பெரும்பாலான மக்கள் விவரமின்மை காரணமாக அந்நிய செலாவணி சந்தையிலிருந்து விலகியே இருக்கின்றனர். புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் மூலம் ஒரு வர்த்தகர் தனியாக எந்த வித தடையும் இன்றி சந்தையில் வியாபாரத்தில் பங்கு கொள்ள முடியும்.
எனினும் சந்தை அபாயங்கள் காரணமாக அந்நிய செலாவணிச் சந்தையில் வர்த்தகம் செய்வது அவ்வளவு எளிதான காரியமில்லை. இதோ இந்த சந்தையைப் பற்றிய பத்து எளிய உண்மைகள் உங்களுக்காக:
1. அந்நிய செலாவணி சந்தை உலகிலேயே மிகவும் பெரிய மற்றும் மிகவும் நெகிழ்வான நிதி சார்ந்த சந்தையாகும்.
2. அந்நிய செலாவணிச் சந்தை வாரத்தில் 5 நாட்களும் நாளில் 24 மணி நேரமும் செயல்படும். இது ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்குத் துவங்கி (இந்திய நேரப்படி இரவு 10 மணி) வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு முடியும் (இந்திய நேரப்படி இரவு 10 மணி)
3. அந்நிய செலாவணி சந்தை சுமார் 3.98 ட்ரில்லியன் டாலர்களுக்கும் அதிகமான மதிப்புள்ள பரிவர்த்தனைகளை நாள் தோறும் கையாளுகிறது.
4. இன்டர்நெட் வசதி வைத்துள்ள எந்த ஒரு நபரும் இந்த வணிகத்தில் ஈடுபடமுடியும்.
5. அந்நிய செலாவணி மதிப்பு உலகளாவிய தேவை மற்றும் அதற்கேற்ற பண இருப்பு ஆகியவற்றைப் பொறுத்து அமையும்.
6. உலகின் பெரிய அந்நிய செலாவணிகளில் அமெரிக்க டாலர், யூரோ, ஜப்பான் யென், ஸ்டேர்லிங் பவுண்ட், சுவிசர்லாந்து பிரான்க், கனடா டாலர், ஆஸ்திரேலிய டாலர் மற்றும் நியுசிலாந்து டாலர் ஆகியவை அடங்கும்.
7. இந்த வர்த்தகத்தில் ஒரே நேரத்தில் ஒரு நாணயத்தை அல்லது செலாவணியை வாங்கவும் மற்றொன்றை விற்கவும் செய்யலாம். உண்மையான செலாவணி நேரடியாக வர்த்தகத்திற்கு உள்ளாக்கப்படுவதில்லை. மாறாக ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு மாற்றப்படுகிறது.
8. வர்த்தகம் செய்யப்படும் ஜோடி செலாவனிகளில் முதல் செலாவணி அடிப்படை செலாவணி (base currency ) எனவும் இரண்டாவது செலாவணி கேட்பு செலாவணி (quoted currency )
9. பிப் எனப்படுவது செலவாணி மதிப்பில் ஏற்பட்டுள்ள குறைந்தபட்ச மாறுதலைக் குறிக்கும். உதாரணமாக டாலர் மற்றும் யூரோ இடையே உள்ள மதிப்பில் 1 பிப் எனப்படுவது 1.2345 என்ற அளவிலிருந்து 1.2346 என்று சிறிதளவு மாறுவதைக் குறிக்கும்.
10. புள்ளி விலை அல்லது கொட்டேஷன் எனப்படுவது ஒரு செலாவணிக்கு தொடர்பான மற்றொரு செலாவணியின் மதிப்பினைக் குறிக்கும்.
No comments:
Post a Comment