Sunday, March 15, 2020

மூலிகை மருத்துவம்

குடல்புண் குணமாக
பருத்தி பால் குடித்தால் குடல் புண் மற்றும் பெண்களுக்கு வெள்ளைப்படுதல் நீங்கும்.

தோல் வியாதி குணமாக 
முற்றிய பீர்க்கங்காயின் பிஞ்சு பகுதியை தேய்த்துக் குளிக்க பலவகை தோல் வியாதிகள் குணமாகும்.

சளி மற்றும் இருமல் நீங்க
வெற்றிலை மிளகு மற்றும் பூண்டு ஆகியவற்றை அரைத்து கொதிக்க வைத்து ஆறிய பிறகு பருகினால் சளி இருமல் நீங்கும்.

முகம் பளபளப்பாக மாற
கசகசாவை எருமை தயிரில் அரைத்து தினசரி இரவு தடவி வந்தால் முகம் பளபளப்பாக மாறும்.

கண் பார்வை கூர்மையாக
நெல்லிக்காய்ச் சாறு குடித்து வந்தால் கண் பார்வை கூர்மையாகும்.

செரிமான கோளாறு நீங்க
புதினா சாறுடன் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் செரிமானக் கோளாறு நீங்கும்.

கட்டிகள் உடைய
சேப்பங்கிழங்கை அரைத்து உடலில் கட்டிகள் உள்ள இடத்தில் வைத்து கட்ட கட்டிகள் உடையும்.

புண்கள் குணமாக
சேப்பங்கிழங்கை அரைத்து புண்கள் மேல் தடவ புண்கள் குணமாகும்.

பல் கூச்சம் நீங்க
காலை, இரவு திரிபாலா சூரணம் (கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்) பவுடரை கொண்டு தேய்த்து வர பல் கூச்சம் நீங்கும்.

பல் சொத்தை வலி நீங்க
இரவு படுக்கும் முன் மஞ்சள் தூளை சொத்தை துவாரத்தில் வைத்து காலையில் கழுவி வர பல்வலி நீங்கும்.

சிறுநீரக கற்கள் கரைய
நாவல் பழத்தினை சாப்பிடுவதுடன் அதன் விதையை உலர வைத்து பொடி செய்து தயிருடன் சேர்த்து சாப்பிட்டால் கற்கள் கரையும்.

No comments: