Sunday, March 15, 2020

அதிகமான தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மை தீமைகள்

சுவை மிகுந்த தேவ பானத்தை (அமிர்தம்)போன்றது தண்ணீர்.

அதிகமான தண்ணீர் குடிப்பதால் தண்ணீர் பற்றாக்குறை உடலில் ஏற்படாது மேலும் இரத்த ஓட்டம் மிகவும் சீராகவும் வேகமாகவும் இருக்கும்.

காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பதால் உடலில் தேங்கியுள்ள நச்சுக் கழிவுகள் எளிதாக வெளியேறிவிடும்.

தண்ணீர் மூட்டுகளுக்கு இடையே வலுக்கும் தன்மையை ஏற்படுத்துவதால் மூட்டு வலி வராமல் தடுக்கும்.

காலையில் எழுந்தவுடன் குடிக்கும் இரண்டு டம்ளர் தண்ணீர் வயிற்றை சுத்தம் செய்வதுடன் தோலினை நீரேற்றம் உடையதாக இருக்க செய்யும்.

தண்ணீர் குடிப்பதால் உடலில் அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சல் வராமல் தடுக்கும்.

மனித மூளை 90 சதவீதம் தண்ணீரால் நிரம்பி இருப்பதால் தண்ணீர் குடிக்காமல் இருப்பது தலைவலியை ஏற்படுத்தும்.

அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பதால் உடல் செல்களை பழுதடைய செய்யும் அதனால் உடல் செல்களின் வாழ்நாள் குறையும்.

அதிகமான தண்ணீர் குடிப்பதால் நீரை வெளியேற்ற சிறுநீரகம் அதிகம் இயங்குவதால் சிறுநீரகம் விரைவில் பழுதடையும்.

பைபாஸ் அறுவை சிகிச்சை செய்தவர்கள் தண்ணீர் அதிகம் குடித்தால் அது உடலில் பாதிப்பை ஏற்படுத்தும்.

சுவையான சூடான உணவை உண்டவுடன் குளிர்ந்த நீர் குடித்தால் அது செரிமானக் கோளாறை ஏற்படுத்தும்.

அதிக சூடான அல்லது அதிக குளிர்ச்சியான தண்ணீரை குடிப்பதால் பற்களின் வேர்கள் விரைவில் பழுதடையும்.

No comments: