Sunday, March 18, 2018

நிம்மதியான வாழ்க்கைக்கான ரகசியம்...

முன்பொரு காலத்தில் ஒரு ஊரில் சிறு வணிகர் ஒருவர் வாழ்ந்தாராம்....
எப்போழுதுமே தன் வேலை விசயமாக இங்கும் அங்கும் போவது வருவதுமாய் அவரின் நாட்கள் கழிந்தன...
ஒரு நாள் விபத்து ஒன்றில் கால் காயமடைந்து நடக்க முடியாத நிலை ஏற்பட்டது....
சில நாட்களில் வேலைக்கு திரும்பிய அவர், ஒரு கழுதையை தன் போக்குவரத்திற்கு உபயோக
படுத்திகொண்டார்...
அது அப்படியே பல நாட்களாக தொடர்ந்தது..
சில நாட்கள் அவர் கிழக்கு நோக்கி பயணிப்பார்...
சில நாட்கள்  மேற்கு ..... வடக்கு...
இப்படியாக ஒரு ஒழுங்கு இல்லாமல் இருந்ததாம்...
வழக்கத்துக்கு மாறாகவும் இருந்த்ததாம்...
இதை பார்த்துவந்த பொதுமக்கள் சிலர்.... ஒரு நாள் வணிகரை நிப்பட்டி...
ஏம்ப்பா.. கொஞ்ச நில்லு, என்னாதுப்பா இது ஒரு நாள் கிழக்கா போற ஒரு நாள் மேற்கா... ஒரு உடனே திருபும்ற... ஒரு நாள் ரொம்ப நேரமாகியும் காணல... ஒரு நாள் வேகமா போற.. ஒரு நாள் மெதுவாக போற... ஒன்னும் விளங்கலயே... என்னாச்சு...
முன்ன மதிரி இல்லங்க.. இப்ப இந்த கழுதையோட உதவி தேவைப்படுகிற...
கட்டாயத்தில் இருக்கேன்.. நான் போ சொல்ற இடத்துக்கெல்லாம் இதை போக சொன்னேன்....  நான் சொல்ற மாதிரி போ சொன்னேன்.... ஆனா இது கேட்கல...."
அப்ப என்ன பண்ண???
அதுக்காக விட்டுட முடியாதுங்களே.. நமக்கு வேலையாகணும்... அதே சமயத்துல கழுதை கூட எல்லாம் மல்லுகட்ட முடியாது... ஏன்னா அது கழுதை.. அதுக்கு சொன்னாலும் வெளங்காது...
அதனால... நான் கொஞ்சம் மாறிகிட்டேன்... அது கிழக்கே போனா,... நான் அங்க இருக்கிற வேலைய முடிச்சுக்குறேன்.. மேற்கே போனா,... நான் அங்க இருக்கிற வேலைய முடிச்சுக்குறேன் அது வேகமாக போனாலும் மெதுவாக போனாலும் பழகி கிட்டேன்...
கழுதைக்கும் இப்ப பிரச்சினை இல்ல .. நமக்கும் இப்ப பிரச்சினை இல்ல.. வாழ்க்கை நிம்மதியா போகுது"...
இதே போல் நாம் வாழ்க்கையும் நிம்மதியாக போக வேண்டுமானல்....
*சில பல கழுதைகளுடன் அட்ஜஸ்ட் செய்ய பழகிக்க வேண்டும்...*
*வாழ்க்கையில், வீட்டில்,     அலுவலகத்தில், நீண்ட பயணங்களில்,  இப்படி நிறைய கழுதைகளுடன் அன்றாடம் பயணம் மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்...*
அதற்காக கழுதைகளுடன் நாம் மல்லுகட்ட முடியாது...
அவிங்களுக்கும் சொன்னாலும் புரியாது...
அதனால் நாம கொஞ்சம் அட்ஜஸ்ட்  செய்து கொண்டால் நம்ம வேலையும் நடக்கும்..

  • வாழ்க்கையும் நிம்மதியா இருக்கும்!!

No comments: