Friday, December 14, 2018

போதையில் தமிழினம்...

முனைவர் காசி.கன

*1.அரசியல் போதை*

தான் யார்?
தனது பெருமை மிகு வரலாறு என்ன ?
தன்னை ஆண்டவர்கள் எப்படி பட்டவர்கள் ?
தன்னை ஆள்பவன் யாராக இருக்க வேண்டும் ?

என்று எந்த வரலாற்று உண்மையும் தெரியாமல் கிணற்றுத் தவளையாய்,சொரனையற்ற ஈஜிப்ட் மம்மியாய்...
60 ஆண்டு முதல் இன்று வரை...
பைசாவுக்கு ப்ரயோசனமில்லாத அரசியல் தலைவர்களின் சூழ்ச்சிக்கு பலியான வாத்துக் கூட்டமாய்,ஆட்டு மந்தையாய் தான் மட்டும் வெட்டுப்படாமல் தனது அடுத்தடுத்த வாரிசுகளையும் அந்த சூழ்ச்சியில் சிக்க வைத்து குடும்பம் குடும்பமாய் கொத்தடிமையாய்... இன்று வரை அரசியல் போதையில்...

*2.ரசிக போதையில்*

தன்னால் தட்டிக் கேட்க முடியாத சமூக அவலங்களை...
திரைப்படங்களில்...
ஓர் இயக்குனர் ஒரு கதாநாயகனை வைத்து திரைப்படம் மற்றும் உணர்ச்சி பொங்கும் வசண கர்த்தாக்களை வைத்து வியாபார தந்திர சூழ்ச்சி செய்து பணம் ... பெரும் பணம் ஈட்டி வரும் ஒரு வியாபார மழையில் நனையும் பொது சனமாகிய தமிழினம் என்னவோ இது போன்ற திரைப்படங்கள்தான் சமூக மாற்றத்தை ஏற்ப்படுத்தும் என்றும்,அதில் நடித்த கதாநாயகன் தான் வந்து தனக்கு தர்மத்தை நிலை நாட்டுவான் என்றும்...

ஒரு வித ரசிக புகழ் போதையில்...இன்றும் ஆட்டு மந்தையாய்...
( தமிழனின் புத்தி கூர்மையை மறந்து ...)

*3.கல்வி போதை*

மரபுக் கல்வியில் சிறந்து விளங்கியவன்...இன்று மக்கலே மக்கு கல்வியின் கோரப்பிடியில் சொத்துக்களை விற்று கடனாளியாக,ஏமாளியாக அலைந்து...மதிப்பெண் எனும் ஓட்டப்பந்தையத்தில் ஓர் வாத்து கூட்டமாய்...
*அதிக மதிப்பெண்...அதிக சம்பளம்*
என்ற ஏமாற்று சொற்களின் போதையில்...

உச்ச பட்ச போதை இம்மூன்றும்...
இன்னும் போதைகள் தொடரும்...

முனைவர் காசி.கன

No comments: