ஒரு கிறிஸ்துப் பிறப்பு நாளன்று, பகல் வேளையில் இரண்டு வெள்ளைக்காரப் பெண்மணிகள் குழந்தை இயேசுவைக் காண ஆலயத்திற்குச் சென்றார்கள். அவர்கள் இருவரும் ஆலயத்திற்குள்ளே சென்று, குடிலில் இருந்த குழந்தை இயேசுவைக் கண்டபோது ஒரு நிமிடம் அதிர்ந்துபோனார்கள். ஏனென்றால், குடிலில் வழக்காக இருக்கும் ‘வெள்ளைநிற இயேசு’ சுரூபம் இல்லை. மாறாக கறுப்பினத்தைச் சார்ந்த, பிறந்து ஓரிரு நாட்களேயான குழந்தை கையையும் காலையும் மேலும் கீழுமாய் ஆட்டிக்கொண்டிருந்தது.
அப்பொழுது அந்த இரண்டு வெள்ளைக்காரப் பெண்மணிகளில் ஒருவர், “குழந்தை இயேசு வெள்ளையாக இருந்தால்தான் நன்றாக இருக்கும். இப்படிக் கறுப்பாக இருந்தால் நன்றாகவே இருக்கின்றது” என்று சொல்லி முகத்தைச் சுழித்துக்கொண்டார். இன்னொரு பெண்மணியோ, “ஆமாம், நீ சொல்வதுதான் சரி. குழந்தை இயேசு வெள்ளை நிறத்தில்தான் பார்ப்பதற்கு இலட்சணமாக இருக்கும். இப்படிக் கறுப்பாக இருந்தால் கும்பிடுவதற்கே எப்படிக் கும்பிடுவதற்கு மனம்வரும்” என்றார். பின்னர் அவர்கள் இருவரும் ஆலயப் பணியாளரைக் கூப்பிட்டு, குடிலில் இருப்பதைச் சுட்டிக்காட்டினர். அவரோ ஒன்றும் புரியாதவராய் காவல்துறையினைத் தொடர்புகொண்டு, நடந்த எல்லாவற்றையும் எடுத்துச் சொல்ல, அவர்கள் வந்து குடிலில் இருந்த கறுப்பினத்துக் குழந்தையை எடுத்துக்கொண்டு போனார்கள். அதன்பிறகு ஆலயப்பணியாளர் ‘வெள்ளைநிறக் குழந்தை இயேசுவைக்’ குடிலில் வைக்க, அந்த இரண்டு வெள்ளைக்காரப் பெண்களுக்கும் ‘வெள்ளைநிற குழந்தை இயேசு’ சுரூபத்திற்கு முன்பாக விழுந்து விழுந்து வணங்கிவிட்டு மிகுந்த மகிழ்ச்சியோடு தங்களுடைய இல்லங்களுக்குச் சென்றார்கள்.
எல்ஃபரீட் பெக்கர் (Elfried Becker) என்ற எழுத்தாளர் குறிப்பிடுகின்ற இந்த நிகழ்வு நிறம், இனம், குலம், வர்க்கம் போன்றவற்றின் அடிப்படையின் மனிதர்களைப் பிரித்தும் தீட்டாகக் கருதும் அவலநிலையை வெட்ட வெளிச்சமாக்குகின்றது. இத்தகைய பின்னணியில் கடவுள் படைத்த அனைத்தும் தூயது/நல்லது என்ற உண்மையை இந்த உலகம் எப்பொழுது உணரும்...
No comments:
Post a Comment