Sunday, March 18, 2018

சில சூப்பர் இயற்கை மருத்துவ டிப்ஸ்...

*படிக்கும்* *குழந்தைகளுக்கு ஞாபக சக்தி வளர*
*பரீட்சை சமயத்தில் எல்லாக் குழந்தைகளுக்கும் உள்ள பெரிய* *பிரச்சினை, எத்தனை முறை படித்திருந்தாலும் மனதில் பதியாமல் மறந்துவிடும். இந்தக் குறை நீங்க அரிசி, திப்பிலியை லேசாக* *வறுத்து, நைஸாக* *அரைத்து வெறும் வயிற்றில் தேனில் மூன்று சிட்டிகை கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால்* *ஞாபகசக்தி ஏற்படும்.*
*பட்டு பாதங்களின் பாதுகாப்பு*
*வெய்யில் காலத்தில் குளிர்ந்த தண்ணீரில் உப்பைக் கலந்து அதில் பாதங்கள் முழ்கி இருக்கும்படி 10 நிமிடங்கள் வரை வைத்திருக்க வேண்டும். குளிர் நேரத்தில் பாதம் அதிக குளிர்ச்சியாக* *உணர்ந்தால், இரவில் நல்லெண்ணெய் தேய்த்து விட்டு தூங்க வேண்டும். காலில் ஏற்படும் பித்த வெடிப்புகளுக்கு இரவு படுக்கப்போகும் போது இலுப்பை எண்ணெய் அல்லது வேப்ப எண்ணெய் தடவினால் பித்த வெடிப்புகள் குணமாகும்.*
*எண்ணெய் பட்டு கொப்பளம் ஆகாமலிருக்க...*
*சமையல் செய்யும் போது கொதிக்கும் எண்ணெய் உடலில் பட்டு விட்டால் உடனே அந்த இடத்தில் தேனை அல்லது கல்லுப்பு சிறிது தடவினால் கொப்புளம் ஏற்படாது.*
*கால் ஆணி நீங்க ...*
*இஞ்சிச் சாற்றுடன் சிறிதளவு நீர்த்த சுண்ணாம்பைக் கலந்து கால் ஆணிக்கு மருந்தாக போட்டு வந்தால் கால் ஆணி நீங்கி விடும்.*
*5 கிராம் மஞ்சள், 5 கிராம் வசம்பு, கைப்பிடி அளவு மருதாணி இலைகள் ஆகியவற்றை தண்ணீர் விட்டு அரைத்து, கால் ஆணி உள்ள இடத்தில் அடைபோல் கனமாக வைத்து மேலே ஒரு வெற்றிலையை வைத்து, துணியினால் இறுகக் கட்டி விட வேண்டும். படுக்கும் முன்பு இதை செய்ய வேண்டும். தொடர்ந்து அரை மண்டலம் (20 நாட்கள்) வரை இவ்விதம் செய்தால் கால் ஆணி இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும*
*உடல் சூட்டை தணிக்க...*
*சிறிது தண்ணீரில் சந்தனத்தை நன்றாக குழைத்து தடவினால் உடல் சூடு தணியும். மருதாணியை அரைத்து உள்ளங்கை, உள்ளங்கால்களில் பூசினால் சூடு தணியும்*.
*இரத்த அழுத்தம்*
*இரத்த அழுத்தம்* *உள்ளவர்கள் உப்பின் அளவை குறைக்க வேண்டும். வற்றல், ஊறுகாய், நெய், இறைச்சி,*
*முட்டையின் மஞ்சள் கரு, தேங்காய் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.*
*ஒரு டம்ளர் பாலில் 25 கிராம் பூண்டுகளை தட்டிப் போட்டு, வேக வைத்து, ஆற வைத்து, வடிகட்டி குடிக்க வேண்டும்.*
*செம்பருத்திப் பூவில் கஷாயம் செய்து இத்துடன் தேன் கலந்து குடிக்க வேண்டும்.*
*தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடித்து வந்தால் இரத்த அழுத்தம் குணமாகும்.*
*சேற்றுப்புண் குணமாக...*
*சேற்றுப் புண் மீது இரண்டு நாட்கள் பாம் ஆயில் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். மீண்டும் சேற்றுப் புண் வராது.*
*சமையலறையில் சூடுபட்டு கொள்ளும் போது...*
*சமையல் வேலை செய்யும் போது சில சமயம் கவனக் குறைவால் சூடுபட்டுக் கொள்ள நேரிடும். இதற்கு பர்னால், அது, இது என்று தேடி ஓட வேண்டியதில்லை. கைக்கு அருகிலேயே இருக்கும் பொடி (தூள்) உப்பையும், நெய்யையும் சம அளவு எடுத்து குழைத்து சூடுபட்ட இடத்தில் தடவினால் கொப்புளங்கள் வராது.*
*ஆஸ்துமா*
*ஆஸ்துமா நோயாளிகளுக்குத் தேன் மிக நல்ல மருந்து*
*ஆடாதொடை இலை ஐந்தை, 10 மிளகுடன் எடுத்து கஷாயம் செய்து சாப்பிட்டால் ஆஸ்துமா குணமாகும்.*
*ஆடாதொடை இலைகளை நிழலில் காய வைத்து பொடி பண்ணி வைத்துக் கொண்டும் சாப்பிட்டு வரலாம்.*
*கண்*
*தினமும் 3 தடவைகளாவது கண்களைக் கழுவ வேண்டும்.*
*பொன்னாங்கண்ணிக் கீரை, முருங்கைக் கீரையை தினமும் சாப்பிட்டு வந்தால், கண் பார்வை நன்றாக இருக்கும்.

No comments: