Friday, October 13, 2017

மாற்றம் என்பது மந்திர சொல்லா வாழ்க்கையை வீணாக்கும் சொல்லா

மற்றவர்களை நினைத்தே நம் வாழ்க்கையை வீணடித்து விட்டு நாம் செய்ய வேண்டிய செயலை மறந்து விடுகிறோம்... போன காலம் திரும்ப வராது என்பதையும் மறந்து விடுகிறோம்.
ஒரு மனிதன், இந்த உலகமே சரியில்லை இங்குள்ள மனிதர்களை மாற்ற வேண்டும் என்று நினைத்தான்.
அவன் இறைவனினிடம் சென்று இறைவா நான் இந்த உலக மனிதர்களை மாற்ற நினைக்கிறேன் எனக்கு நீங்கள் அருள் புரிய வேண்டும் என்று வேண்டினான்.
இறைவனும் நல்லது நான் உனக்கு 20 வருடங்கள் அவகாசம் தருகிறேன் முயற்சி செய் என்று அருளினார்.
20 வருடங்கள் கழித்து அந்த மனிதன் இறைவனிடம் சென்று இறைவா என்னால் இந்த உலகத்தை மாற்ற முடியவில்லை அதனால் இந்த நாட்டில் உள்ள மக்களை மட்டுமாவது மாற்றி திருத்த நினைக்கன்றேன் என்றான்.
இறைவனும் அப்படியே ஆகட்டும் நான் உனக்கு ஒரு 15 வருடங்கள் தருகிறேன் முயற்சி செய் என்றார்.
15 வருடங்கள் கழித்து அந்த மனிதன் கடவுளிடம் சென்று கடவுளே என்னால் இந்த நாட்டு மக்களை திருத்த முடியவில்லை, நான் எனது ஊரில் உள்ள மக்களையாவது மாற்ற நினைக்கிறேன் என்றான்
கடவுளும் சரி நான் உனக்கு 10 வருடங்கள் நேரம் தருகிறேன் முயற்சி செய் என்றார்.
10 வருடங்கள் சென்று அந்த மனிதன் மீண்டும் கடவுளிடம் சென்று இறைவா இந்த ஊரில் உள்ள மக்களையும் எனனால் திருத்த முடியவில்லை ஆகவே எனது குடும்பம் சுற்றத்தினரை மட்டும் திருத்த முயற்சிக்கிறேன் என்றான்.
கடவுளும் நல்லது உனக்கு நான் ஒரு 5 வருடம் கால அவகாசம் தருகிறேன் என்றார்.
இறுதியில் அந்த மனிதன் கடவுளிடம் சென்று என்னை மன்னித்து விடுங்கள் கடவுளே என் எல்லா முயற்சிகளும் தோற்றுவிட்டன.
*கடைசியாக ஒன்றே ஒன்று மட்டும் கேட்கிறேன். நான் என்னை மட்டும் மாற்றிக்கொள்ள அருள் புரியவும் என்றான்.*
கடவுளும் அந்த மனிதனை நோக்கி அப்பா இதை நீ ஆரம்பத்திலேயே கேட்டு இருக்க வேண்டும் ஏனெனில் உன்னுடைய வாழ்க்கை முடியப்போகிறது இப்போது எந்தப் பயனும் இல்லை என்றார்.
*நீதி*
மற்றவர்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பதால் உங்கள் காலம் வீணாக்கப்படுகிறது.
உங்கள் மனம் தன்னிடமிருந்தே தப்பித்து ஓட இந்த நுட்பமான தந்திரத்தைப் பயன்படுத்துகிறது.

No comments: