Friday, December 14, 2018

நல்லது கெட்டது என்பதைப் பற்றியோ நெறிமுறைகளைப் பற்றியோ கவலைப்படாதே...

நல்லது கெட்டது என்பதைப் பற்றியோ நெறிமுறைகளைப் பற்றியோ கருத்துக்களைப் பற்றியோ கவலைப்படாதே.

நல்லது உன்னுடைய உள் ஒளியை நிழலைப் போல தொடர்ந்து வரும். ஆகவே உன்னுடைய உள் ஒளியைப் பற்றி அக்கறை கொள். அதுதான் தியானம். அதே விதமாய் வாழ்வை வாழு. உனது கவனத்தை அதிக தீவிரமானதாக மாற்று. மேலும் மேலும் அதிக கவனமாக இரு.

உனக்கு நீயே ஒளியாக இரு என்பதே புத்தரின் இறுதி வார்த்தைகள் ஒளி இருளை போக்குவது போல அன்பு பயத்தை போக்கி விடும்.

நீ எதை செய்தாலும் எப்போதும் தன்னுணர்வுடன் உனது உள் ஒளியில் செய்.

உன்னிடம் ஒளி இருந்தால் அது பரவும், மற்றவர்களிடமும் அது செல்லும்.

உயரிய நிலையுடைய வெறுமை ஒளி போன்றது, அது உதிக்கும் சூரியன் போன்றது.

ஒளி பொருந்திய இதயத்தோடு இரு, காலடித்தடமும் ஒளி பெறும்.

*இறைவா!!!*

வருமானம் குறைவானாலும்... *வயிறாற உணவை  கொடு!*

வாழ்நாள் குறைவானாலும்... *நோயில்லா உடலைக் கொடு!*

வசதி குறைவானாலும்... *அன்பான உறவைக் கொடு!*

உறவுகள் குறைவானாலும்... *உயிர்தரும் நட்பைக் கொடு!*

படிப்பு குறைவானாலும்... *நடிப்பில்லா தொழிலைக் கொடு!*

பணம்குறைவானாலும்... *பக்தி செலுத்தும் மனதைக் கொடு!*

பிறர் வலியை... *தன்வலியாய் உணரும் உணர்வைக் கொடு!*

மலைபோல் பணம் இருந்தாலும்... *தர்மம் செய்யும் சிந்தை கொடு!*

வாழ்வில் பல துணைகள் இருந்தாலும்... *உயிர்துணையாய் இறைவா நீயே  வருவாய்!!!*

No comments: