Monday, March 26, 2018

ரிசர்வேசன் ( எ ) இட ஒதுக்கீடு : பாகம் - 15

காங்கிரசிலிருந்த டாட்டா, பிர்லா போன்ற கொள்ளைகாரங்க இந்ந ஸ்டேட் சோசலிசத்திற்கு எதிர்ப்பு தெரிவிச்சாங்க. அவர்கள் காங்கிரசிடம், ''அம்பேத்கருக்கு அரசியல் அமைப்பு சட்டம் எழுதுற உரிமையை கொடுத்தா அவ்வளவுதான். நாம சுடுகாட்டுக்குதான் போகணும். ஆக எக்காரணத்தைக் கொண்டும் அம்பேத்கர் தேர்தலில் ஜெயிக்க கூடாது'' என்றதுமின்றி, திட்டமிட்டு பாபாசாகேப்பையும், அவரது கட்சியையும் முழுமையா தோற்கடிக்கிறாங்க. எந்த அளவிற்கென்றால் பாபாசாகேப் தவிர அனைவருக்கும் டெபாசிட் கூட கிடைக்கலை. சட்டம் எழுதணும்னா பாபாசாகேப் ஜெயிச்சே ஆகணும். இப்படிப்பட்ட நேரத்தில்தான் இப்பொழுதுருக்கிற பங்களாதேசின்  s.c,  முஸ்லிம் இரண்டு பேரும் சேர்ந்து ஜெயித்த வந்த இடத்தை ராஜினாமா பண்ணி, அந்த இடத்தில் பாபாசாகேப்பை நிறுத்தி, ஜெயிக்க வைத்து பார்லிமெண்ட் அனுப்பினார்கள். பார்லிமெண்டில் இப்பொழுது 28 S.c., S.T. வந்திருந்தாங்க. அதில் 28ல் 26 காங்கிரஸ் கட்சி, 2 பேர் காங்கிரசல்லாதோர். அதாவது முஸ்லிம் லீக் கட்சியிலிருந்து ஒருவர் மண்டல், இன்னொருவர் பாபாசாகேப். பார்லிமெண்ட்டில் நடந்த முக்கிய விவாதமே ''இட ஒதுக்கீடு இருக்கணுமா? வேண்டாமா? என்பதுதான். அப்பொழுது காங்கிரசிலிருந்த 26 பட்டியலினத்தோர் ''அரசியலில் இட ஒதுக்கீடு இருக்கட்டும், தனித்தொகுதியும் இருக்கட்டும். ஆனா வேலைவாய்ப்பு, கல்வியில் ரிசர்வேசன் கூடாது''. என்ன காரணத்திற்கு இதைச் சொல்கிறார்கள்? காங்கிரசின் இந்த நிலைப்பாடு நல்லதா? கெட்டதா? கெட்டது என்றால் எப்படி கெட்டது? உதாரணத்திற்கு இப்ப இட ஒதுக்கீட்டால் வேலைக்கு வந்த அரசு ஊழியர்கள் எல்லாம் குடும்பம், குட்டி, வீடு, நிலம், கார் என செட்டிலாயிட்டாங்க. இதனால சமுதாயத்திற்கு என்ன லாபம்? கொஞ்சம் சிந்திச்சி பதில் சொல்லுங்க.
வேலை, கல்வியில் இட ஒதுக்கீடை காங்கிரஸ் எதிர்க்க காரணம் ''அவனுக்கு அரசாங்க வேலை கிடைச்சா நமக்கு எடுபிடி வேலை செய்ய ஆள் கிடைக்க மாட்டான்'' என்பதுதான். ஆனால் பாபாசாகேப்போ, ''படித்த ஊழியர்கள் என் போலவே சுதந்திரமாக சிந்தித்து, என் போலவே மக்களுக்காய் பாடுபடுவர்'' என நினைக்கிறார். இந்த அரசு ஊழியர்களின் யோக்கியதை என்னவென்று தெரிந்தும், அவர் என்னவோ நல்ல விதமாகவே நினைக்கிறார். காங்கிரஸார் இவங்களுக்கு இட ஒதுக்கீடு  தோல்வியடையச் செய்ய பிளான் பண்ணினார்கள். ஆனால் பாபாசாகேப் ''அரசியல் இட ஒதுக்கீட்டை விட கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வேணும்'' என்பதில் உறுதியாய் நின்றாலும் எதிர்த்து நின்ற காங்கிரசின் 26 பேருக்கு முன் வெறும் 2 பேரின ஆதரவு என்பதால் அவங்க பக்கம்தான் பாஸாச்சி. காங்கிரசின் 26 எஸ்.சி.யும் பாபாசாகேப்பை எதிர்த்துதான் வேலை செய்தார்கள். Including பாபு ஜெகஜீவன்ராம். இப்படி பாபாசாகேப்பை முறியடித்ததால் அவர் பாராளுமன்றத்தின் வெளியே அநேக போராட்டங்கள் செய்கிறார். அதனால் காங்கிரசார் ஒரு முடிவெடுக்கிறாங்க. ''இவன் பார்லிமென்ட்டில் இருந்தால்தானே திமிர்தனம் செய்வான். இவனை பார்லிமென்ட்டை விட்டு எடுத்திடலாம்''. எனவே பாபாசாகேப் ஜெயித்து வந்த இப்போதைய பங்களாதேஷ் ''குல்நார் - ஜெய்சூர்'' என்ற இடத்தை பாகிஸ்தான் பிரிவினையில் அதோடு இணைச்சிடுறாங்க. ஆனால் அந்த தொகுதியில் அதிகமாய் இருந்தது புத்த மதமும், இந்து மதமும்தான். பிரிச்ச காரணம் பாபாசாகேப்பை வளர விடக்கூடாது. அந்த மக்களும் வளர கூடாது என்பதுதான். இப்போ பாபாசாகேப் எந்த பாராளுமன்றம் போக வேண்டும்? நிச்சயமாக பாகிஸ்தான் பார்லிமென்டில்தான்.  அங்கே போய் செய்ய வேண்டியது என்ன? அதனால் போக விரும்பாமல் ராஜினாமா செய்து வெளியே வருகிறார்.
பாபாசாகேப்பிற்கு உச்சக்கட்ட நெருக்கடி காலம் இதுதான். ஜெயித்த தொகுதி பாகிஸ்தான் போயிடிச்சி. இன்னும் கொஞ்ச நாளில் அரசியல் அமைப்புசட்டம் வெளி வந்தே தீரும். அது எப்படி இருக்கும்ன்னா நிச்சயம் மனுஸ்மிருதியாகத்தான் இருக்கும். அதனால் அவரால் சும்மா இருக்க முடியலை. இலண்டனுக்கு போய் அங்குள்ள பிரதமர், பெரிய அதிகாரிகளை சந்திக்க முடிவெடுக்கிறார். பொதுவாக பாபாசாகேப் கப்பலில்  வாரகணக்கில் பயணம் செய்வார். காரணம் பட்ஜெட் காரணமாக. ஆனால் இந்த அவசர பயணத்தில் அது போல் சென்று காலவிரையமாகிட கூடாதென்று பிளைட்டில் பயணம் செய்ய முடிவெடுக்கிறார். அதற்கு பணம் தேவை. அப்பொழுது போக, வரவுமே ரூ. 2000தான் ஆகும். ஆனால் அக்காலத்தில் அது மிகப்பெரிய தொகை. அதை வசூல் பண்ணவும் கஷ்டம். ஆனால் அந்த நேரத்தில்தான் சாதாரண எளிய மக்கள் பணத்தை வசூல் செய்து கொடுக்கிறார்கள். பெல்காம் என்ற இடத்திலுள்ள பெண்கள் தங்கள் தாலியை விற்று அந்த பணத்தை பாபாசாகேப்பிற்கு கொடுக்கிறார்கள். அந்த அளவிற்கு பாபாசாகேப் மீது அளவுகடந்த நம்பிக்கை வைத்திருந்தனர். ஏன்னா நம்ம உரிமைக்காய் போராட பாபாசாகேப்பை இலண்டன் அனுப்பியாக வேண்டும் என்பதற்காக. பாபாசாகேப் இலண்டன் சென்று பேசியது என்ன?
- தொடரும்

No comments: