என்றுதானே முடிவு காட்ட வேண்டும்.
ஆனால் முடிவுகளை பரத்வாஜ் காட்டிய போது,வாக்களிக்க வருபவர் போல் வந்து ரகசிய சங்கேத எண்ணை ஏற்றுபவரின் செயலுக்குப் பிறகு பாஜக-வுக்கு11 வாக்குகள் காட்டுகிறது. அதாவது ஆம் ஆத்மிக்கு போட்ட வாக்குகள் பாஜக தரப்புக்குச் சென்றதால்3+8=11 வாக்குகள் ஆகிறது. இதுதான் பரத்வாஜ் செய்து காட்டியது.
செய்து காட்டிய பிறகு பரத்வாஜ் கூறும்போது, “பிந்த் சம்பவம் குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் அர்த்தமில்லை. இவிஎம் எந்திரம்அப்பழுக்கற்றது, முறைகேடு செய்ய முடியாது என்று எந்த அர்த்தத்தில் அவர்கள் கூறுகின்றனர்? எனக்கு 10ஆண்டுகள் எம்பெடட் சிஸ்டம்ஸில் புரொகிராமில்அனுபவம் உள்ளது. பிந்தில் என்ன நடந்தது என்பதை நிரூபிக்க நான் எந்த விஞ்ஞானியையு எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன். இவிஎம் மதர்போர்டைமாற்றையமைக்க 90 விநாடிகள்தான் எனக்குத் தேவைப்பட்டது” என்றார்.

நன்றி  தி இந்து தமிழ் நாளிதழ் 10.05.2017

No comments: