Sunday, March 15, 2020

அறுசுவை உணவை அறிந்துகொள்வோம்...

அறுசுவை எனப்படுவது நாக்கு அறியக்கூடிய ஆறு வகை சுவைகளாகும்.

பழங்கால இந்திய மருத்துவங்களும், ஆயுர்வேதமும் சுவைகளை ஆறு வகைகளாகப் பிரிக்கின்றன.

அவை துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியனவாகும். 

உடலின் ஆறு முக்கிய தாதுக்களுடன் இச்சுவைகள் சம்பந்தபடுகிறது.

உடல் வளர்ச்சியில் இச்சுவைகளின் பங்குகள் முக்கியம் என ஆயுர்வேதம் கூறுகிறது.

உடலானது இரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு முக்கிய தாதுக்களைக் கொண்டது என்பதனால் உடலை "யாக்கை" என்று கூறினர். 

இதில் ஏழாவது தாதுவான மூளை சரிவர இயங்க முதல் ஆறு தாதுக்கள் தகுந்த அளவில் இருத்தல் அவசியம். 

இந்த ஆறு தாதுக்களும், ஆறு சுவைகளுடன் கீழ்கண்டவாறு சம்பந்தப்பட்டுள்ளன.

இனிப்பு - உடலின் தசையை அதிகமாக வளர்க்க உதவுகிறது.

புளிப்பு - கொழுப்பினை வழங்குகின்றது. இரத்தக் குழாயிலுள்ள அழுக்கை நீக்குகிறது.

உறைப்பு - எலும்புகளை வளர்க்கின்றது. உடல் உஷ்ணம் மற்றும் உணர்ச்சிகளை கூட்டுகிறது.

உவர்ப்பு - உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது. ஞாபக சக்தியை அதிகரிக்கின்றது.

துவர்ப்பு - இரத்தத்தைப் பெருக்குகின்றது. உடலில் காயம் ஏற்படும் போது இரத்தத்தை உறையச் செய்கிறது.

கசப்பு - நரம்புகளை பலப்படுத்துகின்றது. வேண்டாத கிருமிகளை அழிக்கும் சக்தியை தருகின்றது.

இதனைக் கொண்டுதான் "உணவே மருந்து, மருந்தே உணவு" என்று சொல்வார்கள்.

No comments: