Sunday, March 15, 2020

ஏலக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

முகப் பருக்கள் நீங்குவது முதல் பல நன்மையான விடயங்கள் குறித்து ஏலக்காய் சாப்பிடுவதைப் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க...

ஏலக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மை தீமைகள் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க...

ஏலக்காயின் நற்குணம் உணவிற்கு சுவை ஏற்படுத்துவதுடன் நின்று விடுவது கிடையாது.

ஏலக்காய் சாப்பிடுவதால் கல்லடைப்பு, தொண்டை பிரச்சனை, TB மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனையிலிருந்து விடுதலை கிடைக்கும்.

இரவு தூங்கும் முன் ஏலக்காய் சாப்பிட்டால் நகப்பரு பிரச்சனைகள் நீங்கும். தோல் சார்ந்த பிரச்சனையிலிருந்து விடுதலை கிடைக்கும்.

அடிக்கடி வயிற்றுப் பிரச்சனைகளால் துன்பப்படுபவர்கள் ஒரு ஏலக்காயை வெறும் வயிற்றில் காலையில் சுடுதண்ணீரோடு உண்டு வந்தால் இந்த பிரச்சனை மாறும்.

அதிகமாக உழைத்தும் சிலபேர் தூக்கமில்லாமல் கஷ்டப்படுவார்கள். அவர்கள் இரவு தூங்கும் முன் ஒரு ஏலக்காயை சுடுதண்ணீரில் உண்டுவந்தால் நன்றாக உறக்கம் வரும்.

இரவில் குறட்டை விடும் பிரச்சினை உடையோர் ஒரு ஏலக்காயை சுடுதண்ணீரில் தூங்கும் முன் குடித்து வந்தால் இந்த பிரச்சனை மாறும்.

வாயுத்தொல்லை, அசிடிட்டி, மலச்சிக்கல், அடிக்கடி விக்கல் வருதல் போன்ற பிரச்சனைகளுக்கும் ஏலக்காய் ஒரு சிறந்த தீர்வாகும்.

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஏலக்காயை தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த தண்ணீரை வடிகட்டி தேனுடன் கலந்து சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும்.

உடல் நலிந்து  மற்றும் மெலிந்து இருப்பவர்கள் ஏலக்காயை அன்றாட உணவுடன் சேர்த்து உண்டு வந்தால் உடல் பருமன் கூடும். உடல் எடை கூடும்.

ஏலக்காய் நுரையீரலில் ரத்த ஓட்டத்தை செம்மைப்படுத்தும் அதனால் ஆஸ்துமா சளி தும்மல் போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் விடுதலை பெறலாம்.

No comments: