Sunday, March 18, 2018

ரிசர்வேசன் ( எ ) இட ஒதுக்கீடு : பாகம் - 11

அப்பொழுது காந்தி இதை எதிர்த்து ''இப்படி நீங்க வாக்குரிமை குடுத்தா என் உயிரை பணயம் வைத்து தடுப்பேன்'' என பிரிட்டிஷாரிடம் கடுமையாக மோதினார். இப்ப பாபாசாகேப் இறங்கி வந்து, ''ஓ.கே. இந்து மதம் உடைய வேணாம். என் சமுதாயத்தையும் விட்டு கொடுக்க மாட்டேன். அதனால என் மக்களுக்கு இரட்டை வாக்குரிமை கொடுங்க. ஒன்று எங்கள் பிரதிநிதியை தேர்ந்தெடுக்க, இன்னொன்று பொதுத்தொகுதியில் நிற்பவனுக்கு ஒரு ஓட்டு. ஆக இரண்டு வாக்குரிமை தாங்க'' என்றதும் வழக்கம் போல் பிரிட்டிஷார் ஒத்துக்கிட்டாலும், காந்தியும், காங்கிரசும் மூர்க்கமாய் எதிர்த்தது. ''முடியவே முடியாது. நாகரிகமே இல்லாத இவனுங்களுக்கு ஓட்டு கொடுத்தாலே சட்ட, பாராளுமன்றம் கதி என்னாவது? இவனுங்க கூட சரிசமமா வேற உட்காந்து தொலைக்க வேண்டியிருக்கும். இவனுங்களுக்கு ஒரு ஓட்டு கொடுக்கிறதே பெரிய விஷயம். இதில் இரண்டு வாக்கு வேறயா?'' மட்டுமல்லாமல், இதை எதிர்த்து எரவாடா என்ற இடத்தில் காந்தி உண்ணாவிரதம் இருந்தார். இதுகுறித்து நிருபர்கள் பாபாசாகேப்பிடம் கேட்டபோது, ''சாப்பிடாமல் இருப்பது அவர் இஷ்டம். இதுவரைக்கும் என்னை கேட்டா சாப்பிட்டார். இப்போதும் நான் சொல்லியா சாப்பிடாம இருக்கார்?  நாள்தோறும் உணவிற்காய் போராடும் என் மக்களின் உரிமையை பறிக்க நினைக்கும் அவரை, நானென்ன செய்ய முடியும்?'' என்றார். இது காந்திக்கு அதிர்ச்சியாச்சு. ''அம்பேத்கர் தடுத்திடுவார்,  பிரிட்டிஷார் வழிக்கு வந்திடுவாங்க, நாம பிழைச்சுக்கலாம்'' என்று நினைத்தார். 2 நாள் 3 நாளாச்சு. யாரும் வரலை. உடனே காந்தி ''நெஹ்ரு, வல்லபாய் படேல், ராஜாஜி ஆகிய 3 பேரை அம்பேத்கரிடம் அனுப்பினார்.
பாபாசாகேப்பிடம் நெஹ்ரு சொன்னார் ''உன் மக்களுக்கு ஓட்டு கிடைச்சி உனக்கென்ன லாபம்? அதுக்கு பதிலா உன் சனத்துக்கு ஓட்டு வேண்டாம்ன்னு நீ சொல்லு. உன்னை காங்கிரஸ் கட்சியின் தலைவனாக்குகிறோம். சுதந்திர இந்தியாவில் நீதான் ஹோம் மினிஸ்டர் அல்லது டிபன்ஸ் மினிஷ்டர். இல்லை உனக்கு விருப்பமிருந்தா பிரைம் மினிஸ்டர் கூட ஆகிடு'' பாபாசாகேப் சொன்னார் ''நான் மினிஸ்டர் ஆகிறது முக்கியமில்லை. என் சனம் உங்க நிலத்தில் கூலி வேலைக்கு கொத்தடிமையா இருக்கிறது மாறணும். என் மக்களுக்காகதான் நான். எனக்காக என் மக்கள் இல்லை''. மேலும் ''நீ சொல்ற மாதிரி என் மக்களுக்கு அடிப்படை அறிவு, கல்வியறிவு, அரசியல் அறிவு வேணும். ஓட்டுரிமை, சட்டம் என்றால் என்ன? என்பதை தெரிஞ்சிக்கணும். அதுதான் முக்கியம். என் நலன் இல்லை'' என்றார். இப்போது ராஜாஜி ''சரி இவங்களுக்கு அடிப்படையான விஷயம் சொல்லி கொடுக்க பணம் எவ்வளவு  வேணா வாங்கிக்க'' என்றதும், ''எனக்கு விலை பேசுறியா? மிஸ்டர். ராஜாஜி பூமிக்கு விலை பேசலாம். நீல வானத்திற்கு விலையே கிடையாது. இந்த பூமியை எல்லாம் ஒருவன் விலைக்கு வாங்கலாம். ஆனால் அவனால் கூட இந்த அம்பேத்கரை வாங்க முடியாது''. படேல் இப்ப சொல்றாரு ''ரொம்ப திமிரா பேசினா உன் உயிருக்கு ஆபத்தாகிடும். பாத்துக்க''. அதற்கு பாபாசாகேப் ''நீங்க கொன்னா நான் சாக தயார். என் மக்களுக்காக வாழ்கிறேன். என் மக்களுக்காக சாகிறேன். எவனுக்கும் தலைகுனிய மாட்டேன். என் கொள்கையை விட்டு கொடுக்க மாட்டேன்''.
அதுக்கு ராஜாஜி ''எதுக்குப்பா இவன்ட்ட வீணா ஆர்க்யு பண்ணிட்டு. இவனுக்கு பணம், பதவி, உயிர் மேலே ஆசையேயில்லை. பயமும் இல்லை. ஏன்னா இவன் உசுறு இவன்ட்ட இல்ல. இவன் உசிறு அவன் சனங்ககிட்ட இருக்கு. இவன் கோடி கோடியா கொட்டினாலும் மசிய மாட்டான். நமக்கு ஓட்டுதானே வேணும். ஒரு பாக்கெட் சாராயம் கொடுத்தா கூட இவன் மக்கள் நமக்குதான் ஓட்டு போடுவாங்க. என்றாலும் கடைசியா ஒரு பிளாக்மெயில் பண்ணி பார்ப்போம்'' என முடிவு பண்ணினாங்க. அது என்னன்னா, ''பாரு அம்பேத்கர், காந்தி இப்ப சாக கிடக்கிறார். நீ பிடிவாதமா இருந்து அவர் செத்துட்டாருன்னா, நீதான் பொறுப்பு. உன்னை கூட விட்டுடுவோம். ஆனா உன் சனங்களை துவம்சம் பண்ணிடுவோம். நிறைய உயிர் இழப்பாகும். யோசிச்சி பாரு''ன்னு சொன்னதும், எந்த ஜனத்தின் உரிமைக்கு போராடுகிறோமோ, அந்த சனத்தின் உயிர் பிரச்சனை என்றதும் ஆடிப்போனார். அது மட்டுமல்ல, தன்னுடன் இருந்த நம் இன தலைவர்கள் சிலரை கூட ''இவன் பிழைக்கத் தெரியாத ஆள். இந்த பிச்சைக்காரன் கூட இருந்தா நீங்களும் பிச்சைக்காரனாதான் இருப்பீங்க. எங்க காங்கிரசுக்கு வந்தால் உங்களுக்கு பதவி, மரியாதை கிடைக்கும்'' சொன்னதும் சிலபேர் அவர்களோடு சென்றார்கள். அவர்களில் ஒருவர்தான் பாபு ஜெகஜீவன் ராம். ஆனாலும் பாபாசாகேப் மசியலை என்றதால், காந்தி தன் மனைவி கஸ்தூரிபாயிடம், ''இந்த காங்கிரஸ்காரன்ங்க அரசியலுக்காக பெத்த அம்மா, அப்பாவையே சாகடிப்பாங்க. அதனால் நீ அம்பேத்கரிடம் போய் உன் கணவருக்கு தாலி பிச்சை வாங்கிட்டு வா. அவரு நினைச்சா மட்டும்தான் முடியும்''ன்னு அனுப்பினாரு. ஆனாலும் பாபாசாகேப்போ, கஸ்தூரியிடம் ''உன் புருஷன் தன் உயிருக்காக பிச்சையெடுக்கிறார். நானோ 7 கோடி என் சனத்துக்காக பிச்சை எடுக்கிறேன்'' என்றார்.
- தொடரும்.

No comments: