Sunday, March 18, 2018

வாழ்க்கை சிறக்க சில நல் வார்த்தைகள்...

இந்த உலகத்தில் எல்லா விஷயத்துக்கும் விளக்கம் இருக்கு ஆனா அதை தேடத்தான் நமக்கு நேரம் இல்ல...

வாழ்க்கை என்பது செதுக்கப்படாத கற்கள், எப்படி வாழ வேண்டும் என்பதை நீயே செதுக்கி விடு...

நற்பண்புகள் என்னும் அழகே ஒருவரை அன்பானவராகவும், தனித்தன்மை படைத்தவராகவும், மறக்க முடியாதவராகவும் மாற்றுகிறது...

வாழ்வதற்கு, செலவு மிகவும் குறைவுதான்... அடுத்தவர்களைப்போல, வாழ நினைப்பதுதான் செலவை அதிகரிக்கிறது...

எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே, எவ்விதம் முடியும், இதுதான் பாதை, இதுதான் பயணம், என்பது யாருக்கும் தெரியாது... பாதையெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும்...

புத்தகங்களும், நண்பர்களும் குறைவாக இருந்தாலும் சிறந்ததாக இருக்க வேண்டும்...

எளிய முறையில் சரணாகதி விளக்கம்...
மாட்டு வண்டிக்கு உயிர் இல்லை மாட்டுக்கு உயிர், அறிவு இரண்டும் உண்டு ஆனால் வண்டிக்காரன் உயிரில்லாத வண்டியை. அறிவுள்ள மாட்டுடன் பூட்டி. எந்த இடம் செல்ல வேண்டும். என்பதை தீர்மானித்து, வண்டியை செலுத்துவான். எவ்வளவு தூரம். எவ்வளவு நேரம். எவ்வளவு பாரம்.

அனைத்தையும் தீர்மானிப்பவன் வண்டிக்காரன் மட்டுமே... அறிவிருந்தும்... சுமப்பது தானாக இருந்தாலும் மாட்டால் ஒன்றும் செய்ய இயலாது. அதுபோல. உடம்பு என்ற ஜட வண்டியை ஆத்மா, உயிர் என்ற மாட்டுடன் பூட்டி இறைவன் என்ற வண்டிக்காரன் ஓட்டுகிறான். அவனே தீர்மானிப்பவன்... அவன் இயக்குவான்... மனிதன் இயங்குகிறான்...

👉 *எவ்வளவு காலம்.. 👉எவ்வளவு நேரம்.. 👉எவ்வளவு பாரம்.. தீர்மானிப்பது  இறைவனே* இதுதான் நமக்காக இறைவன் போட்டிருக்கும் *டிசைன்..*! இதுதான் இறைவன் நமக்கு தந்திருக்கும்* அசைன்மென்ட்*..! இதை உணர்ந்தவனுக்கு துயரம் இல்லை..* இதை* *உணராதவனுக்கு* *அமைதி இல்லை*. இருக்கும் காலங்களில்* *இனியது செய்வோமே*!

வாழ்வில் சாதிக்கவேண்டுமெனில் வேறு எதுவுமே தேவையில்லை. முழுமையான நம்பிக்கை, தூய்மையான அன்பு, முயற்சி மட்டுமே போதும். வாழ்க்கை ஆயிரம் காரணங்களை நீங்கள் அழுவதற்காகத் தரும்போது, நீங்கள் புன்னகைக்க பல காரணங்களை வாழ்க்கைக்குக் கொடுங்கள்.

"வினைகளில் நல்வினை, தீவினை"

செயல்களிலே(வினைகளில்) நல்வினை, தீவினை எனத் தனித்தனியே இல்லை. செய்பவன் நோக்கம், செய்யும் முறை, செய்யப்படுபவனிடத்து உண்டாகும் விளைவு - இவற்றை வைத்தே நல்வினை-தீவினை என முடிவு செய்யப்படும்

பிறர் செய்த தீமைகளை நினைத்துக் கோபம் கொள்ளாதிருத்தல் வேண்டும், பிறர் தமக்குச் செய்த நன்மையைப் பெரிதாக மனதில் வைத்துக் கொள்ள வேண்டும், தம்மிடம் தோன்றும் பெரிய அளவிலான கோபத்தை எப்பொழுதும் விட்டுவிட வேண்டும், செல்வத்தைக் கெடுக்கும் செயலை செய்யாமல் அழித்துவிட வேண்டும்...

No comments: