Monday, May 13, 2019

கவனி, புறப்படு…

ஒரு மாத இன்பச் சுற்றுலாவை இனிதே அனுபவிக்கச் சென்றனர் அப்பெற்றோர். அவர்கள் போகுமுன் தங்கள் பிள்ளைகளை உறவினரிடம் கொண்டு போய் ஒப்படைத்தனர்.

சுற்றுலா முடிந்து வரும்வழியில், ஒரு பகற்காப்பு மையத்தில் இருந்து புகை கிளம்பிக்கொண்டிருந்ததை அவர்கள் பார்த்தனர். தீயும் புகையும் மளமளவென பரவும் நிலையில் மேற்கூரை கீழே விழுந்துகொண்டிருந்தது. கணவர் மேற்கூரை வழியாகக் குதித்து அவர் அக்குழந்தைகளைக் காப்பாற்றி வெளியே கொண்டு வந்தார்.

‘இன்னும் இருவர் அங்கே உண்டு’ என்றது ஒரு குழந்தை. மீண்டும் உள்ளே போக எண்ணிய கணவனை மனைவி தடுத்தாள். ஆனால் அவர் ஓடிச்சென்று அவர்களையும் மீட்டார். அது வேறு யாருமல்ல. அவர்களுடைய சொந்த மக்கள். ஆம். உறவினர் பட்டணம் சென்றபோது அவர் அக்குழந்தைகளைக் காப்பகத்தில் விட்டுச் சென்றார்!

விபத்துகள் நேரும் போது வெறும் பார்வையாளராகக் கைகட்டி நிற்காதீர்கள். ஒருவேளை நமக்கு வேண்டப்பட்டவர்களே விபத்தில் சிக்கியிருக்க கூடும்.

“இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்” (மத் 5:7).

No comments: